லைவாழ் மக்களின் பல தலைமுறைக் கனவை நிறைவேற்றியுள்ளது ஆளும்கட்சியான தி.மு.க. இதனால் மகிழ்வின் உச்சத்தில் திளைக் கிறார்கள் அவர்கள்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பீஞ்சமந்தை, ஜார்தன்கொள்ளை, பாலாம்பட்டு ஆகிய ஊராட்சிகள் இருக்கின்றன. இவை ஜவ்வாதுமலைத் தொடரில் உள்ள ஊராட்சிகள். இவற்றில் மொத்தம் 72 மலை கிராமங்களும் இருக்க, அவற்றில் ஏறத்தாழ 33 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் தங்களது அடிப்படைத் தேவை களுக்கு சுமார் 30 கி.மீ தூரத்திலுள்ள அணைக் கட்டு அல்லது ஓடுகத்தூர் பேரூருக்குத்தான் வரவேண்டும். அல்லது மலையி-ருந்து இறங்கி மலையடிவாரத்திலுள்ள கீழ்கொத்தூர், முத்துக் குமரன்மலை, பெரிய ஏரியூர் கிராமங்களுக்கு வரவேண்டும்.

hh

Advertisment

பீஞ்சமந்தையில் இருந்து முத்துக்குமரன் மலை என்பது 8 கி.மீ தூரம். அதேபோல் கீழ்கொத் தூர், பெரியஏரியூர் ஆகியவை 10 முதல் 15 கி.மீ தூரம். இதைக் கடந்து, மலைப் பாதையில் இருந்து இறங்கிவந்து, அங்கிருந்து ஏதாவது டூவீலர், ஷேர் ஆட்டோ, டெம்போ வந்தால் அதில் ஏறியே இவ் வூர்களுக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து தான் மாவட்ட தலைநகரான வேலூருக்கும் வரமுடியும்.

இதுவரை இந்தப்பகுதி மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் மலை மக்கள்...

"சுதந்திரத்துக்கு முன்பி-ருந்தே, இந்த மலைப்பகுதியில் மின்வசதி கிடையாது, குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது, தொடக்கப்பள்ளி கிடையாது, ரேஷன் கடை கிடையாது, மருத்துவ மனை கிடையாது. இதெல்லாம் இல்லாததுக்கு காரணம் மலைக்கிராமங்களுக்கு செல்ல சாலை கிடையாது. மலைக்கிராம பெண்களுக்கு பிரசவம் என்றாலும், பாம்பு உட்பட விஷ பூச்சிகள் கடித்துவிட்டு அவர்கள் உயிருக்குப் போராடினாலும், டோ- கட்டித்தான் அவர்களைத் தூக்கிக்கொண்டு வரவேண்டும். அப்படி வந்தாலும் வழியிலேயே இறந்தவர்கள்தான் அதிகம்.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு பீஞ்சமந்தை கிராமத் திற்கு பள்ளி, தபால் நிலையம் வந்தன. சாலை இல்லாததால் இங்கு பணியாற்ற எந்தத்துறை அரசு ஊழியர்களும் முன்வருவதில்லை. மலை யடிவாரத்தி-ருந்து முக்கிய மலைக் கிராமங்களுக்கு சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முயன்றபோது வனத்துறை விதிகள் தடுத்தது. சாலை அமைத்தால்தானே மலையில் உள்ள மக்களுக்கான அடிப் படை வசதிகளை செய்யமுடியும் என எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பிய போது, வனத்துறை சட்டத்தைக் காட்டி அவர்களை அமைதியாக்கி னர். தி.மு.க. ஆட்சி வந்ததும், இப்போது எங்கள் எல்லா இருட்டும் வடிய ஆரம்பித்துவிட்டது''’ என்கிறார்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு.

2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் முயற்சி எடுத்தார். இரண்டு ஆண்டு களில் 5.11 கோடி மதிப்பில் 6.4 கி.மீ தூரத்துக்கு மலையில் புத்தம்புது சாலை அமைக்கப்பட்டு அமைச்சர்கள் நீர்வளத்துறை துரைமுருகன், நிதித்துறை தங்கம் தென்னரசு, வனத்துறை மதிவேந்தன் ஆகியோர் ஜூலை 24ஆம் தேதி சாலையை திறந்துவைத்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு எஸ்.டி. மலையாளி பேரவை வேலூர் மாவட்ட செயலாளர் சீனுவாசன், "சாலை வசதி இல்லாததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவி-யர்கள் தங்குவதில்லை. 72 கிராமங் களுக்கும் சேர்த்து 5 தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப் பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி இருக்கு. ஆனால் ஆசிரி யர்கள் சரியாக வருவதில்லை, எந்த அதிகாரியும் மலைக்கு ஆய்வுக்காக வருவதில்லை. ஆம்புலன்ஸ்கள் மலையடி வாரம் வரை மட்டுமே வரும். இப்படி பல இன்னல்களை சந்திச்சோம். சாலை வந்ததும், இப்போது நர்ஸ்கள் இங்கேயே தங்குகிறார்கள். போன் செய்தால் மலைக்கு ஆம்புலன்ஸ் வருகிறது. ஆசிரியர்கள் வருகிறார்கள், அதி காரிகள் வந்து ஆய்வு செய்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் எங்கள் வாழ்க்கைத் தரம் முற்றிலும் மாறி விடும். மலையில் பணப்பயிர்களான தக்காளி, வெண் டைக்காய், கத்தரி போன்றவற்றை பயிர் செய்கிறோம். 20 நிமிடத்தில் மலையடிவாரத்தில் உள்ள ஒடுக்கத்தூர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்துவிடுகிறோம். மினி பஸ் விடுகிறேன் என அமைச்சர் சொல்-யுள்ளார். மினி பேருந்து வந்துசெல்லத் துவங்கிவிட்டால், எங்கள் பிள்ளைகள் 11வதுக்கு மேல் அனைவரும் படிக்கச் செல்வார்கள். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எங்கள் மக்கள் எந்நாளும் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள்''’என்றார் உற்சாகமாக.

hh

இதுகுறித்து வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல். ஏ.வுமான நந்தகுமாரிடம் பேசிய போது, "முதல்முறை நான் எம்.எல்.ஏ.வானபோது மலை யேறிச் சென்று குறைகளைக் கேட்டபோது, "சாலை தேவை' என்றார்கள். அப்போது எதிர் கட்சியாக இருந்ததால் என்னால் சாலை வசதி செய்து தரமுடிய வில்லை. இப்போது நாங்கள் ஆளும்கட்சியானதும் இம்மக்க ளின் தேவைகள் குறித்து முத லமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதும், உடனடி யாக நிதி ஒதுக்கினார். வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு சாலை அமைத்துள்ளேன். அடுத்ததாக அனைத்து கிராமங்களையும் இணைக்க 33 கோடியில் 33 இணைப்புச் சாலைகள், 7 கோடி யில் குடிநீர் வசதி, 2 கோடியில் நூலகம், 59 கோடியில் வீடுகள், விளையாட்டு மைதானம், சமு தாயக்கூடம் என 120 கோடிக்கு திட்டங்கள் தீட்டி, நிதித்துறைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. மேல்நிலைப்பள்ளி, மினி பேருந்து போன்றவற்றை அமைத்துத் தரப்போகிறோம். இங்கே இனி மந்திர மாயம்போல் எல்லா வசதி களும் வரப்போகிறது''’என்றார் அழுத்தமாக.

ஒற்றைச் சாலை, மலைமக்க ளின் வாழ்க்கையில் பெரும் மாற் றத்தை கொண்டுவர ஆரம்பித் திருக்கிறது.

Advertisment