"கழகத் தலைவர் முதல்வர், துணை முதல்வர் வழி நடத்த, இந்த முறையும் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று "ஐந்தாவது வெற்றி'யாக சாதனை படைப்பார் மா.செயலாளர், கூட்டுறவுத்துறை அமைச்சருமான பெரியகருப்பன். இந்த அரசு எங்களது பேரூராட்சிக்கு செய்த திட்டங்கள் அளப்பரியது. ஆகையால் இந்த முறை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சருக்கு கோட்டையூர் பேரூராட்சி எதிர்பார்க்காத வாக்குகளை அளித்து வெற்றிபெற வைக்கும்'' என நம்பிக்கையுடன் பேசுகின்றார் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை.
திருப்பத்தூர் தாலுகா, சிங்கம்புணரி தாலுகா மற்றும் காரைக்குடி தாலுகாவிலுள்ள (பகுதி) கொத்த மங்கலம், கொத்தரி, நெற்புகப்பட்டி, ஆத்தங்குடி, அரண் மனைப்பட்டி, டி.சூரக்குடி, ஒ.சிறுவயல், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்களையும், கானாடுகாத்தான், பள்ளத்தூர் மற்றும் கோட்டையூர் பேரூராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி.
"பெரிய மனதுக்காரர், பெரிய செயலுக்கு சொந்தக் காரர் மற்றும் பெரிய மீசைக்காரர் என கழகத் தலைவ ரிடமே பாராட்டுப்பெற்றவர் அமைச்சர் பெரியகருப்பன். அவர் எங்களது கோட்டையூர் பேரூராட்சிக்கு செய்த நல்ல திட்டங்கள் ஏராளம். பேரூராட்சியில் சேர்மனாக பதவியேற்றதுமே அமைச்சரை சந்திக்கையில், "எங்களது பகுதியில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலான தஞ்சாவூர் அருணாசலம் செட்டியார் பள்ளி இயங்கி வருகின்றது. அதற்கு சுற்றுச்சுவர் தேவை'' என்றேன். "உடனடியாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வேலையை துவக்குங்கள்'' என நம்பிக்கை கொடுத்தார். அதனைவிட அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. "பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறை என்பது இருக்கவே கூடாது. அனைவருக்கும் சுத்தமான ஆரோக்யமான குடிநீர் தரவேண்டுமென பேரூராட்சி முழுவதும் குடிநீர் போர்வெல்கள், நீர்த்தொட்டிகள் மற்றும் ஆர்.ஓ. பிளாண்ட்களை தந்தார். அது போக, முதல்வரின் ஆணைக்கிணங்க மாணாக்கர்கள் உயர 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரி நகரில் ஃய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் ஈங்ய்ற்ழ்ங் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கின்றது.
கோட்டையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இளந்தாரிகள் மத்தியில் கால்பந்து விளையாட்டு பிரசித்தம். செயற்கை இழை மைதானம், உயர் மின் கோபுர விளக்குகளுடன் பச்சை பசேல் மைதானம் கிடைத்தால் இங்குள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்ற எண்ணத்தில் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உடனே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அண்ணன் அவர்களிடம் அதனை கொண்டுசெல்ல, அதே மேடையில் செயற்கை இழை மைதான திட்டம் கோட்டையூருக்கு அரசால் வழங்கப்பட்டது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் வார்டு எண்-8-ல் உள்ள ப்ளூஸ் கால்பந்து மைதானத்தை மேம் படுத்தி, புதிய கால்பந்து மைதானம் மற்றும் கலைஞர் விளை யாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பச்சை பசேல் மைதானம் சென்னை யிலுள்ள நேரு ஸ்டேடியத்திற்கு அடுத்து தரமாக உரு வாகி வருகின்றது. வருங்காலங்களில் இம்மைதானத்தில் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் அதிகம். இதனால் இங்கு தலைசிறந்த கால்பந்து வீரர்கள் உருவாக வாய்ப்பு அதிகம். இது தவிர அரசின் எண்ணற்ற திட்டங்களும் பேரூராட்சிக்கு கிடைத்துள்ளது. ஆகையால், திட்டங்களின் பலனே அமைச்சர் பெரியகருப்பனை "ஐந் தாம்' முறையாக இத்தொகுதியில் வெற்றிபெற வைக்கும்'' என்கின்றார் கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை. வெல்வோம் ஒன்றாக!
-NG'26
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/periyakarupan-2026-03-06-15-57-37.jpg)