Advertisment

அம்பத்தூர் எஸ்டேட்டில் சீல் வைக்கப்பட்ட  மதுபானக்கடை!  நக்கீரன் ஆக்ஷன் ரிப்போர்ட்!

actionreport

மிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத்தரும் அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடை, அய்மா அமைப்பு மற்றும் நக்கீரனின் முயற்சியால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Advertisment

இந்தியாவிலே மிக முக்கியமான அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கே இயங்கிவரு கின்றன. அவற்றில் சுமார் 5 லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்

மிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைத்தரும் அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடை, அய்மா அமைப்பு மற்றும் நக்கீரனின் முயற்சியால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Advertisment

இந்தியாவிலே மிக முக்கியமான அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கே இயங்கிவரு கின்றன. அவற்றில் சுமார் 5 லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். இந்த நிலையில் அம்பத்தூர் எஸ்டேட்டில் வாவின் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில், நான்கு முனை சந்திப்பில் பதிவு எண் 429, டாஸ்மார்க் கடையை தொடங்கினர். 

Advertisment

ஏற்கெனவே இந்த நான்கு முனை சாலை குறுகிய சாலையாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதே பகுதியில் அய்மா ரோட்டரி மருத்துமனை உள்ளது. அம்பத்தூர் எஸ்டேட்டி லுள்ள நிறுவனங்களில் பெண்களும் இரவுபகலாக பணியாற்றிவருகிறார்கள். பணிமுடிந்து வீட்டிற்கு செல்வதற்கான பாதையாகவும், பேருந்த நிறுத்தம் அருகிலேயே இருப்பதாலும், இங்கு பணியாற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விகுறியாகக் கூடும். தொழிற்பேட்டையில் மதுபானக்கடை இருந்தால், மதுபோதையில் தகராறு செய்வது அதிகரிக்கும். அருகிலுள்ள முகப்பேர் பகுதியிலேயே நிறைய மதுபானக்கடைகள் இருக்கும் நிலையில், அம்பத்தூர் எஸ்டேட்டில் எதற்கு மதுபானக்கடை என்று அய்மா அமைப்பு கேள்வியெழுப்பியது. 

அதற்கோ, இந்த மதுபானக்கடையின் பார் உரிமையாளர் எனச் சொல்லிக்கொண்ட நாகராஜ் என்பவர், "இந்த கடை போன்று சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அனைத்தும் அமைச்சர் தயவாலே, அனுமதியோடு நடக்கிறது. நீங்க எங்க வேண்டுமானாலும் சொல்லிக்கோங்க. ஒண்ணும் செய்யமுடியாது" எனத் திமிராகப் பேசியுள்ளார். அம்பத்தூர் எஸ்டேட்டின் பாதுகாப்பையும், சீரான செயல்பாட்டையும் கேள்விக்குறியாக்கும் மதுபானக்கடையை எடுக்காவிட்டால் அய்மா அதற்கெதிராக நிச்சயமாகப் போராடும் என்று தெரிவித்தனர். அய்மா தரப்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவை சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி பிரேம்குமாரிடம் தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை நக்கீரன் உடனடியாக அமைச்சர் முத்துசாமியின் பார்வைக்கு கொண்டு சென்றது. அதைக்கேட்டறிந்த அமைச்சர், "நீங்கள் கூறும் காரணங்கள் சரியாகவே இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும். உடனடியாக கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் கடையை மூடி சீல் வைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த அய்மா அமைப்பினர், அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனால் தொழிற்பேட்டை சேர்ந்த அய்மா மிகுந்த சந்தோசத்திலும் அமைச்சருக்கு நன்றிகளை யும் தெரிவித்தனர். 

-சே

nkn221025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe