தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள். கணக்கில் வந்ததே 90 எனில் மிரட்டப்பட்டு கணக்கில் வராமல், மறைக்கப்பட்டது எத்தனை இருக்குமோ… உடுமலைப்பேட்டை சங்கர் கொலை உள்பட ஒசூர் சுவாதி நந்தீஷ் வரை ஜாதி ஆண வத்துக்கு இறந்துபோனவர்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதற்கு தீர்வு என்ன என்பதற்குத்தான் அரசிடம் விடையில்லை.
இந்த கொலைகளில் இறந்து போனவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்துக்கள். மேலும் இறந்தவர்களில் 10 சதவீதம் பேர் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள்.
சாதி ஆணவத்தின் கோரப் பற்களுக்கு இன்னும் இரத்த தாகம் அடங்கவில்லை. கரூரில் பட்டப்பகலில் போலீஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள கோவில் வா
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 90 ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள். கணக்கில் வந்ததே 90 எனில் மிரட்டப்பட்டு கணக்கில் வராமல், மறைக்கப்பட்டது எத்தனை இருக்குமோ… உடுமலைப்பேட்டை சங்கர் கொலை உள்பட ஒசூர் சுவாதி நந்தீஷ் வரை ஜாதி ஆண வத்துக்கு இறந்துபோனவர்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதற்கு தீர்வு என்ன என்பதற்குத்தான் அரசிடம் விடையில்லை.
இந்த கொலைகளில் இறந்து போனவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்துக்கள். மேலும் இறந்தவர்களில் 10 சதவீதம் பேர் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள்.
சாதி ஆணவத்தின் கோரப் பற்களுக்கு இன்னும் இரத்த தாகம் அடங்கவில்லை. கரூரில் பட்டப்பகலில் போலீஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள கோவில் வாசலில் நடைபெற்ற ஆணவக் கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூர் மாவட்ட காமராஜர் சாலையைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் ஹரிஹரன் (வயது 23). ஜெயராமன் அதே பகுதியில் சலூன்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு எதிராக உள்ள தெருவில் இரும்புக் கடை வைத்து நடத்திவருபவர் வேலன். வேலன்-தேவி தம்பதியின் மகள் மீனா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில பட்டப்படிப்பு படித்துவந்தார்.
மீனாவுக்கும் ஜெயராமன் மகன் ஹரிஹரனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. மீனா கல்லூரிக்குச் செல்லும்போதும், கோவிலுக்குச் செல்லும்போதும் ஹரிஹரனே சென்று விட்டுவிட்டு வருமளவுக்கு இருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. காதலுக்கு தன் வீட்டில் சம்மதம் கிடைக்காது எனப் பயந்த மீனா, வீட்டிற்குத் தெரியாமல் ஹரிஹரனைத் திருமணம் செய்து கொண்டார். ஒருகட்டத்தில் காதல் இரண்டுபேருடைய வீட்டிலும் தெரியவந்தது.
பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஹரிஹரன் வீட்டினரோடு பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் வேலன் மகள், ஹரி ஹரனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்துள்ளார்.
இதனால் வேலன் தன் மகளிடம் நைச்சியமாகப் பேசி, கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு, ஹரிஹரனை வரவழைத்தார். பெண் வீட்டாரை சமாதானம் செய்துவிடலாமென்ற நம்பிக்கை யுடன் வந்த ஹரிகரனை, பெண் ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் 10-க்கும் மேற்பட்டோர் மறைந்திருந்து கல்லால் அடித்து நிலைகுலையச் செய்துள்ளனர்.
அவர் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில், அங்கிருந்து சிலஅடி தூரம் கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கு இடையே இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கியதோடு, அவருடைய நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர். காவல்துறையினர் சம்பவம் அறிந்து வந்தபோது நாங்களே ஹரிஹரனை மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறோம் என்று கூறி அவர்களே அழைத்துச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிய நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹரிகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கரூர் டவுன் காவல்நிலையம் முதல் கட்டமாக இந்த கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன் (40), வெள்ளைச்சாமி (38) ஆகிய மூவரை கைது செய்து அவர்கள் மீது 7 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் தப்பிச்சென்ற பெண்ணின் தந்தை வேலன், சித்தப்பா முத்து உள்ளிட்ட வர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர்கள் இருக்கும் இடம் தெரிந்த நிலையில் அவர்களையும் கைது செய்தனர்.
“""ஹரிஹரனின் நடத்தை சரியில்லை என்று சாதாரண மாகக் கூறி ஆணவக் கொலையை மறைக்கப் பார்க்கிறார்கள்'' என்று ஹரிஹரனின் தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
ஹரிஹரன் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், ஆணவக்கொலைக்கு எதிரானவர்களும் 11-01-2020 அன்று ஹரிகரனை கொலை செய்த சாதிவெறி யர்களுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சாதியப் புற்றுநோய் குணமாக, இன்னும் ஆயிரம் பெரியார் வரத் தேவையுள்ள தேசத்தில், பெரியாருக்குப் பதில் காவிக்கும்பல்கள் அலை யலையாய்க் கிளம்பிக்கொண்டிருப்பதுதான் தமிழகத்தின் சவாலான துயரம்.
-துரை மகேஷ்