""பதவி வெறி பிடித்தோ, அதை வைத்து சம்பாதிக்க நினைத்தோ, இந்தத் தேர்தலில் நான் போட்டியிட வில்லை. எல்லா வசதிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.வானால், மக்கள் சேவையை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினால், 5 ஆண்டுகளும் எனக்குக் கிடைக்ககூடிய சம்பளத்தை, அப்படியே தொகுதி மக்களுக்காகச் செலவழிப்பேன். ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதியை ஒரு ஸ்மார்ட் சிட்டி ஆக்கு வேன்''’ என்றெல்லாம், வாக்குறுதி அளித்திருந்த ஸ்ரீவில்லி புத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், கொரோனா தொற்றின் காரணமாக, 11-ஆம் தேதி உயிரிழந்தார்.

c

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில உறுப்பினரான மாதவராவ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சீட் கேட்டு போராடி, தற் போதுதான் வேட்பாளராக முடிந்தது. வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரத்திலும் ஈடுபட்டபோது, கொரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டு தடவை மாரடைப்பும் ஏற்பட்டி ருக்கிறது. மாதவராவ் வெற்றிக்காக, அவருடைய மகள் திவ்யா தீவிரமாக தேர்தல் பணியாற்றினார். தொட்டுவிடும் தூரத்திலேயே வெற்றி என கள நிலவரம் சாதகமாக இருந்த நிலையில், மாதவ ராவின் முப்பத்தைந்தாண்டு எம்.எல்.ஏ. கனவு நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க் கப்பட்ட சூழலில், இயற்கை அவரை அழைத்துக்கொண்டது, இத்தொகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு திட்டமிட்டபடி வாக்குகள் எண்ணப்படும் என்றும், மாதவராவ் வெற்றிபெற்றால் இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி, இடைத் தேர்தல் நடைபெற்றால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு போட்டி யிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

1991ல் ராஜீவ் காந்தி கொல்லப் படுவதற்கு முன்பாகவே அவர் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜீவ் படு கொலைக்குப் பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற பகுதிகளில் தேர்தல் நடந்தது. அனைத்துக் கட்ட வாக்குப்பதிவு களும் முடிவடைந்து, வாக்குகள் எண்ணப் பட்டபோது, அமேதி யில் ராஜீவ்காந்தி வெற்றி பெற்றிருந்தார். வேட் பாளர் மரணம் என்பதால் அதன்பிறகு அங்கே இடைத்தேர்தல் நடைபெற்று காங்கிரஸ் வெற்றி பெற்றது.

திருவில்லிபுத்தூர், தமிழகத்தின் அமேதி யாகுமா? மே-2 வரை அமைதியாக இருந்தாக வேண்டும்.

Advertisment