எதிர்க்கட்சிகளையும் எதிரிகளையும் வீழ்த்துவதற்கு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கூட்டணிக் கட்சிகளை மிரட்டுவதற்கும் பயன் படுத்தி வருகிறது. அ.தி.மு.க.வில் வெடித்துள்ள அதிகாரப் போட்டியில் கட்சியின் 99 சதவீத ஆதரவு எடப்பாடிக்கே இருக்கிறது. இதனால் கோர்ட் மூலமாகவும் டெல்லியின் ஆதரவு மூலமாகவும் கட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள துடிக்கிறார் ஓ.பி.எஸ். அவரது அவசரத்துக்கு டெல்லி எஜமானர்களின் தொடர்பு உடனடியாக கிடைக்கவில்லை. சமீபத்தில் ஓ.பி.எஸ். டெல்லி சென்றபோது, அவருக்கும் டெல்லி எஜமானர்களுக்கும் பாலமாக இருக்கும் அமித்ஷாவின் அதிகாரியைத் தொடர்புகொண்டு, "அ.தி.மு.க.வில் என்னை தனி மரமாக்க அவர் (எடப்பாடி) முடிவெடுத்திருக்கிறார். இதனை தடுக்க டெல்லியை ரொம்பவுமே நம்பியிருந்தேன். டெல்லியில் உங்களை சந்தித்தபோதும், இதைச் சொன்னேன். ஆனால், நடப்பதைப் பார்த்தால் எனக்கும் நம்பிக்கையற்றுப் போகிறது. என்னுடைய அரசியல் எதிர்காலம் சூன்யமாகிவிட்டதோ என தோன்றுகிறது''’என்று ஏகத்துக்கும் கொட்டியிருக் கிறார் ஓ.பி.எஸ். அதற்கு அந்த அதிகாரி, "பொறுத் திருங்கள்; உங்களுக்கு நல்லது நடக்கும்'' என உறுதி தந்ததில் ஓ.பி.எஸ்.ஸுக்கு மன ஆறுதல் கிடைத்தது.
"இந்த நிலையிலும் ஓ.பி.எஸ். எப்படி தம் கட்டுகிறார்' என்று அ.தி.மு.க. தலைவர்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மத்திய உளவுத் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,’"கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தின் 90 சதவீதம் ஆதரவு எடப்பாடிக்குத்தான் இருக்கிறது. இதனை உடைத்து அந்த சமூகத்தின் ஆதரவை தங்கள் பக்கம் திருப்ப தி.மு.க.வில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக பா.ஜ.க.வில் அதன் தலைவர் அண்ணா மலையும் பகீரத முயற்சியில் இருக்கிறார் கள். ஆனால், அரசியல் அதிகாரமில்லாமல் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற அண்ணாமலையால் முடியாது. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்தால் மட்டுமே கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. வெற்றி என்பது ஓரளவுக்கு சாத்தியம். ஆனால் அ.தி.மு.க.வின் அதிகாரம் எடப்பாடியிடம் மட்டுமே இருந்தால் சாத்தியப்படாது; ஓ.பி.எஸ்.சிடமும் இருக்கவேண் டும் என கணக்குப் போட்டுள்ளார். ஆக, எடப் பாடியை பலவீனமாக்க அண்ணாமலை, கேசவ விநாயகம் உள்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கின்றனர். பா.ஜ.க. ஆதரவும் டெல்லி கைவிடாது என்ற நம்பிக்கையில் தம் கட்டும் ஓ.பி.எஸ். தரப்பு, சோசியல் மீடியாக்
களிலும் வலம் வரும் பத்திரிகை யாளர்களை வளைத்து, ஏகத்துக்கும் செலவு செய்துகொண்டிருக்கிறது''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர்.
"தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை பிரிக்க வேண்டும், தமிழகத்திலிருந்து இந்த முறை காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது' என்று மோடியும் அமித்ஷாவும் திட்டமிடுகின்றனர். நாடாளு மன்ற தேர்தலில், தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என்கிற சூழலும் உருவாகவேண்டும். அதேசமயம், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி யும் வலிமையாக தெரிய வேண்டும் என்பதே மோடி-அமித்ஷாவின் நோக்கம். காங்கிரசை தனிமைப்படுத்தத் துடிக்கும் இவர்களின் இந்த திட்டத்தை அறிந்த ராகுல்காந்தி-சுனில் இருவரும் அ.தி.மு.க.வின் உறவை நாடினார்கள். அதற்கு ஜனாதிபதி தேர்தல் ஒரு சாக்காக அமைந்தது. தேர்தல் கேன்வாஸ் என்கிற பெயரில் எடப்பாடியிடம் ராகுல்காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இருப்பதால்தான் சிறுபான்மை வாக்குகள் நமக்கு கிடைப்பதில்லை என்று உணர்ந்திருக்கும் எடப்பாடி, ராகுல்காந்தியிடம் "பா.ஜ.க.வால் அ.தி.மு.க இழந்ததைக் குறிப்பிட்டு, என் தலைமைக்குள் அ.தி.மு.க. வந்துவிட்டால் பா.ஜ.க.வை உதறிவிட்டு காங்கிரஸை ஆதரிப்பேன். தமிழகத்தில் மட்டுமல்ல தென் மாநிலங்களில் காங்கிரசின் தேர்தல் செலவுகளையும் அ.தி.மு.க. கவனித்துக்கொள்ளும்'' என்றெல்லாம் ராகுல்காந்திக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இந்த உரையாடல்களை முழுமையாக பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தது உளவுத்துறை. தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மோடியின் வலதுகரமுமான அஜீத் தோவல், தனது சோர்ஸ் மூல மாகவும் ராகுல்-எடப்பாடியின் திட்டத்தை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்தான், "எடப்பாடிக்கு செக் வைக்க அவரது பினாமியான நெடுஞ் சாலைத்துறை காண்ட்ராக்டர் செய்யாதுரை மற்றும் எஸ்.பி. வேலுமணியின் பினாமி கோவை வடவள்ளி சந்திர சேகர் ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடத்த வருமானவரித் துறையின ருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பறந்தது' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். எடப்பாடியின் பணம் இவர்களிடம்தான் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். தரப்பிலிருந்தும் போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி மட்டுமல்லாமல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் சுமார் 50,000 கோடிகள் பல்வேறு பினாமிகள் மூலமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறையினருக்கு கிடைத்த தகவல்களின்படி ஒரு பட்டியலை அனைத்து விவரங்கள் அடங்கிய ஆதாரத்துடன் தயாரித்து வருகிறது பிரதமர் அலுவலகம்.
ஏற்கனவே ரெய்டுக்கு ஆளான மாஜி மந்திரிகள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி, வீரமணி, எடப்பாடியின் சம்பந்தி உள்ளிட்டவர்கள் மீண்டும் குறி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மாஜி மந்திரிகள் சி.வி.சண்முகம், ஜெயக் குமார், திண்டுக்கல் சீனிவாசன், உதயக்குமார், செல்லூர் ராஜு, எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா, ராஜன் செல்லப்பா, எடப் பாடியின் வலதுகரமான சேலம் இளங்கோவன், எடப்பாடி மகன் மிதுன் என அ.தி.மு.க.வின் 20 பெரும் புள்ளிகளின் பட்டியல் தயாரிக் கப்பட்டிருக்கிறது. விரைவில் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யவும், ரெய்டு நடத்தவும் மேலிடத்தில் அனுமதி கேட்டுள்ளது வருமானவரித்துறை.
இத்தகைய சிக்கல் களெல்லாம் இருப்பû தயறிந்து, தன்னைக் காப்பாற் றிக்கொள்ளவும் அ.தி.மு.க.வை கைப்பற்றவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர்களிடம் சரணடைந்த எடப்பாடி, "பா.ஜ.க. ஆதரவு நிலையிலிருந்து மாறமாட் டேன்' என அவர்களிடம் கெஞ்சியிருக்கிறார். பொதுக் குழு கூட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவர்களின் ஆதரவு எப்படியென்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும்.
_______________
சி.பி.ஐ.யிடம் கொடநாடு!
"எடப்பாடியின் கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கும் கொடநாடு வழக்கையும், நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கையும் தங்கள் வசமெடுக்க திட்டமிடுகிறது மத்திய அரசு' என்கிறார்கள் உளவுத்துறையினர். ‘’முந்தைய எடப்பாடி ஆட்சியில் 4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டுகளை தனது உறவினர்களுக்கும் பினாமிகளுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பாக புகார் கொடுத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அக்கறை காட்டாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு எதிராக ஊழல் வழக்கை கடந்த 2018-ல் தொடர்ந்து, இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண் டும் என கோரியிருந்தார் தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தேவைப்பட்டால் எடப்பாடியின் மீது வழக்குப் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என சொல்லியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி வழக்குத் தொடர, சி.பி.ஐ.க்கு விசாரணை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் வழக்கை ஒத்தி வைத்திருந்தது உச்சநீதி மன்றம். கடந்த 4 வருடங் களாக விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்த இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
"இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டால், எடப்பாடிக்கு சிக்கல் அதிகமாகும். அதுபோலவே கொடநாடு வழக்கும் எடப்பாடியின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டி ருக்கிறது. கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் எடுப்பது பற்றிய யோசனை குறித்தும் டெல்லி விவாதித்துள்ளது. சி.பி.ஐ. வசம் எடுப்பது என முடி வெடுத்துவிட்டால் தி.மு.க. அரசிடம் சொல்லியோ அல்லது பாதிக்கப் பட்ட ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் வழக்குப் போட வைத்தோ இந்த கொடநாடு விவகாரத்தை மோடி அரசால் எடுக்க முடியும்' என்று விவரிக்கிறார்கள் உளவுத்துறையினர்.