மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில் தனது தனித்தன்மையை வெளிப் படுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கோவையில் மாநாட்டை நடத்தி முடித்திருக் கிறது.
"இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்!'’என்ற தலைப்பில் கோவை கொடீசியா மைதானத்தில் பிரமாண்டமாய் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில், செம்மயமான கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க. அணித் தலைவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ""பா.ஜ.க. வையும், அ.தி.மு.க.வையும
மக்களவைப் பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில் தனது தனித்தன்மையை வெளிப் படுத்தும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கோவையில் மாநாட்டை நடத்தி முடித்திருக் கிறது.
"இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்!'’என்ற தலைப்பில் கோவை கொடீசியா மைதானத்தில் பிரமாண்டமாய் நடைபெற்ற எழுச்சி மாநாட்டில், செம்மயமான கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் ஆசிரியர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தி.மு.க. அணித் தலைவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ""பா.ஜ.க. வையும், அ.தி.மு.க.வையும் விரட் டியடிப்பதற்கே இந்த மாநாடு. "மார்ச் 1-ம் தேதி பிறந்தநாளை கொண்டாட மாட்டேன்' என்று ஸ்டாலின் சொல்லியிருந்தாலும் அவருக்கு இப்போதே வாழ்த்துகளைச் சொல்லிவிடலாம்''’ என்று கூட்டத்தினரின் கரவொலியோடு கூறினார்.
ஆர்.நல்லகண்ணு பேசும் போது,…""சமூகத்திற்காக குரல் கொடுத்து வந்த முகிலன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இந்த ஆட்சியில் யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை''’என்று கவலையை வெளிப்படுத்தினார்.
கே.எஸ்.அழகிரி பேசுகை யில்,…""இந்தக் கூட்டம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் வசிக்கும் மனி தர்களுக்கான கூட்டம். இழந்த உரிமைகளை மீட்கும் கூட்டம். கலைஞரின் மகனான ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வார்''’’ என்று உறுதியளித்தார்.
திருமாவளவன் தனது உரையில்,…""சனாதன சக்திகளை விரட்டியடிக்கும் நேரம் வந்து விட்டது. 5 ஆண்டுகளாய் மோடி இங்கே செய்தது என்ன? ஒடுக்கப் பட்ட, பழங்குடியின மக்கள்மீது தாக்குதல். காந்தியின் உருவப் படத்தை துப்பாக்கியால் சுட்டு "நாதுராம் வாழ்க' என்று கோஷ மிடுவதும்தான் நடந்திருக் கிறது''’என்று வேதனையை வெளிப்படுத்தினார்.
கே.பாலகிருஷ்ணன் பேசும்போது,…""44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க அரைமணி நேரம்கூட ஒதுக்க முடியாத மோடி, ஈஷாவில் ஒரு சிலையைத் திறந்து வைத்து ஜக்கியோடு ஒருநாள் முழுக்க கூத்தடிக்கிறார். டாஸ்மாக்கை ஒழிக்கணும்னு சொன்ன அன்புமணி, இப்போது கூட்டணி சேர்ந்து டாஸ்மாக் கடைமுன்பு பக்கோடாவையும், மாங்காய் ஊறுகாயையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கிறார்''’என்று கிண்டலடித்தார்.
தி.க. தலைவர் கி.வீரமணி தனது உரையில்,…""ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற மோடி, இந்த 5 ஐந்து ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இருக்கிற வேலையையும் பறித்தது தான் அவருடைய சாதனை'' ’என்று ஆவேசப்பட்டார்.
வைகோ பேசும்போது …""மேகதாதுவில் அணை கட்டி விட்டால் காவிரி நீர் மேட்டூருக்கு வராது. தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்கிறது. இந்த தேர்தலோடு மோடியின் கூட்டம் காணாமல் போய்விடும்''’என்றார்.
இறுதியாக பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,…""எனக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எப் போதும் உறவு உண்டு. என் பெயரே ஸ்டாலின்தான். .சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பெரிய பள்ளியில் எனக்கு இடம்கேட்டு, எனது மாமா முரசொலிமாறன் முயற்சி செய்தார். அந்தச் சமயத்தில் ரஷ்யாவில் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்பட்டு கொண்டிருந்தன. எனது பெயரைப் பார்த்துவிட்டு, "உங்கள் பிள்ளைக்கு இடம் தருகிறோம். ஆனால், பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்' என்றார்கள். இதையறிந்த எனது தந்தை, "பள்ளியை மாற்றினா லும் மாற்றுவேனே தவிர, பிள்ளையின் பெயரை மாற்ற மாட்டேன்' என்று கூறிவிட்டார்.
முதல் தலைமுறை பட்ட தாரிகளுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டன. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டு மென்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது தி.மு.க. ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மத்தியில் மோடி ஆட்சியும், மாநிலத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் இருக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சி செய்யாமல், கம்யூனிஸ்ட் கொள்கைகளின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சி செய்தது. இன்றைய ஆட்சியாளர்கள் கொலைகூட செய்வார்கள். அதுதான் கொட நாட்டில் நடந்தது. இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அரசையும், அந்த அரசுக்கு துணை நிற்கும் மோடி அரசையும் அகற்றுவோம். இந்தியாவை மீட்டு தமிழகத்தை பாதுகாப் போம்''’’ என்றார்.
தி.மு.க. கூட்டணிக் கட்சி களின் அடுத்தடுத்த மாநாடுகளும், சிறப்புப் பொதுக்கூட்டங்களும் அந்த அணியை பலப் படுத்துவதாகவே கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-அருள்குமார்