Advertisment

ஒழித்துக்கட்டப்படுகிறதா எல்.ஐ.சி? அதானி குழுமத்தால் 50 ஆயிரம் கோடிகள் நட்டம்!

ss

தானி குழுமத்தின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட் டாளரான எல்.ஐ.சி. நிறுவனம் தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதானி குழுமத் தைச் சேர்ந்த 7 நிறுவனங்களில் சுமார் 83 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு களில் அடி விழுந்ததில் கடந்த 50 நாட்களில், சுமார் 50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று, அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவன முதலீட்டின் மதிப்பு சுமார் 33 ஆயிரம் கோடிகளாகச் சரிவடைந்தது!

Advertisment

a

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிசன், அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி. ஆகிய நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்திருந்த முதலீடு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதிலிருந்தே தொடர்ந்து அடிவாங்கத் தொடங்கியது. அதே போல் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முதலீட்டு மதிப்பும் 119 பில்லியன் டா

தானி குழுமத்தின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட் டாளரான எல்.ஐ.சி. நிறுவனம் தற்போது பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதானி குழுமத் தைச் சேர்ந்த 7 நிறுவனங்களில் சுமார் 83 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு களில் அடி விழுந்ததில் கடந்த 50 நாட்களில், சுமார் 50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதியன்று, அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவன முதலீட்டின் மதிப்பு சுமார் 33 ஆயிரம் கோடிகளாகச் சரிவடைந்தது!

Advertisment

a

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிசன், அம்புஜா சிமென்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி. ஆகிய நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் செய்திருந்த முதலீடு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதிலிருந்தே தொடர்ந்து அடிவாங்கத் தொடங்கியது. அதே போல் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை முதலீட்டு மதிப்பும் 119 பில்லியன் டாலரிலிருந்து 85 பில்லியன் டாலர்கள் சரிவடைந்து 33.4 பில்லியன் டாலர்களாக உள்ளது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருந்து 38-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலை யில் எல்.ஐ.சி. நிறுவனமோ, நாங்கள் அதானி குழுமத்தால் அடிவாங்கவில்லையென்று கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று முழுநீள அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதில், அதானி குழும நிறுவனங் களில் பங்குகளாகவும், கடனாகவும் 35,917.31 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக் கிறது. 2023ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியன்று அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 56,142 கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஒட்டு மொத்த சொத்து மதிப் பான 41.66 லட்சம் கோடி யில், அதானி குழுமத்தில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 0.975% மட்டுமே. எனவே அந்நிறுவனத் தின் பங்குகளில் ஏற்படும் சரிவு, எல்.ஐ.சி. நிறு வனத்தைப் பெரிதும் பாதிக்க வாய்ப்பில்லை.' என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisment

ss

எல்.ஐ.சி. நிறுவனத்தை ஏற்கெனவே தனியா ருக்கு தாரைவார்க்கப்போவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுக்கள் எழுந்த நிலையில், தற்போது எல்.ஐ.சி.யின் அதானி குழும முதலீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர் கனக ராஜிடம் கேட்டபோது, "எல்.ஐ.சி. ஏற்கெனவே தனியாரிடம் தான் இருந்தது. தனியார் நிறுவனங் களெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்று குற்றம் சொல்லித்தான் அரசு தன் வசம் எடுத்தது. இன்று அரசிடம் இருக்கக்கூடிய பெரும்பான்மையான பொதுத்துறை நிறுவனங்களை... வங்கிகளை எடுத் துக்கொண்டால், கடந்த காலங்களில் தனியாரிடம் இருந்தவை தான். எனவே எல்.ஐ.சி., நிறுவனம் மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் மிகக்கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தனியார் வசமிருந்தால் அனைத்தும் நன்றாகச் செயல்படும் என்பதெல்லாம் உண்மையல்ல. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் 100% வரிகளை முழுமையாகச் செலுத்துவார்கள். இங்கே வரி ஏய்ப்பு இருக்காது. ஆனால் தனியார் நிறுவனங்களில் அப்படியில்லை. அதானி உலகின் இரண்டாவது பணக்காரராக, ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்தபோதும், இந்தியாவுக்கு அதிக வரி செலுத்துபவர்களில் முதல் பத்து இடங்களில்கூட அதானி நிறுவனம் இல்லை! கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வரியாகவும், டிவிடன்டாகவும் அரசாங்கத்துக்கு 97 ஆயிரம் கோடியை வழங்கியிருக்கிறது. இதுபோல் எந்த தனியார் நிறுவனமும் வரி செலுத்தியது கிடையாது.

sad

1934ஆம் ஆண்டிலிருந்து, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் செக்சன் 34 என்ன சொல்கிற தென்றால், பெருமுதலாளிகள் கடன் வாங்கினால், எவ்வளவு வாங்கினார்களென்று வெளியிடக் கூடாதென்று கூறுகின்றது. இதுவே பொதுமக்கள் ஒரு பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், ஊர் முழுக்க அச்செய்தியைப் பரப்புகிறார்கள். ஆக, இப்படியான விதிமுறைகளை மாற்றவேண்டும். அதேபோல, சாமானிய மனிதர்கள் 1000 ரூபாயை வங்கிக்கடன் பெறுவதென்றால் 1100 ரூபாய்க்கு அடமானம் கொடுத்தாக வேண்டும்.அதுவே பெருமுதலாளிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன் பெற்றால் அதற்காக 1000 கோடி மட்டுமே அடமானம் வைத்தால் போதுமென்கிறது சட்டம்.

6 விமான நிலையங்களையும் அதானி நிறுவனத்தின் பொறுப்புக்கே விட்டபோது நிதி ஆயோக் அதனை ஏற்கவில்லை. இது சரியான உத்தியாக இருக்காது என்று கூறியது. அதேபோல், இவர்களுடைய கடன்கள்... சொத்து மதிப்பை கணக்கிடும்போது, அதானி நிறுவனத்தால் இவற்றை நடத்துவது இயலாதென்பதால் இரண்டு விமான நிலையங்களுக்கு மேல் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாமென நிதி அமைச்சகமும் மறுத்தது. இதையெல்லாம் மீறி, அதானி நிறுவனத்துக்கே 6 விமான நிலையங்களும் வழங்கப்பட்டதென்றால், மோடியோ, அமித்ஷாவோ தான் இதில் தலையிட்டு முடிவை மாற்றியிருக்க முடியும். ஆக, இப்படியாக இந்தியாவின் பொதுச்சொத்துக்களை வெகுவேக மாக தனியார்மயமாக்கி வருகிறார்கள்'' என்றார். ஆக, ஒழித்துக்கட்ட வேண்டுமென்று முடி வெடுக்கப்பட்டதால், மோசடியாக வளர்ச்சி யடைந்துள்ள அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்கிறதோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியாது.

nkn040323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe