பொய்களின் 'மறு உருவம்' மோடி!

modi

modi

""மாஜ்வாதி கட்சியும் காங்கிரஸýம் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயி-ல் புல்டோசரை ஓட்டிவிடுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது என்று அவர்கள் யோகிஜியிடம் (யோகி ஆதித்யநாத்) பயிற்சி எடுக்க வேண்டும்'' உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் மோடி பேச்சு.

""தேர்தலுக்குப் பிறகு, மோடிஜி மூன்றாவது முறையாக பிரதமராக வரட்டும்... அடுத்த ஆறு மாதங்களில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்பதை நீங்கள் காண்பீர்கள். அதற்கு தைரியம் தேவை, அப்போதுதான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய முடியும்'' மகராஷ்டிராவின் பால்கர் பேரணியில் யோகி ஆதித்யநாத் பேச்சு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மத உணர்வைக் கூர்தீட்டி விடுவதில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறாத பல கருத்துக்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் வியூகம் என்பது முழுக்க முழுக்க பொய்யின் மீதே கட்டப்பட்டுள்ளது. மோடி பா.ஜ.க.வின் இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தியாவில் தற்போது மோடி அலை என்பது முற்றிலும் இல்லாமல் துடைத்தெறியப்பட்டுவிட்டது. இன்னொன்று, குறைந்தபட்ச வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவாவது இந்து பெரும்பான்மைவாதத்தைக் கையில் எடுத்து வாக்கு சேகரிக்கலாம் என்ற தந்திரம்தான்.

பா.ஜ.க.வின் முதல் பொய்

பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றும் என்று பா.ஜ.க. பிரச்சாரம் செய்கிறது. உண்மையில், 441 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. இந்தியா முழுமைக்கும் போட்டியிடுகிறது. தென்னிந்தியாவில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கே இல்லாதபோது பா.ஜ.க.வால் எப்படி 400 இடங்களைக் கைப்பற்ற முடியும். இதைக் கொஞ்சம் விரிவாக அலசி ஆராய்ந்தால் பா.ஜ.க. உண்மையிலேயே 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா என்ற கருத்துருவாக்கத்திற்கு விடை கிடைக்கும்.

அதாவது, கேரளாவில் பா.ஜ.க. இத

அதாவது, கேரளாவில் பா.ஜ.க. இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கூட, 1999 மற்றும் 2014 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில்தான் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கை சரித்துவிட்டது. 2023 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கர்நாடகாவில் வீழ்ச்சி அடைந்துள்ளது ஒரு பக்கம் இருக்க, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்கு பாலியல் கொடுமை இழைத்ததால் பா.ஜ.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. சோபிப்பது கடினம் என்பதே கள நிலவரம். காரணம், முந்தைய காலங்களில், மோடியை பயங்கரவாதி என்று கூறிய சந்திரபாபு நாயுடு, தற்போது மோடியுடன் அமைத்துள்ள கூட்டணி பொருந்தாத கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப்பில் மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லிமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலமாக டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் பா.ஜ.க.வின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஹரியானாவில் மூன்று சுயேட்டைக்கள் பா.ஜ.க.வுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதால் ஹரியானாவில் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது.

மேற்குவங்கத்தைச் சொல்லவே வேண்டாம், மம்தா பானர்ஜி மோடி அலையை குடுவைக்குள் அடைத்து வைத்துவிட்டார். ஏழு மலை, ஏழு கடல் தாண்டி மறைத்து வைக்கப்பட்டது போலத்தான் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு மேற்கு வங்கத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்ததால் உத்தவ் தாக்கரே மீது அனுதாப அலை உள்ளது. அதோடு, சரத்பவார், காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால் பா.ஜ.க. சோபிப்பது எளிதல்ல.

2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவை கணித்தால், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 129 இடங்களில் பா.ஜ.க.வுக்கு வெறும் 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அப்படியிருக்கும்போது பா.ஜ.க.வால் எப்படி, மொத்தம் போட்டியிடும் 441 இடங்களில் 400 இடங்களைக் கைப்பற்ற முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், பா.ஜ.க. சொல்வது பொய் பித்தலாட்டம் என்பது புரிந்துவிடும். இந்த அரசியல் கணக்குகளைக் கூட ஆய்வு செய்யாமல் ஊடகங்களும் மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டனவா? அப்படியென்றால், பா.ஜ.க. ஏன் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்றுக் கூறுகிறது.

2019 மோடியின் பொய் பிரச்சாரம்

2014 நாடாளுமன்றத் தேர்தலில், "கருப்பு பணத்தை மீட்பேன், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டுவேன், விவசாயிகளின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவேன்...' என அடுக்கடுக்கான பொய்யை பிரச்சாரத்தில் மோடி கட்டவிழ்த்துவிட்டார். ஆனால், மோடியின் முதல் ஆட்சிக்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

இந்த பின்னணியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மோடிக்கு சில பொய் பரப்புரைகள் தேவைப்பட்டன. 1) பாலகோட் வான்வழித்தாக்குதல் சம்பவத்தின் மூலமாக தேசிய வாக்குவங்கியை அணி திரட்ட முயன்றார். 2) இந்து கடவுளர்களின் புராணக் கதைகளை அறிவியலோடு இணைத்து அதன் மூலம் வாக்கு வங்கியைப் பெருக்க முயன்றார். இதை விரிவாக ஆராய்ந்தால், பாகிஸ்தானின் ரேடாரால் இந்தியாவின் போர் விமானங்களைக் கண்டறிய முடியாது என்று பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டார். ஆனால், இரண்டாம் உலகப்போரின் போதே எதிரி விமானங்களைக் கண்டறிவதில் ரேடாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை வரலாறு கண்டது.

கொரோனா சமயத்தில், "தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து சத்தம் எழுப்பி தட்டுங்கள், அது முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும்' என்றார் மோடி. சங்பரிவார் கும்பல் மோடிக்கு ஒத்து ஊதுவதாக நினைத்து, "தட்டால் தட்டுங்கள் கொரோனாவும் ஓடுவிடும்' என்று பிரச்சாரம் செய்தன. இதனை யாரும் கேள்வி கேட்கக்கூட இல்லை. இந்து கடவுளர்களின் புராண கதையாடலை அறிவியலோடு இணைத்த மோடி பேச்சு உச்சபட்ச நகைச்சுவையாக இருந்தது. 2014ல் பண்டைய இந்தியாவில் மகாபாரதத்தின் கதாபாத்திரத்தை மரபணு சிகிச்சைக்கும், விநாயகரை பிளாஸ்டிக் சர்சரிக்கும் எடுத்துக்காட்டாக மோடி வட இந்தியாவில் பிரச்சாரம் செய்தார். மோடி பேச்சு அடிப்படை அறிவியல் அறிவுகூட இல்லா முட்டாள்தனமானது என்று தெரிந்தும் அதைப்பற்றி யாரும் பேசவில்லை.

2024ல் மோடியின் நூதன பொய்

இப்படி மோடி 2014ல் பேசிய பேச்சுக்கள் தற்போது அவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்றால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆறே மாதங்களில் மீட்டுவிடுவார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறாத விஷயங்களை மோடி குறிப்பிடுகிறார். "இரண்டு எருமை மாடு இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும்' என பொய் சொல்லுகிறார்.

ஒரு நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்து, மூன்றாவது முறையாக பிரதமராக ஆசைப்படும் ஒருவர் இப்படி பொய்யிலேயே மூழ்கி, பொய்யிலேயே உறைந்து இருக்கும் நாட்டை எங்குமே பார்க்க முடியாது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மோடி, பிரிவினைவாதத்தை தூண்டி மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்திய தேர்தல் ஆணையம்கூட மோடியின், பா.ஜ.க. தலைவர்களின் பேச்சை கண்டிக்கவோ, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவோ இல்லை. யாரும் கேட்க முடியாது என்ற ஆணவத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார் மோடி. "சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸýம் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலில் புல்டோசரை ஓட்டி விடுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் எங்கு இயக்கக் கூடாது என்று அவர்கள் யோகிஜியிடம் (யோகி ஆதித்யநாத்) பயிற்சி எடுக்க வேண்டும்' என உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் மோடியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. "மத இன சாதிய ரீதியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கக் கூடாது' என்கிறது அரசியல் சாசனம். ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மேடையிலும் வாயைத் திறந்தால், மோடி உச்சரிக்கும் வார்த்தைகள் அனைத்துமே இஸ்லாமியர்கள் இந்துக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில்தான் இருக்கிறது.

மோடியின் பக்தர் பூரி ஜெகந்நாதர்

உண்மையிலேயே, இந்துக்களையும் இந்துக் கடவுளர்களையும் மோடி ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பலால் காப்பாற்ற முடியுமா? மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? இந்து கடவுள்களின் உன்னதங்கள் காப்பாற்றப்படுகின்றன? என்ற மோடி - சங்பரிவார கும்பல்கள்தான் இந்துக்களையும், இந்து கடவுளர்களையும் தங்களின் சுயநலத்திற்காக பலிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மோடியைக் குளிர்விப்பதற்காக "ஏழை மக்களின் தூதர் மோடி' என்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். "இந்துக் கடவுளான ஜெகநாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான்' என்று ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் சம்பித் பத்ரா கூறுகிறார். "இந்தியாவை, பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற மோடியால் மட்டுமே முடியும்' என்று கூறிவந்தவர்கள், இன்று "பூரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்' என்று கூறுவதில் ஆச்சரியம் இல்லை. இவர்களின் நோக்கம் முழுக்க முழுக்க சர்வாதிகாரம் மட்டுமே.

"இந்து கடவுள்களைக் காப்பேன்' என்று கூறியவர்கள் "மோடியே கடவுள்' என்ற நிலைக்கு வந்துநிற்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக்காக, சாதியைக்கூர் தீட்டிவிடுவது, மதப் பிளவை ஏற்படுத்துவது, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது என்ற நோக்கம் மட்டும்தான் இவர்களுக்கு உள்ளது.

இந்தியா தனது ஜனநாயக மாண்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றால் மோடி போன்ற சர்வாதிகாரிகளும், ஆர்.எஸ்.எஸ். #பா.ஜ.க. போன்ற மக்கள் விரோத கட்சிகளும் தலை தூக்காமல் பார்த்துக்கொள்வது நம்மைப் போன்ற இந்தியாவை நேசிப்பவர்களின் பிரதான கடமை.

இதையும் படியுங்கள்
Subscribe