மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24வது மாநாடு மதுரை தமுக்கம் மைதா னத்தில் நடைபெற்றது. மக்களிசைப் பாடல்கள், பறையிசை கொண்டாட்டத்துடன் ஏப்ரல் 2ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி 5 நாட்கள் நடக்கும் மாநாட்டை அக்கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கிவைத்தார். தஞ்சாவூர் கீழ்வெண்மணியிலிருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிமன் பாசு ஏற்றினார். முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமை வகித்தார். மாநாட்டில் கேரள முதல்வர் பினராய் விஜயன், இந்திய கம்யூ. பொதுச் செயலாளர் டி.ராஜா, முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பி.சண்முகம், பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத். கட்சியின் அனைத்து மாநில செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரலாற்றுக் கண்காட்சியை பத்திரிகையாளர் இந்து என்.ராம் தொடங்கி வைத்துப் பேசியபோது, "கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மாநாட்டை இதுவரை 5 முறை தமிழகத்தில் நடத்தியிருக்கிறது. மக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அவர்கள் தேடி ஓடோடிவரும் இடம் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், மற்றொன்று கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களின் வீடுகள் தான்! மக்களை பிளவுபடுத்தி அதன்மூலம் ஆட்சிக்குவந்த பாசிசவாதத்தை அனைத்து மதச்சார்பற்ற அணிகளும் ஒன்று திரண்டு வீழ்த்துவது நிச்சயம்'' என்றார்.
மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி யில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்நாடக கல்வி அம

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி யில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், கர்நாடக கல்வி அமைச்சர் சுதாகர், கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத் ஆகியோர் கலந்து கொண்ட 'கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதில் பேசிய பினராய் விஜயன், "தற்போது நம் தேசம் அரசியல் ஒற்றைத் தன்மையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதன் விளைவாக கூட்டாட்சித் தத்துவம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் நடைமுறையைக் கொண்டுவர மத்திய அரசு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளைப் பெறாமல் செய்யப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் பெரிய அளவுக்கு தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.
அடுத்து பேசிய பிரகாஷ் காரத், "தேர்தல் ஆணைய சுதந்திரத்தை சிதைப்பது தொடர்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் அப்பட்ட மான பாரபட்சம் உள்ளது. இந்தத் தருணத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும். இந்துத்துவா காவிகளை விரட்டியடிக்கத் தொடங்கிய கூட்டம் இது!'' என்றார் உணர்ச்சிகரமாக.
கர்நாடக கல்வி அமைச்சர் சுதாகர், "கல்வி உட்பட மாநில அரசுகளின் அனைத்து அதிகா ரங்களையும் ஒன்றிய அரசு பறித்துவிட்டது. இதனால் நாடு கூட்டாட்சித் தன்மையை இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தை முடக்க வும், நீதித்துறையை பலவீனப்படுத்தவும், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான அந்தஸ்தை சிதைக்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன'' என்று வேதனைப் பட்டார்.
இறுதியாக உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "மதுரையைத் தூங்கா நகரம் என்று சொல்லுவோம். ஆனால், இன்று அந்த தூங்கா நகரம், சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பு நிறைந்திருப்பதைப் பார்த்து, முதல் ஆளாக மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், தி.மு.க. கொடியில் பாதி சிவப்பு. கொடியில் மட்டுமல்ல, எங்களுக்குள் பாதி நீங்கள். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தந்தை பெரியார் தமிழ் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டதில் இருந்தே தொடங்குகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ் டாகவே அடையாளப்படுத்திக்கொண் டவர் கலைஞர். உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் உருவச் சிலை சென்னையில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டு உங்களுள் பாதியாக இந்த மாநாட்டுக்கு வந்திருக்கும் என் பெயர் ஸ்டாலின்'' என்றதும் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்.
தொடர்ந்து பேசிய முதல்வர், "கூட்டாட்சி என்ற சொல்லே இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரத் தன்மை யால் அதிகமாக பாதிப்படைகின்றவர்களில் முதன்மையாக இருப்பது, நானும், நம்மு டைய சகாவு பினராயி விஜயனும்தான். அதனால், இந்த கருத்தரங்கில் நாங்கள் பேசுவதை நீங்கள் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ளலாம். சர்க்காரியா கமிஷனும், பூஞ்சி கமிஷனும் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று, 2012-ல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி கேட்டார். நான் இந்த மேடையில் நின்று பிரதமர் மோடியை ஒரு கேள்வி கேட்கிறேன். தொடர்ந்து மூன் றாவது முறையா கப் பிரதமர் ஆகி யிருக்கும் நீங்கள், அதை நடைமுறைப் படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்று சொல்ல வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான மாநில அரசுகளை மிரட்டு கிறீர்கள். மாநிலங்களே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள். மக்களுக்கு எதி ரான பா.ஜ.க. ஆட்சியின் முடிவில்தான் இந்தியாவில் கூட்டாட்சி மலரும். இதற் காகத்தான் தி.மு.க. குரல் கொடுக்கிறது. பொதுவுடமைத் தோழர்களும் இதற் காகக் குரல் கொடுக்க வேண்டும். இணைந்து போராடுவோம். பாசிசத் தை வீழ்த்துவோம்''” என்றார்.
இதனைத் தொடர்ந்து அடுத் தடுத்த நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கண் காட்சிகள் தொடர்ந்தவண்ணம் உள் ளன. சாலமன்பாப்பையா, இயக்குனரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, வெற்றிமாறன், இராஜூமுருகன், ஞானவேல் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றோர் மேடையில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். நடிகர் சசிகுமார், "ராஜுமுருகன் படத் தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு எழுத்துக்களும், வார்த்தைகளும் கம்யூனிசம் பேசும். இந்த தைரியம் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டு கும் இருக்கும். கம்யூனிசம் கலையை ஊக்குவிக்கிறது. சாதாரணமாக இருந் தாலே கம்யூனிஸ்ட் என்று சொன்னார் கள். அப்படிப் பார்த்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் போல'' என்றார்.
ராஜுமுருகன், "கம்யூனிஸ்ட் என்பது கட்சி அல்ல, எல்லோருக்குமான, மனிதகுலத்திற்கான தத்துவம். சமத்துவத்தை நேசிப்பவர்கள் கம்யூனிஸ்ட். தாய்மைதான் கம்யூனிஸம், எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் கம்யூனிசம். நான் கம்யூனிஸ்ட் என்பதை பெருமையாக உணர்கிறேன். காவி வெறியர்களுக்கு எதிராக மார்க்சிஸம்தான் மாற்று. பாசிஸ்ட்கள், நவ பாசிஸ்ட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். கம்யூனிஸ்ட் கொள்கையின் பின்னால் நிற்போம்'' என்றார்.
சமுத்திரக்கனி பேசுகையில், "உலகத்தில் எங்கு சிவப்பு சட்டை அணிந்து வந்தாலும் ஒரு எளிய மனிதர் வருகிறார், அவரிடம் நாம் பேசலாம் என நினைக்கும் அளவிற்கு நம்பிக்கை பிறக்கும். வர்க்கத்தை ஒழிப்பதும், சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை சமமாக்குவதும் கம்யூனிஸ தத்துவம்தான். திரைப்படத்தில் ஓங்கிப் பேச வேண்டிய காட்சி வந்தாலே சிவப்புச் சட்டை தான் அணிவேன்'' என்றார்.
அடுத்து மதுக்கூர் இராமலிங்கம் சில கேள்விகளை முன்வைக்க, வெற்றிமாறன் பதில் அளித்தார். "விடுதலை' படம் குறித்த கேள்விக்கு, "விடுதலை படம், எனது 45 ஆண்டுகால வாழ்க்கையை விட நிறைய கற்றுக்கொடுத்தது. "விடுதலை' படத்திற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. முன்பு சினிமா மாணவனாக இருந்தேன், இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாக உள்ளேன். எந்தவொரு சமூக அமைப்பும் மார்க்சியம் இல்லையென்றால் அது மக்களுக்கு எதிராக நின்றுவிடும்'' என்றார். மாநாட்டின் இறுதிநாள் பல லட்சம் தொண்டர்கள் அணிவகுக்கும் பிரமாண்ட பேரணியோடு மாநாடு முடிவுபெறுகிறது
இந்த மாநாடு குறித்து மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நம்மிடம், "மதுரை யின் நீண்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் முற்போக்கு சிந்தனையும், பகுத்தறிவு மரபும் நிறைந்து காணப்படும். மன்னனே ஆனாலும் இறைவனே ஆனாலும் தட்டிக் கேட்கிற தைரியம் இந்த மண்ணுக்கு உள்ளது. விடுதலைக்கான போராட்டத்தில் ஏராளமான உயிர்த் தியாகங்களை கொடுத்த இயக்கம், தற்போது மீண்டும் பிரிவினை வாத வகுப்புவாத சக்திகளிடமிருந்து இந்தியாவை மீட்க மீண்டும் கம்யூ னிஸ்ட் இயக்கம் மதுரையில் களத் தைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளது. காவிகளை விரட்டத் தயாராகி விட்டோம்'' என்றார் உறுதியுடன்.