Advertisment

தெரு நாய்க்கடியால் பலியான சிறுமி! கேரளாவை உலுக்கிய சோகம்!

dd

கேரளா, பத்தனம்திட்ட பெருநாடு பகுதியைச் சேர்ந்த ஹாரிஷ் -ரஜனி தம்பதியினரின் ஒரே மகள் அபிராமி, அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். காலையில் பால் வாங்க தெருவில் சென்ற சிறுமி மீது தெரு நாயொன்று பாய்ந்து, கை கால்களெல்லாம் கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கடந்த ஐந்தாம் தேதி உயிரிழந்தாள்.

Advertisment

அபிராமியின் பெற்றோர்கள் நம்மிடம் பேசும்போது, "கேரளா அறிவு மற்று

கேரளா, பத்தனம்திட்ட பெருநாடு பகுதியைச் சேர்ந்த ஹாரிஷ் -ரஜனி தம்பதியினரின் ஒரே மகள் அபிராமி, அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். காலையில் பால் வாங்க தெருவில் சென்ற சிறுமி மீது தெரு நாயொன்று பாய்ந்து, கை கால்களெல்லாம் கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி கடந்த ஐந்தாம் தேதி உயிரிழந்தாள்.

Advertisment

அபிராமியின் பெற்றோர்கள் நம்மிடம் பேசும்போது, "கேரளா அறிவு மற்றும் முன் னேற்றத்தில் முன்மாதிரி மாநிலமாக இருந் தாலும், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவ தில் தோற்றுப் போயிருக்கிறது. தெரு நாய் கடிச்சி, பேய் விஷ பாதம் பிடிச்சி சாகவா எங்கள் ஒரே மகளை 12 வயசு வரை வளர்த்தோம்?" எனக் கண்ணீர் வடித்தனர். இந்நிலையில், கேரளாவில் கடந்த இரு வாரங்களில், திருவனந்தபுரத்தில் 12 பேர், ஆற்றிங்கால் பகுதியில் 8 பேர் எனப் பலரும் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் தெரு நாய் கடித்த தில் அபிராமி உட்பட 14 பேர் இறந்துள்ளனர்.

dd

இந்நிலையில் தான் அபிராமியின் மரணம் பெரிய அளவிலான பேசுபொரு ளாக உருவெடுத்தது, இதுகுறித்த விவாதம் உச்ச நீதிமன்றத்திலும் நடந்ததில், விவா தத்தில் ஒரு கருத்தாக, தெரு நாய்களுக்கு யார் உணவு கொடுக்கிறார்களோ அவர் களே அந்த நாய் கடிப்பதற்கும் பொறுப் பாளியாக வேண்டுமென்றும், அதற்கான மருத்துவச் செலவை ஏற்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. இது விஷயத்தில் நீதியரசர் சிரிஜெய்ன் கமிட்டியின் அறிக்கை பரிசீலிக்கப்படும் என் றும் கூறப்பட்டது.

இதுகுறித்து கால்நடை அறு வைச்சிகிச்சை நிபுணர் டாக்டர் கிஷோர்குமார், "தற்போது நாய் களுக்கு போடப்படும் வேக்சினை விட, கடிக்கிற நாயின் விஷம் அதிக சக்தியாக உள்ளது. நாய்களின் விஷம் உருமாற்றம் அடைந்துள்ளது. இதற்குள்ள மருந்துகளைக் கண்டு பிடிக்க வேண்டும். திருவனந்தபுரம் பாலோடு மாநில விலங்கியல் நோய் கண்டறியும் மையம் 300 நாய் களுக்கு பரிசோதனை செய்ததில், 168 நாய்களுக்கு ராபிஸ் வைரஸ் உள்ளதாகத் தெரியவந்துள்ளது" என்றார்.

கேரள உள்ளாட்சித்துறை மந்திரி எம்.பி.ராஜேஷ் இதற்கு தீர்வாக, "தெரு நாய்களுக்கு வேக்சின் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. வேக்சின் போடப்பட்டுள்ள நாய்களை அடையாளப்படுத்த ஸ்பிரே பெயின்டிங் அடிக்கப்படும். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் வேக்சின், லைசன்ஸ் கட்டாயப்படுத்தப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் தெரு நாய்களுக்கு ஷெட் அமைக்கப் படும்'' என்றார். கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களுக்குப் பாதுகாப்பளிக்கவும் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்கிறார்கள் இங்குள்ள சமூக ஆர்வலர்கள்.

nkn011022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe