Advertisment

மணல் கும்பலால் பலியாகும் உயிர்கள்! -இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்

bagathsingh

sand

க்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், கொடி பிடித்துப் போராடினாலும், தமிழகம் முழுதும் மணல் திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமா? அது தொடர்பாக சச்சரவுகளும் அடிதடிகளும் உச்சபட்சமாக கொலைகளும் அரங்கேறி பொதுமக்களை திகிலில் ஆழ்த்தி வருகின்றன.

Advertisment

இப்படிப்பட்ட மணல் கும்பலால் தன் தம்பியைப் பறிகொடுத்து விட்டுக் கண்ணீருடன் நீதிகேட்கிறார் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான சிநேகா. அவரது கண்ணீர்க் குரலை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம்:

Advertisment

“என் பெயர் சிநேகா, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பள்ளிகொண்டான்தான் என் கிராமம். அப்பா எங்கள் பகுதியில் உள்ள தோப்புகளில் கூலி வேலை செய்கிறார். குடிபோதையில் அப்பா செய்த டார்ச்சரால் சில வருடங்களுக்கு முன் அம்மா தற்கொலை செய்து கொண்டார். அப்ப எனக்கு 10 வயசு. என் தம்பி நவீன்குமாருக்கு 5 வயசு. அதன்பிறகு அப்பாவைப் பிரிந்து பாட்டி வீட்டில் வளர்ந்தோம். எங்களுக்கு எல்லாமாக இருப்பது, 85 வயதான எங்கள் பாட்டி மட்டும்தான்.

sand

அவங

அவங்க கூலி வேலை செஞ்சு எங்களைப் படிக்க வச்சாங்க. நான் டிகிரி முடிச்சுட்டேன். என் தம்பி பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு பாலிடெக்னிக் போனான். பாதியில நிறுத்திட்டான். அதுக்குக் காரணம் மணல் திருட்டுதான். அதாவது, எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மணல் திருட்டு அதிகமாக நடக்கும். இரவு நேரங்களில் ஆற்றில் மணல் அள்ளி வரும்போது போலீசார் வந்தால் சொல்ல, எங்கள் பகுதியில் இருக்கும் மாணவர்களை, மணல் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்புக்கு நிறுத்துவாங்க. அதுக்காக சாப்பாடு வாங்கிக்கொடுத்து ரூ.50, 100-ன்னு பணமும் கொடுப் பாங்க. அப்படிப்பட்ட மாணவர்கள் தங்களை விட்டுப் போய்விடாமல் இருக்க, அவர்களைக் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக ஆக்கிடு வாங்க. இப்படி கெட்டுச் சீரழிஞ்ச மாணவர்கள் ஏராளம். எங்க ஊர்ல ஏராளமான சிறுவர்கள் மீது பல குற்ற வழக்கு களும் பதிவாகி இருக்கு.

இப்படிதான் என் தம்பி நவீனும் அந்தக் கும்பலின் பிடியில் சிக்கிட் டான். மது குடிக்கவும் பழகிட்டான். ஆனாலும் யார்கிட்டயும் வீண் வம்பிற்குப் போக மாட்டான். இங்கிருந்தால் நல்லதில் லைன்னு வெளிநாடு அனுப்ப டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் எல்லாம் எடுத்தாச்சு. வயசு பத்தாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால வெளிநாடு போற வரைக்கும் மணல் வியாபாரம் செய்றேன்னு லோன்ல பிக் அப் வண்டி வாங்கி, வீடுகள் தோறும் அந்தப் பகுதிக்காரங்க குவிச்சி வச்சிருக்கும் மணலை வாங்கி வியாபாரம் செய்தான். எந்த வீட்டில் மணல் அள்ளினாலும், உடனுக்குடன் பணம் கொடுத்துவிடுவதால் பலர் என் தம்பியிடம் மணல் கொடுத்தாங்க. அதனால தொழில் போட்டி ஏற்பட்டது.

இந்த நிலையில தான் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி என் தம்பி போதையில் வந்தவன், வீட்ல இருந்தா நாங்க திட்டுவோம்னு நினைச்சி, பக்கத்து வீட்டு வாசல்ல நின்ற, பிக் அப் வண்டியில் ஏறி படுத்திருக்கான். அப்ப அந்த வண்டிக்கார பெண் வந்து, என் தம்பியைத் திட்டி இருக்காங்க. அங்கே நடந்த வாக்குவாதத்தில் அந்த பெண்ணை என் தம்பி அறைஞ்சிருக்கான். அதனால அவங்க அதிராம்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக சொன்னாங்க. நாங்களும் "ஒரு பெண் ணை அடிச்சது தப்புதான். புகார் கொடுங்கள். போலீஸ் கண்டிச்சு விடட்டும்'னு சொல்லிட்டோம். அவங்க புகார் கொடுக்கப் போயிட்டாங்க.

அதுக்கு பிறகு போதையில முருகானந்தம், சுகுமார், பாலகிருஷ்ணன், ஜோதிமணி, மனோஜ் ஆகிய 5 பேர் என் தம்பியை கடுமையா தாக்கி இருக்காங்க. முள் கம்பால அடிச்சதுல அவன் முகமெல்லாம் காயம். தலையிலும் அடிச்சிருக்காங்க. ஆண் உறுப்புல அடிச்சதில் அங்கும் ரத்தக் காயம். அதையெல்லாம்விட, என் தம்பியை நிர்வாணப்படுத்தி அடிச்சிருக்காங்க.

sas

அப்ப நான் வீட்ல இல்ல. வீட்டுக்கு வந்தப்ப எல்லோரும் சொன்னாங்க. அதுக்கு பிறகும் வீட்டுக்கு வந்தால் நாங்க அழுதுடு வோம்னு நினைச்ச என் தம்பி, முதல்சேரி கிராமத்தில் உள்ள அவன் நண்பன் வீட்டுக்குப் போயிட்டான். அடுத்தநாள் காலை திடீர்ன்னு அவன் தூக்கில் பிணமாத் தொங்கு றான். அவனுக்கு நடந்த கொடுமை களையும், நிர்வாணப்படுத்தின அவமானத்தையும் தாங்க முடியாமல் என் தம்பி செத்துட்டான். இத்தனைக் கும் காரணம் அந்த திருட்டு மணல் தொடர்புதான். அவனை அடிச்சவங்க மேல பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத் தோம். மனோஜ், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேர் மட்டும் ஆஜரானாங்க. மற்ற 3 பேர் இப்ப வரை தலைமறைவா இருக்காங்க. நாங்களும் போராடிப் பார்த்துட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று கண்ணீர் வடித்தவர்...

"’இப்ப எனக்கு துணையாக இருந்த என் தம்பியும் இல்லாம நிர்க்கதியா நிற்கிறேன். எனக்கும் பாதுகாப்பு இல்லை. இப்பவே சிலர் மிரட்டுறாங்க. அதனால பட்டுக்கோட்டை டி.எஸ்.பி.கிட்ட புகார் கொடுத்திருக்கேன். என் தம்பி சாவுதான் இங்கே கடைசிச் சாவா இருக்கணும். இனிமேல் இப்படி ஒரு சாவு மணல் விவகாரத்தில் நடக்கவே கூடாது. உடனடியாக மணல் திருட்டு தடுக்கப்படணும். அப்படித் தடுக் கப்படலைன்னா, எங்கள் கிராமம் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை போதைக்கு அடிமையாகி, திருட்டுத் தொழிலை யும் கத்துக்குவாங்க. மணல் திருடர்கள் அவர் களையும் விடமாட்டாங்க'' என்றார் அச்சத்தோடு.

மணல் திருட்டுக் கும்பல்களால், பட்டுகோட்டை பகுதியே பயப் பிராந்தியமாக மாறிவருகிறது.

அரசு என்ன செய்யப்போகிறது?

nkn301122
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe