ஷாருக்கான் படத்திலிருந்து விலகும் நயன்தாரா?
கடைசியாக விஜய்யை வைத்து "பிகில்' படத்தை இயக்கிய அட்லீ, தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கிவருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு, "லயன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சமீபத்தில் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்திவந்தது.
இருப்பினும் பிற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படக்குழு தொடர்ந்து படமாக்கிவந்தாலும், நடிகை நயன்தாராவின் கால்ஷீட்டில்தான் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதால், என்ன செய்யலாம் என்ற யோசனையில் அவர் இருப்பதாகக் கூறப் படுகிறது. இதற்கிடையே, ஷாருக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகி விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ ஆரம்பித்தது. ஆனால், படக்குழுவிற்கு நெருங்கிய வட் டாரம் இத்தகவலை மறுக்கிறது.
பாலிவுட்டில் அறிமுகப்படம், ஷாருக்கானுக்கு ஜோடி... இந்தியா வைத் தாண்டிய மார்க்கெட் பிசினஸ்... இவையெல்லாம் கவனத் தில் எடுக்காமல் படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிடுவாரா என்ன?
மீண்டும் இணையும் பாலா-சூர்யா கூட்டணி!
"நேருக்கு நேர்' படத்தின் மூலம் தமிழ்த்திரைக்குள் என்ட்ரி கொடுத்த சூர்யாவிற்கு, நடிகராக அடையாளம் கொடுத்தது "நந்தா' திரைப்படம். "சேது' என்ற சூப்பர்டூப்பர் ஹிட் படத்தைத் தொடர்ந்து, "நந்தா' படத்தை இயக்கியிருந்தார் பாலா. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நந்தாவிற்குக் கிடைத்த வெற்றி, இக்கூட்டணியை "பிதாமகன்' படத்தில் மீண்டும் இணைத்தது. அதன் பிறகு, பாலா இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான "அவன் இவன்' படத்தில் கௌரவ வேடத்தில் தலைகாட்டியிருந்தார் சூர்யா. சூர்யாவின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவராக பாலா இருந்தாலும், வழக்கமான கமர்ஷியல் பாணியை சூர்யா பின்பற்றி வந்ததால் "பிதாமகன்' படத்திற்கு பிறகு இக்கூட்டணி இணைவதற்கான வாய்ப்பை தமிழ் சினிமா அளிக்கவில்லை. "தாரை தப்பட்டை', "நாச்சியார்' படம் சந்தித்த வணிக ரீதியான பின்னடைவு மற்றும் "வர்மா' படம் ஏற்படுத்திய பலத்த இமேஜ் டேமேஜ் ஆகியவற்றிலிருந்து மீண்டு வரவேண்டிய கட்டாயத்தில் பாலா உள்ளார். அதற்காக விஜய் ஆண்டனி, அதர்வா, ஜி.வி.பிரகாஷ் என, தனக்கேற்ற நடிகர்களின் கதவைத் தட்டிய பாலா, நடிகர் சூர்யாவிடமும் ஒரு கதையைச் சொல்லி வைத்தார்.
சமீபமாக வழக்கமான கமர்ஷியல் டெம்பிளேட் படங்களோடு அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள சூர்யா, தற்போது பாலாவின் கதையை டிக் செய்துள்ளார். இதையடுத்து, பாலா-சூர்யா கூட்டணி, ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. இப்படத்தை சூர்யாவின் "2டி எண்டர்டெய்ன் மென்ட்ஸ்' நிறுவனமே தயாரிக்க உள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தெரிவித்துள்ள சூர்யா, 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் பாலா முன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாலாவும் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பாலாவாக திரும்பிவந்தால், ரசிகர்களுக்கு டபுள் ஹேப்பிதான்.
பேரன் செம ஹேப்பி... நெகிழும் ரஜினி!
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளி யாகிறது. "சன் பிக்சர்ஸ்' நிறு வனம் தயாரித்துள்ள இப்படத் தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள "ரெட் ஜெயன்ட்ஸ்' நிறுவனம், பட வெளியீட்டிற்கான பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. வசூல் ஷேர் தொடர்பாக ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் வைத்துள்ள நிபந்தனை, திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், பட வெளியீட்டிற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகிவருகிறது திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு.
இந்த நிலையில்... சமீபத்தில் "அண்ணாத்த' திரைப்படத்தை தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து பார்த்த ரஜினி, படம் பார்த்த அனு பவத்தை தன்னுடைய மகள் தொடங்கியுள்ள புதிய செயலியான "ஹூட்' செயலியில் பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய முதல் இரண்டு பேரன்களுக் குத் தெரியாமல்தான் "அண்ணாத்த' படத்தைப் பார்த்ததாகவும், மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்த்த தன்னுடைய மூன்றாவது பேரன் வேத், படம் முடிந்த பிறகு தன்னைக் கட்டிப்பிடித்தது குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்தக் குரல் பதிவு அவரது உடல்நல சர்ச்சை களைத் தகர்த்து, இணையத்தில் வைரலானது.
-இரா.சிவா