Skip to main content

கொடிய கொரோனாவை வெல்வோம்!

லகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 3 லட்சத்து 50ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. சீனாவில் தொடங்கிய இந்தக் கொடூரம் அமெரிக்காவி லும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி, இந்தியா வின் கதவுகளையும் பலமாகத் தட்டிக் கொண் டிருக்கிறது. கர்நாடகம், குஜராத், டெல்லி எனப் பல மாநிலங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இனியும் உயிரிழப்பு கள் ஏற்படாத வகையிலும், கொரோனா பரவாதபடியும் போர்க்கால அடிப்படையில் செயலாற்ற வேண்டிய இடத்தில் அரசுகள் இருக்கின்றன.

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி சுய ஊரடங்கிற்கு மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். குறிப்பாக, தமிழ் நாட்டில் அத்தனை கட்டுக்கோப்பான ஒத்து ழைப்பு கிடைத்தது. அதே நேரத்தில், மருத் துவர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் மாலை 5 மணிக்கு கைதட்டும்படி பிரதமர் சொன்னதை தங்கள் விருப்பப்படி வடஇந்தியர்கள் பலரும் ஊர் வலம் நடத்தி, மணி அடித்து, சங்கு ஊதியதால், தனித்திருந்து விரட்ட வேண்டிய கொடூரத்தை வலிந்து அழைத்ததுபோல ஆயிற்று. அதனால் தான், கொரோனா ஆபத்தை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார் பிரதமர். "வெளிநாட்டிலிருந்து திரும்பி, தனிமைப்படுத் தப்பட்டவர்கள் அலட்சியமாக நடந்துகொண் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருக்கிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவர்களைக் காப்பதுபோலவே, பொதுமக்க ளும் முடிந்தளவு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதே தற்போதைய அவசிய நட வடிக்கையாகும். அதனால்தான் மார்ச் 31 வரையில் தமிழ்நாடு முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. அறிவிப்புகளைவிட முக்கியமானது அதற்கான செயல்பாடுகள்.

தடைக்காலத்தில் தினக்கூலி தொழி லாளர்களுக்கான ஊதியத்திற்கு என்ன வழி? அவர்களின் குடும்பத்தினர் எப்படி சாப்பிடு வார்கள்? அனைத்து மக்களுக்கும் சானிட் டைசர்கள், தேவையானவர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் அவசிய மாகும். அதிலும், கொடூர கொரோனாவைத் துணிவுடன் எதிர்கொண்டு மரணத்தின் பிடி யிலிருந்து மக்களைக் காக்கின்ற மருத்துவத் துறையினருக்குத் தட்டுப்பாடின்றி இவை கிடைத்தால்தான், பாதுகாப்பான சிகிச்சையை அவர்கள் அளித்திட முடியும். அதுபோலவே, நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும், கிராமப்புறங் களிலும் வசிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்காதபடி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன எனப் பலவும் அரசாங்கத்தின் முன் உள்ள சவால்கள். மக்கள் மீதான அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் தான் இதற்கான தெளிவான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும்.

மனிதகுலத்தின் மாபெரும் எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனா கொடுமை யிலிருந்து மக்களைக் காத்திடும் ஆராய்ச்சி மணியாக நக்கீரன் தன் குரலை அரசாங்கத்தின் காதுகளில் ஒலித்திடும். அதேநேரத்தில், தனிமையே தற்காப்பு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, தனித்திருத் தலைக் கடைப்பிடிப்போம். அறிவியல் பார்வையுடனும் மனிதநேயத்துடனும் போராடி வெல்வோம்.

-ஆசிரியர்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...