ரிசாவிலிருந்து வேலைக்கு வந்த நண்பனை, ஓடும் ரயிலிலிருந்து தள்ளி உயிர் பறித்த நண்பர்களுக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

நான்கு வருடங்களுக்கு முன்பு 23.12.2019 அன்று மாலை, சென்னையிலிருந்து ஸ்வேதா எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. இரவு 7 மணி அளவில் விருத்தாசலம் -தாழநல்லூர் ரயில் நிலையங் களுக்கு இடையில் அந்த ரயிலில் பயணம் செய்த இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, திடீரென ஒரு இளைஞரை ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசினார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

Advertisment

ff

நண்பனை ரயிலிலிருந்து தள்ளி உயிர் பறிபோகக் காரணமாக இருந்த நான்கு பேரை யும் பாதுகாப்புடன் திருச்சி வரை கொண்டு சென்றனர் பயணிகள். திருச்சி ஜங் ஷனில் அவர் களிடம் போலீசார் நடத் திய விசாரணையில் பின்வரும் விஷயங் கள் தெளிவாயின: ஒடிசா மாநிலத்திலுள்ள ரூர்கேலா மாவட்டம், பதிர்நகர் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த ஆகாஷ் தாஸ், சித்தன் கிரி, அணில் குமார் ஓஜா, சுக்தேவ் கடையா, சோட்டு படை யாக் ஐந்து பேரும் மதுரை பகுதியில் சென்ட் ரிங் வேலை பார்த்து வந்துள்ளனர். தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மீண்டும் ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர்.

சென்னையில் ஒரு நாள் தங்கிவிட்டு 23-12-2019 அன்று சென்னையிலிருந்து மதுரை செல்ல ஸ்வேதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய் துள்ளனர். அன்று இரவு சுமார் ஏழு மணியளவில் விழுப்புரம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது. ஆகாஷ்தாஸ், "நான் வேலைக்கு வரவில்லை. மீண்டும் சொந்த ஊருக்குச் செல்கிறேன், என்னை திருப்பி அனுப்பிவிடுங்கள்'' என்று கூறியுள்ளார். அப்போது மற்ற நால்வரும், "வேலை செய்வதாகக் கூறி மூவாயிரம் ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு இவ்வளவு தூரம் வந்தபிறகு நான் வேலைக்கு வரமுடியாது. திரும்ப ஊருக்குச் செல்கிறேன் என்று கூறுவது சரியா? நீ வேலைக்கு வாங்கிய முன்பணத் திற்கு வேலைசெய்து கழித்துவிட்டு பிறகு ஊருக்குப் போ'' என்று கூறியுள்ளனர். ஆனால் ஆகாஷ்தாஸ் பிடிவாதமாக ஊருக்கு திரும்பிச்செல்வதாக உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மற்ற நால்வரும் யாரும் எதிர்பாராத நிலையில் ஆகாஷை ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர்.

Advertisment

ds

சம்பவம் நடந்த இடம் விருத்தாசலம் - தாழநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்டதாக இருந்தது. இதையடுத்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருச்சி உட்கோட்ட ரயில்வே பாதுகாப்பு போலீசார் தொடர்ந்த பல வழக்குகளில், இந்த வழக்கில்தான் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கப்பெற் றுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக் குழுவை, திருச்சி உட்கோட்ட எஸ்.பி. செந்தில்குமார் திறமையாக வழிநடத்தி னார். வழக்கு விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அரசு வழக்கறிஞராக சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். சம்பவத்தை நேரில் பார்த்த ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு சாட்சிகள், விசாரணை ஆதாரங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரபா சந்திரன் கடந்த 30.6.2023 அன்று சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான சித்தன்கிரி, அணில்குமார் ஓஜா, சுக்தேவ்கடையா, சோட்டு படையாக் ஆகிய நால்வருக்கும் ஆயுள் தண்டனையும் ரூபாய் ஐந்தா யிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 5000 அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்குமாறு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே துறையில் இது போன்று குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கிடைப்பது மிக மிக அரிது என்கிறார்கள் ரயில்வே போலீசார். இதுகுறித்து பேசிய திருச்சி உட்கோட்ட ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், "இந்த சம்பவம் நடந்த உடனே எங்களுக்குத் தகவல் தரப் பட்டது. ரயிலில் வரும் அந்த நான்கு குற்றவாளிகளும் எங்கும் தப்பிச் செல்லாதவாறு திருச்சி ஜங்ஷன் பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். ரயில் பிளாட்பாரத்தில் நிற்பதற்கு முன்பே அவர்கள் ரயிலை விட்டு இறங்கி தப்பி ஓட முயன்றனர். கண்காணித்துக் கொண்டிருந்த போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

அந்தப் பெட்டியில் பயணம் செய்த ரயில்வே பயணிகளும் இவர்களை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் திறமையாக வாதாடியதன் அடிப்படையில் மேற்படி நால்வருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது'' என்றார்.’