Advertisment

எங்க உயிருக்கு உத்தரவாதம் இல்ல -குமுறும் டாஸ்மாக் பணியாளர்கள்!

dd

கொரோனா காலத்திலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால், மது விற்பனை முடிந்து வீடு திரும்புவதற்குள் செத்துப் பிழைக்கிறோம் என்று குலைநடுங்க குமுறுகிறார்கள், டாஸ்மாக் ஊழியர்கள்.

Advertisment

tஆகஸ்ட் 31ந்தேதி, கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் ஒட்டியுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணிசெய்யும் சுப்பிரமணி, செல்வம் ஆகிய இருவரும், இரவு 8.30 மணியளவில் வசூல் தொகையான ரூ. 2,37,920 உடன் டூவீலரில் கிளம்ப ஆயத்தமாகியுள்ளனர். அப்போது, திடீரென இரண்டு டூவீலர்களில் வந்தவர்கள், விற்பனையாளர்களின் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி, சுப்பிரமணியின் தலையில் அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு, பணத்தோடு எஸ்கேப் ஆனார்கள்.

அதே மாதம் 27ந்தேதி, ஆசனூர் டாஸ்மாக் விற்பனையாளர்கள் வாசுதேவன், சந்திரசேகர் ஆகிய இருவரும், அன்றைய கலெக்ஷனான ரூ. 2,05,170ஐ எடுத்துக்கொண்டு டூவீலரில் கிளம்பிய சமயத்தில், அவர்களை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிப் பணத்தை

கொரோனா காலத்திலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஆனால், மது விற்பனை முடிந்து வீடு திரும்புவதற்குள் செத்துப் பிழைக்கிறோம் என்று குலைநடுங்க குமுறுகிறார்கள், டாஸ்மாக் ஊழியர்கள்.

Advertisment

tஆகஸ்ட் 31ந்தேதி, கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் ஒட்டியுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணிசெய்யும் சுப்பிரமணி, செல்வம் ஆகிய இருவரும், இரவு 8.30 மணியளவில் வசூல் தொகையான ரூ. 2,37,920 உடன் டூவீலரில் கிளம்ப ஆயத்தமாகியுள்ளனர். அப்போது, திடீரென இரண்டு டூவீலர்களில் வந்தவர்கள், விற்பனையாளர்களின் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி, சுப்பிரமணியின் தலையில் அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு, பணத்தோடு எஸ்கேப் ஆனார்கள்.

அதே மாதம் 27ந்தேதி, ஆசனூர் டாஸ்மாக் விற்பனையாளர்கள் வாசுதேவன், சந்திரசேகர் ஆகிய இருவரும், அன்றைய கலெக்ஷனான ரூ. 2,05,170ஐ எடுத்துக்கொண்டு டூவீலரில் கிளம்பிய சமயத்தில், அவர்களை வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிப் பணத்தைப் பிடுங்கிச்சென்றது அந்தக் கும்பல். இந்தக் கடையில் மட்டும் இது மூன்றாவது முறையாம்.

தியாகதுருகம் டாஸ்மாக் கடையில் ஆகஸ்ட் 28ந் தேதி, விற்பனையாளர் கிளம்பிவிட பூட்டை உடைத்து சில்லரையாக ரூ.5,100ஐ மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர் கொள்ளையர்கள். செப்டம்பர் 9ந்தேதி, முண்டியம்பாக்கம் டாஸ்மாக் கடையில் வசூல் பணத்துடன் விற்பனையாளர்கள் கிளம்பிவிட, சுவரில் துளையிட்டு ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள சரக்குகளைக் களவாடிச் சென்றனர். 8ந்தேதி கண்டாச்சிபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனை மேற்பார்வையாளரின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, வசூல் தொகையான ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்தைப் பறித்துச்சென்றனர் கொள்ளையர்கள்.

Advertisment

tt

உளுந்தூர்பேட்டை திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள டாஸ்மாக்கில், இரவு காவலில் இருந்த அரிதாஸ் என்பவரை வெட்டிவிட்டு, கடையில் இருந்த மதுபாட்டில்களை சாக்குகளில் தூக்கிச்சென்றது ஒரு கும்பல். 16ந்தேதி இரவு உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கொரட்டங்குறிச்சி டாஸ்மாக் ஊழியர் கதிரவனின் காலை வெட்டி ரூ. 3,27,250 வசூல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல், செஞ்சி அருகிலுள்ள மட்டப்பாறை டாஸ்மாக்கில், பெரம்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தின் டாஸ்மாக் கடையில் என கொள்ளைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி விட்டன. இதில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், டாஸ்மாக் ஊழியர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் ஒருங் கிணைந்த விழுப்புரம் மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், ""டாஸ்மாக் பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல் லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும், கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் இருப்பதால், கொள்ளையர்களுக்கு ஏதுவாக ஆகிவிட்டது. கொள்ளையர்கள் பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து கொண்டு, கையில் ஆயுதங்கள் மிளகாய்ப் பொடியோடு டூவீலரில் வந்து கொள்ளையடிக் கிறார்கள். வசூல் பணத்தைத் தரமறுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ttஅவர்களிடமே, கொள்ளைபோன பணத்தைக் கட்டச்சொல்லி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

காவல்துறை கொள்ளையர்களைப் பிடித்தபிறகு, அவர்களிடம் பணத்தை ரெக்கவரி செய்யும்போது அதை வாங்கிக் கொள்ளுங்கள், இது மேலிடத்து உத்தரவு என்கி றார்கள். இது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கும் குழந்தைகள், குடும்பம் என இருக்கிறது என்பதை அரசு உணரவேண்டும். கடைகள் உள்ள பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதாகவும், பாதுகாப்பு லாக்கர் வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இதை விரைந்து செயல்படுத்த வேண்டும். இந்தக் கொரோனா காலகட்டத்தில் நோய்ப் பரவலால் டாஸ்மாக் பணியாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான உதவிகளையும் சலுகை களையும் வழங்கவேண்டும்''’என்று வலியுறுத்துகிறார்.

tt

டாஸ்மாக் ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை சரக டி.ஐ.ஜி. எழிலரசனிடம் கேட்டோம். ""மாவட்ட ஆட்சியர், காவல்துறை, டாஸ்மாக் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம். அதில் டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு, வசூல் பணத்தை பாதுகாப்பாக வங்கிக்குக் கொண்டு செல்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் பணத்தைக் கொண்டு செல்லும்போது காவல்துறை பாதுகாப்பு கேட்டால், அதற்கும் ஏற்பாடு செய்யத் தயார். வசூல் பணத்தை பகலில் வங்கிகளில் செலுத்தாமல், இரவில் மொத்தமாகக் கொண்டு செல்வதை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏற்கனவே நடந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் கொள்ளையர்களைப் பிடித்துவிடுவோம்'' என்றார் உறுதியுடன்.

டாஸ்மாக் நிதியில் உருண்டோடுகிறது தமிழக அரசின் சக்கரம். மதுப்பிரியர்களிடம் இருந்து, பணத்தை வசூல்செய்து நிதித்தேவையை பூர்த்தி செய்யும் நிலையில், டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து, அக்கறை காட்டவேண்டாமா தமிழக அரசே?

-எஸ்.பி.சேகர்

nkn260920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe