கடந்த ஜனவரி 23ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. இதில் மிகமுக்கியமாக, மோடியின் நண்பரான தொழிலதிபர் கவுதம் அதானியின் குழும பங்குகள் தடாலடியாக ரூ.1.4 லட்சம் கோடி இழப்பை எதிர்கொண்டன.
என்ன பிரச்சனை? இது இன்று நேற்றல்ல, கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக தொடரும் பிரச்சனைதான்.
தொழிலதிபர் கவுதம் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம், மின்கொள்முதல் ஒப்பந்தத்தை பெறுவதற் காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக் கிறார்கள். கொடுத்ததை அமெரிக்க முதலீட்டாள
கடந்த ஜனவரி 23ஆம் தேதி, வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கியது. இதில் மிகமுக்கியமாக, மோடியின் நண்பரான தொழிலதிபர் கவுதம் அதானியின் குழும பங்குகள் தடாலடியாக ரூ.1.4 லட்சம் கோடி இழப்பை எதிர்கொண்டன.
என்ன பிரச்சனை? இது இன்று நேற்றல்ல, கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக தொடரும் பிரச்சனைதான்.
தொழிலதிபர் கவுதம் அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம், மின்கொள்முதல் ஒப்பந்தத்தை பெறுவதற் காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக் கிறார்கள். கொடுத்ததை அமெரிக்க முதலீட்டாளர் களிடம் மறைத்துவிட்டது தான் குற்றச்சாட்டு. அமெ ரிக்க முதலீட்டாளர்களிடம் இதையெல்லாம் மறைத்து, நாங்க நேர்மையான நிறுவனமென்று பொய்யான தகவலை பரப்பியது தெரியவந்ததால் 2024 நவம்பரி லேயே இது பெரிய விவகாரமாக உருவெடுத்தது. அப்போதே அதானி குழுமம் பெரிய அளவில் பங்குச்சந்தையில் அடிவாங்கி, மெல்ல மீண்டுவந்தது.
இவ்விவகாரத்தில் இந்திய ஒழுங்குமுறை அமைப்பான செபி, அதானி குற்றமற்றவரென்று தெரிவித்தது. எனினும், அமெரிக்க தரப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டுமென்று அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் (ந.ஊ.ஈ.) அமைப்பு கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானிக்கு சம்மன் அனுப்பி யது. ஆனால் அந்த சம்மன் அவர்களை சென்ற டையவில்லை. இந்நிலையில், அதானி குழுமத் துக்கு சம்மன் அனுப்ப ஒன்றிய அரசின் உதவி யை அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் நாடியது. ஆனால் ஒன்றிய அரசு இதற்கு ஒத்துழைக்க மறுத்தது. எனவே பலமுறை முயன்றும் முடியாமல், அதானி குழுமத்துக்கு சம்மனை இ-மெயில் மூலமாக அனுப்ப முடிவு செய்தது. இதற்கான அனுமதியை பெறுவதற்காக நியூயார்க்கிலுள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க பங்குச்சந்தை கமிஷன் மனுத்தாக்கல் செய்தது. அவ்வளவு தான்! இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, இனி அதானி குழுமம் அவ்ளோ தானென்ற பதட்டம் பங்குச்சந்தை யில் தொற்றியதால் தடாலடியாக 10% அளவுக்கும் மேலாக அதானி குழுமப் பங்குகள் அடிவாங்கின. இதில், அதானி குழும பங்குகள் 1.4 லட்சம் கோடி மதிப்பீட்டிற்கு சரிவை சந்தித்தது!
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், "உன்னால நான் கெட்டேன்' என்பதுபோல், இந்திய மக்களின் இன்சூரன்ஸ் சேமிப்பை மோடி அரசு, அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்தது... அதுவும் சுமார் 48,284 கோடிகளை முதலீடு செய்திருந்த நிலையில் அதானி குழுமத்தில் அடிவிழுந்ததில், எல்.ஐ.சி. நிறுவனமும் 15,000 கோடி அளவுக்கு நிதியிழப்பைச் சந்தித்தது! இப்படி யெல்லாம் நடக்குமென்று தான் எல்.ஐ.சி. பணத்தை அதானி குழுமத் தில் முதலீடு செய்வதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரி வித்தன. ஆனால் தனது அரசியல் வளர்ச்சிக்கு உதவும் நண்பனை காப் பதற்காக பொதுமக்களின் இன் சூரன்ஸ் பணத்தை இப்படி முதலீடு செய்து எல்.ஐ.சி.யை நட்டத்தில் சிக்கவைத்துள்ளார் மோடி.
அதானி குழுமம் தொடர்ச்சி யாக இதுபோல் பிரச்சினைகளில் சிக்கி வருவதால் எல்.ஐ.சி. தனது முதலீட்டை திரும்பப் பெறவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us