"ஒரு குரூப்பாத்தான்யா அலையு றாய்ங்க'’என ஈஸியாக எடுத்துக் கொள்ளக்கூடிய சமாச்சாரம் இல்லை இது.

இது பெரிய குரூப். வேற மாதிரி குரூப். மதுரையை முற்றுகையிட்டிருக்கும் இந்த குரூப்பை கண்டுக்காம விட்டா... தமிழ்நாடு முழுக்க பரவும் ஆபத்திருக்கிறது.

நெட்வொர்க் -வாட்ஸ் ஆப் குரூப், கோட்வேர்ட், பாஸ்வேர்ட் என டிஜிட்டல் மயமாக செயல்படும் இந்த குரூப்பப் பத்தி... உஷாரா இருக்கிறதுக்காக மட்டும் நீங்களும் தெரிஞ்சுக்கங்க.

network

Advertisment

"தமிழக அரசியல்கட்சி பிரமுகர்கள் பலரும் மதுரைக்கு வந்தால் தங்குகிற... ரிங் ரோட்டிலுள்ள வி.ஐ.பி. அந்தஸ்து பெற்ற அந்த ஹோட்டலுக்குள் போலீஸ் நுழைந்து விபச்சார ரெய்டு நடத்துவ தாகவும், ஒரு நடிகை சிக்கியதாகவும்' தகவல் கிடைக்க... அந்த ஹோட்டலுக்கு விரைந்தோம்.

ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நபர்களை பிடித்துக்கொண்டு... ஹோட்டலின் இன்னொரு வாயில் வழியாக போலீஸார் வெளியேறிவிட...

Advertisment

ஹோட்டலில் மேனேஜரிடம் ரெய்டு குறித்து நாம் கேட்டோம்.

""மும்பையிலிருந்து ஆன்லைன் மூலமா ரூம் புக் பண்ணீருந்தாங்க. திடீர்னு போலீஸ் வந்து அவங்களை பிடிச்சிட்டுப் போயிருக்கு. எங்களுக்கு வேற எதுவும் தெரியாது''’என்றார்.

""ஹோட்டல்ல ரெய்டு நடந்ததாகவும், ஒரு நடிகை சிக்கினதாகவும் சொல்லப்படுதே...''’ என போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கு போன் செய்து விசாரித்தோம்.

"அப்படியெதுவும் ரெய்டு நடக்கல'’என பதில் வந்தது. ஆனால்... சமூக வலைத்தளங்களில் "ரெய்டில் சிக்கிய நடிகை... வீடியோ போலீஸ்கிட்ட மாட்டியிருக்கு... சீக்கிரமே ரிலீஸ் ஆகப்போகுது'’என சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செய்திகள் பரவின.

நாம் தொடர்ந்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது... "பெரியார் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு ஹோட்டல்... விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா மேடம் ரெய்டு பண்ணினாங்க'’என ஒரு தகவலைத் தந்தனர்.

இன்ஸ்பெக்டர் ஹேமாவிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டபோது... “""நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலையே...''’என்றார்.

பெரியார் பேருந்து நிறுத்த எல்லைக்குட்பட்ட திடீர் நகர் போலீஸ் ஏ.சி. வெற்றிச்செல்வனிடம் விசாரித்தோம்.

""மசாஜ் பார்லர்ல ரெய்டு செஞ்சோம். மத்தபடி நீங்க சொல்ற மாதிரி... எந்த ஹோட்டல்லயும் ரெய்டு நடக்கல. யாரையும் பிடிக்கல''’என்றார்.

network"நம்பகமான தகவல் அடிப்படையில்தான் விசாரணையில் இறங்கினோம். ஆனா... ‘இல்லைனு சொல்றாங்களே...'’என நாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே...

நம்மை தனியே அழைத்த ஒரு போலீஸ்காரர்... ""ரெய்டு நடந்தது உண்மைதான். உங்களுக்கு வந்த தகவல் சரியானதுதான். நீங்க சொல்ற அந்த பிரபல ஹோட் டல்ல நடந்த ரெய்டுக்கு நானும் போயிருந்தேன். போலீஸ் இன்ஃபார் மர்கள் தந்த தகவல் அடிப்படையில... பெரியார் பேருந்துநிலையம் பக்கத்துல பிரபல லாட்ஜ்ல ரெய்டு செஞ் சோம். எங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சு. அங்கிருந்த அழகிகள்... ரொம்ப ஹைகிளாஸ் பெண்களா இருந்தாங்க. அவங்ககிட்ட திலகர் திடல் இன்ஸ்பெக்டர் வனிதா மேடம் விசாரிச்சாங்க. அந்த பெண்கள்கிட்ட விமான பயண டிக்கெட்டுகள் இருந்தன. தீவிரமா விசாரிச்சப்போ... பெரிய லெவலில் நெட்வொர்க் வச்சு... விபச்சாரம் செய்ற அதிர்ச்சிகரமான உண்மைகள் கிடைச்சது. இந்தப் பெண்களை கூட்டிவந்த அஜித்குமார் என்பவனை கவனிக்கிற விதத் துல கவனிச்சோம்... விசாரணையில அவன் என்ன சொன்னான்னா....

"சார்... இது ஆல் இண்டியா நெட்வொர்க். மும்பைதான் ஹெட் குவாட்ரஸ். தமிழ்நாட்டுக்கு குமரப்பா என்ற ராகுல்தான் பொறுப்பு. ஆன்லைனில்தான் பிசினஸ் டீலிங் நடக்கும். இந்தியா முழுமைக்கும் வாட்ஸ்ஆப் குரூப் இருக்கு. தமிழ்நாட்டுல மதுரைலதான் பிசினஸ் ரொம்ப பிஸியா போயிட்டிருக்கு. இந்த நெட்வொர்க்ல இருக்க லோக்கல் ஆளுங்க... கஸ்டமருக்கு ஒரு பாஸ்வேர்ட் தருவாங்க. கூகுள் சர்ச்ல ‘"மதுரை கார்ல் கேர்ள்ஸ்'னு டைப் பண்ணினா... அதுல ஒரு நம்பர் வரும். அந்த நம்பருக்கு பேசினா... எதிர்முனைல பேசுறவர் கடவுச்சொல் கேட்பாரு. அதை சரியாச் சொன்னா... "இந்த கஸ்டமர் நெட்வொர்க் வாட்ஸ் ஆப் குரூப்ல மெம்பராகிடலாம். அதுக்கு ஒரு தொகை கட்டணும். அப்படி வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்க்கிற ஏஜெண்ட்தான் குமரப்பா. நான் ஒரு சபலத்துல கஸ்டமராத்தான் இந்த குரூப்ல சேர்ந்தேன். இப்போ என்னை பிளாக் மெயில் பண்ணி... அவங்களுக்கு எடுபிடி வேலைசெய்ய வச்சுக்கிட்டாங்க.

மும்பைல இருந்து விளம்பர மாடல் நடிகைகள், சினிமா துணை நடிகைகள், ‘பஃப்களுக்கு வரும் ஐ.டி.யில் பணியாற்றும் பெண்களை மூளைச்சலவை செய்து, ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு மாசத்துக்கு ஒரு தொகை நிர்ணயிப்பாங்க. அந்த பணத்தைக் கொடுத்து, ஏலம் எடுத்தவர்கள் அந்தப் பெண்ணை பயன்படுத்தி விட்டு... இந்த வாட்ஸ்ஆப் குரூப் பில் போட்டு... அதிக தொகைக்கு கேட்பவர்களிடம் ஒப்படைத்து விடுவார். அந்தப் பெண்களை மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள ஹோட்டல்களில் ஆன் லைன் மூலம் ரூம் புக்செய்து விமானத்தில் அழைத்துவந்து தங்கவைப்பார்கள். என்னைப் போன்றவர்கள் சின்ன லாட்ஜ் களுக்கு அந்தப் பெண்களை கூட்டிட்டு வந்து... மணிக்கணக் குல பேசி தொழில் செய்வோம். வியாபாரம் முடிஞ்சதும் மறுபடி அந்தப் பெண்கள் தங்கியிருக்கும் பெரிய ஹோட்டல்களில் கொண்டு போய் விட்டுவிடுவோம்' -இப்படி அவன் தங்களோட விபச்சார நெட்வொர்க்கைச் சொன்னபோது... ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.

ரெய்டு பண்ணி, அஜித்குமாரை பிடிச்சு... இன்ஸ்பெக்டர் வனிதா மேடம் விசாரிச்சிக்கிட்டிருக்கும் போதே... "மேற்கொண்டு எதுவும் செய்யவேண்டாம்'னு வனிதா மேடத்துக்கு போன் மேல போன்.

inspector""முதல்ல என் டூட்டிய செய்யவிடுங்க. அதுக்குப் பிறகு எப்படியோ நடக்கட்டும்'’எனச் சொன்ன வனிதா மேடம், உடனடியா அந்த பிரபல ஹோட்டலில் ரெய்டு நடத்தினார். அங்க வடநாட்டு சினிமா நடிகை ஒருவரோட ஒரு முக்கியப் புள்ளி இருந்தாரு. ரெண்டு பேரையும் பிடிச்சு விசாரிக்கிறதுக்குள்ள... ஏகப்பட்ட போன்கால்கள் இடைஞ்சலா வந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகள்ல பார்த்தப்போ... குமரப்பா இருந்தான். வாடிப்பட்டியில் தொடங்கி மதுரைவரை இருக்கிற பெரிய ஹோட்டல்களில் அவன் வருகை பதிவான தகவல்கள் கிடைச்சது''’என விபரங்களைச் சொன்னார் அந்த காவல் நண்பர்.

நாம் திலகர் திடல் இன்ஸ்பெக்டர் வனிதாவைச் சந்தித்துப் பேசினோம்.

""மும்பையை தலைமையிடமா கொண்டு செயல்படுற ஒரு நெட்வொர்க் இது. தகவல் கிடைச்சதுமே நாங்க ரெய்டு நடத்தல. சின்ன புரோக்கரான அஜித்தை பிடிச்சதும், அஜித் சொன்ன யோசனைப்படி, ஒரு போலீஸ் இன்ஃபார்மரை வைச்சு... வலைத்தளத்துல "மதுரை கார்ல் கேர்ள்'ஸில் தொடர்புகொண்டு... அவங்க சொன்னபடி இன்ஃபார்மரை பிரபல ஹோட்டலுக்கு போகவச்சு... கையும், களவுமா பிடிச்சோம். பிடிபட்ட பெண், இந்தி சினிமா நடிகையானு தெரியல. ஆனா... பார்க்கிறதுக்கு நடிகை போலவே இருந்தார். அந்தப் பெண்ணை எச்சரித்து விடுவிச்சிட்டோம். குமரப்பா மேல குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய கடந்த 25-ஆம் தேதி உத்தரவு போட் டாச்சு. புரோக்கர் அஜித்தை சிறையில் அடைச்சாச்சு. அந்த ஹோட்டல் மேல புதூர் காவல் நிலையத்துல வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கு. இதுக்கு மேல விபரம் வேணும்னா... உயர் அதிகாரிகள்ட்ட பேசிக்கங்க''’என்றார் இன்ஸ்பெக்டர் வனிதா.

""குறிப்பா மதுரையை குறிவச்சு மும்பையிலிருந்து இந்த விபச்சார நெட்வொர்க் செயல்படுது. சின்ன லாட்ஜ்ல அடிக்கடி ரெய்டு நடப்பதால் பெரிய பெரிய வி.ஐ.பி.கள் தங்குற ஹோட்டல்கள்ல தங்கி செயல்படுறாங்க. பெரிய இடத்துப் பிள்ளைகளை சபலப்படுத்தி... இந்த வாட்ஸ்ஆப் குரூப் விபச்சாரம் வைரல் ஆகிக்கிட்டிருக்கு. நாங்க இதுகுறித்து பலமுறை புகார் தெரிவிச்சுக்கிட்டுதான் இருக்கோம். உறுதியான நடவடிக்கை இல்லாததால் இந்த சீரழிவு. கடுமையான நடவடிக்கை மூலம் இனியாவது இந்த விபச்சார கும்பலை ஒழிக்கணும். இல்லேன்னா... விளைவுகள் விபரீதமா ஆகிடும்''’என நம்மிடம் தெரிவித்தார் வக்கீலும், சமூக செயற்பாட்டாளருமான ஸ்டாலின்.

குமரப்பாவின் உருவ, முகப்பதிவுகள் பிரபல ஹோட்டல் களின் சி.சி.டி.வி. பதிவுகளில் இருந்தும்... குமரப்பாவை போஸீஸார் அடையாளம் காட்டாமல் இருப்பதற்குப் பின்னால் இருப்பது... யாரப்பா?

-அண்ணல்