இந்தியாவின் முன்னாள் தலைமைக் கணக்காயர் வினோத் ராய், "டைம்ஸ் நவ்' சேனலில் அர்னாப் கோஸ்வாமிக்கு பேட்டியளித்தபோது, "2 ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தனது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பெயர் இடம்பெறாமல் இருப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடியளித்ததாக, தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது'’எனக் கூறி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
2010-ஆம் ஆண்டில், 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஊழல் நடந்துள்ளதாக பிரச்சனை யெழுந்தது
இந்தியாவின் முன்னாள் தலைமைக் கணக்காயர் வினோத் ராய், "டைம்ஸ் நவ்' சேனலில் அர்னாப் கோஸ்வாமிக்கு பேட்டியளித்தபோது, "2 ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தனது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பெயர் இடம்பெறாமல் இருப்பதற்காக காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடியளித்ததாக, தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது'’எனக் கூறி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
2010-ஆம் ஆண்டில், 2ஜி அலைக்கற்றை விற்பனையில் ஊழல் நடந்துள்ளதாக பிரச்சனை யெழுந்தது. கிட்டத்தட்ட ரூ 1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய இந்தியத் தலைமைக் கணக்காயர் வினோத் ராய் குற்றம்சாட்டினார். அந்தத் தொகையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து இந்தியாவே கொந்தளித்து எழுந்தது.
அதன் எதிரொலியாக அடுத்து நடந்த தேர் தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதனுடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க.வின் ராசாதான் அப்போதைய மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ராசா, கனிமொழி உட்பட 14 பேர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். திகார் சிறைக்குச் சென்றனர். எனினும், நீதிமன்ற விசாரணையின்போது தங்கள் தரப்பு நியாயத்தை ராசா தெளிவாக நிலைநிறுத்தினார். சி.ஏ.ஜி. குறிப்பிட்டது ஒரு யூகத் தொகையென்றும், அலைக் கற்றை ஏலத்தில் ஊழல் நடைபெறவில்லையென்றும் நிரூபித்ததால், குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் இந்தியத் தலைமைக் கணக்காளர் வினோத் ராய் மீது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பெயரை இடம்பெறச் செய்யக் கூடாதென நிர்ப்பந்தித்ததாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டிக்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதியிடம் வினோத் ராய் அளித்த பிரமாணப் பத்திரத்தில், “தொலைக்காட்சி, செய்தித்தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது, தவறுதலாக அப்படிக் குறிப்பிட்டதாக” தெரிவித்ததோடு, அதுகுறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, “"மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்ட வினோத் ராய், தேசத்தின் முன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும். வினோத் ராய் அரசிடமிருந்து பெற்ற சலுகைகள், நிதிப்பலன்களை அவர் திரும்ப ஒப்படைக்க வேண்டும்''” எனக் கோரியுள்ளார்.
ராய் பதவி ஓய்வுபெற்ற பிறகு, பா.ஜ.க.வின் ஆதரவில் ரயில்வே காயகல்ப் கவுன்சில் உறுப்பினர், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் குழுவின் தலைமைப் பதவி என பல சலுகைகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.