ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி நக்கீரன் பலமுறை விளக்கி எழுதியபிறகு, அ.தி.மு.க. தரப்பிலிருந்து முதலில் கேள்வி கேட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியோ எடப்பாடி அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பவர்களோ என யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. முதன்முறையாக சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மத்தைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

jaya

""ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஒரு இருதய நோயாளிக்கு அடிப்படையாக செய்யும் சோதனை மற்றும் சிகிச்சையான ஆஞ்சியோப்ளாஸ்ட்டி செய்யப்படவில்லை. ஆஞ்சியோ செய்யாமல் மருத்துவர்களை யார் தடுத்தார்கள்? ஜெ.வுக்கு ஏன் வெளிநாட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஜெ.வை சந்திக்க கேபினட் அமைச்சர்களைகூட அனுமதிக்கவில்லை. ஆனால் அமைச்சரவை கூடி ஜெ.வை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என முடிவெடுத்த தாக சொல்கிறார்கள். நானும் கேபினட் அமைச்சர்தான். எனக்குத் தெரியாமல் கேபினட் கூட்டம் எப்படி நடந்தது?

Advertisment

திருமதி சசிகலா அவர்களின் உறவினர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி தோசை சாப்பிட்டிருக் கிறார்கள். சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனையும் தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவையும் கைது செய்து போலீசை வைத்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும். ஆறுமுகசாமி ஆணைய விசாரûணயெல்லாம் போதாது. ஜெ.வின் சாவில் உள்ள மர்மத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்'' என்றார்.

minister-cvsanmugamஇது ஏதோ சி.வி.சண்முகம் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட அறிக்கை என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சி.வி.சண்முகம் உண்மையைத் தானே சொல்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தந்த பதில் ஆச்சரியத்தை தந்தது. இதுபற்றி பத்திரிகையாளர்கள் தினகரனிடம் கேட்டதற்கு ""ஜெ.வின் மருத்துவ சிகிச்சையின் போது நான் அங்கு இல்லை. அப்பொழுது அங்கு தங்கியிருந்தவர்கள் செய்தவற்றிற்கு என்னிடம் பதில் இல்லை'' என்று ஆச்சரியமான பதில் தந்தார். சி.வி.சண்முகத்தால் குற்றவாளி என சொல்லப்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் முதல் வர் எடப்பாடியை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அமைச்சர் அவரை குற்றவாளி என்கிறார். என்ன நடக்கிறது என அனை வருமே குழம்பிப் போனார்கள்.

இதுபற்றி ஆணைய வட்டாரங்களில் விசாரித்தோம். சி.வி.சண்முகம் இப்பொழுது தான் சொல்கிறார். ஜெ.வின் மரண மர்மத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 21-ம்தேதியே இந்த விஷயங்களை தெரிவித்து விட்டது. அதுவே ஆணையத்தின் உத்தரவாக வெளிவந்துள்ளது. அதில் திருமதி சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் சி.ரெட்டி மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ஆகியோரை விசாரணை ஆணையம் குற்றவாளிகள் என முடிவு செய்துள்ளது.

Advertisment

jayadeathசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஜெ.வுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சை பற்றி எந்த சீனியர் அமைச்சர்களிடமும் சொல்லவில்லை. ஜெ.வை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவியுடன் ஏர்லிப்ட் செய்யும் முடிவை கேபினட்டை கூட்டி எடுக்க தவறிவிட்டார். ஜெ. நலம் பெற வேண்டும் என்கிற நோயாளியின் நலனை விட ஜெ.வை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்புவதால் இந்திய மருத்துவர்களின் பெருமைக்கு இழுக்கு ஏற்படும் என்பதால் அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அனுப்பவில்லை என கமிஷனில் சாட்சியமளிக்கிறார்.

அவர் சொல்வதற்கு நேர்மாறாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் ஸ்டுவர்ட் ரஸ்ஸல், இங்கிலாந்தைச் சேர்ந்த செயிண்ட் தாமஸ் மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ராதாகிருஷ்ணனும் அப்பல்லோ மருத்துவமனையும் சேர்ந்து, ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த பல மருத்துவ நிபுணர்கள் தந்த ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டனர். அதனால் கடைசிவரை ஆஞ்சியோ செய்ய வில்லை.

ஜெ. டிசம்பர் 4-ம் தேதி இருதய நிறுத்தத்திற்கு ஆளானார். இருதய நிறுத்தம் வந்த பிறகு அவருக்கு சி.பி.ஆர். எனப்படும் சிகிச்சையும், அவரை எக்மோ எனப்படும் செயற்கை இதய இயக்கம் மற்றும் நுரையீரல் இயக்க கருவிக்கு கொண்டு சென்றதும் பதினைந்து நிமிடங்கள் கழித்துதான் நடந்தது. இருதய நிறுத்தம் அடைந்த ஒருவருக்கு மூன்று நிமிடத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது மூளை செத்துவிடும். ஜெ. இறந்த பிறகுதான் அவரை எக்மோ கருவியில் பொருத்திய கொடுமையும் நடந்துள்ளது.

ஜெ. தொடர்பான மருத்துவ சிகிச்சை ஆவணங் களில் 20 இடங்களில் சசிகலாவின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. சசிகலாவின் கையெழுத்து பற்றி அரசிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் குறிப்பிட்டார். ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதன் "ஜெ.வின் சிகிச்சை தொடர்பாக எந்த ஆவணமும் ராம் மோகன் ராவ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து வரவில்லை என தெரிவிக் கிறார். அதேபோல் அமைச்சரவை கூடி வெகு வேகமாக ஜெ. மருத்துவ சிகிச்சை பெற வேண்டு மென்றால் அவர் அப்பல்லோவிலேயே சிகிச்சையை தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தாக சாட்சியமளித்துள்ளார் ராம்மோகன்ராவ். எனவே ராதாகிருஷ்ணன், ராம்மோகன்ராவ், சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சதி செய்து ஜெ.வின் மரணத் திற்கு காரணமாகியிருக்கிறார்கள். இவர்களை எதிரிகளாக விசாரணைக் கமிஷன் விசாரிக்க வேண்டும் என ஆணையத்தின் வழக்கறிஞர் ஜபருல்லாகான் ஒரு மனுவையே தாக்கல் செய்திருக்கிறார்.

rammohanrao

இதற்கு பதிலளித்த அப்பல்லோ மருத்துவ மனை, ஜெ.வுக்கு இருதய நிறுத்தம் வந்த 15 நிமிடங் கள் கழித்துதான் சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக ஆணையம் சொல்கிறது. ஆனால் 15 வினாடிகள் கழித்து அந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஜெ.வுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டுமென ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவர் ஜெ.வை சில நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு சொன்னார்.

ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் யாரும் அப்படி சொல்லவில்லை என பதிலளித்துள்ளது.

அரசு தரப்பு விரும்பும் விசாரணைக்கேற்ப ஆணைய வழக்கறிஞர்களை கேள்வி கேட்க தயங்கினாலோ சரியாக கேட்க மறுத்தாலோ ஆறுமுகசாமியே களத்தில் இறங்கிவிடுவார். உளவுத்துறை தலைவரான சத்தியமூர்த்தியை நீதிபதி கேள்வி கேட்க, இறுக்கத்துடன் ஆணையத்திலிருந்து வெளியே வந்ததாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள். ஆணையத்தில் வழக்கறிஞராக இருந்த பார்த்தசாரதி மூலமாக ஜெ.வின் சிகிச்சையில் இருந்த முரண்பாடுகளை கொண்டு வர நினைத்தார்கள். அவர் நியாயமான விவரங்களை கொண்டு வருவதோடு நிறுத்திக் கொண்டார். அதனால் அவரை நீக்கிவிட்டு நீதிபதி ஆறுமுகசாமியுடன் ஒரு காலத்தில் ஒன்றாக பணிபுரிந்தவரையே வழக்கறிஞராக கொண்டு வந்தார்கள்.

sasi

டிச.3-ம் தேதி ஆணைய வழக்கறிஞராக பதவியேற்ற அவர் 21-ம் தேதி ஆணையத்தின் அனைத்து ஆவணங்களையும் படித்து முடித்து விட்டது போல் ராதாகிருஷ்ணன், ராம்மோகன் ராவ், அப்பல்லோ, சசிகலா ஆகியோரை குற்றவாளிகள் என மனுதாக்கல் செய்கிறார். அந்த மனுவை அப்படியே மறுநாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியாகத் தருகிறார். இவை அனைத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் ஆணைய நிர்வாகத்தினரும்.

இந்த பாய்ச்சல் நிச்சயம் முதல்வர் எடப்பாடியின் கண் அசைவுப்படிதான் நடந் திருக்கிறது. சசிகலா தலைமையிலான அணியை இணைக்க பா.ஜ.க. ஜனவரி மாதம் வரை நேரம் கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தைகளில் சசிகலா, தினகரனை விட்டு தரத் தயாராக இல்லை. சசிகலாவை வழிக்கு கொண்டு வர எடப்பாடி சமீபகாலமாக ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை கூர்மையாக்கிக் கொண்டே வந்தார். கடைசி கட்டமாக ஆணைய வழக்கறிஞரை வைத்து அதிகாரிகள் மற்றும் சசிகலா, அப்பல்லோ ஆகியோர் கூட்டு சேர்ந்து சதி செய்து ஜெ.வுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ஆணையத்திலேயே குற்றம் சாட்டினார். அதற்கு அப்பல்லோவும் சசிகலாவும் சரியான பதிலை அளித்தார்கள். அதனால் ஆணையத்தின் வழக்கறிஞர் சொன்ன குற்றச்சாட்டுகளை அமைச்சர் சண்முகம் வாயிலாக சொல்ல வைத்திருக்கிறார்.

அமைச்சர் சண்முகம் அளித்த பேட்டியில் அவரால் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட சசிகலாவை மரியாதையுடன் "திருமதி சசிகலா' என குறிப்பிடுவது எடப்பாடி சொன்னதால்தான். எப்பொழுதும் எடப்பாடியின் வாய்சாக வெளிவரும் அமைச்சர் ஜெயக்குமார், சண்முகம் சொன்னதை ஆமோதிப்பதும் அதனால்தான் என்கிறது அ.தி.மு.க. தரப்பு. சசிகலா வந்தால் அவர் பொதுச்செயலாளர், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் ஒருங்கிணைப்பாளர்கள். தினகரனை எதிர்த்து சசிகலா வர வேண்டும். அணிகள் இணைய வேண்டும் என்பதற்காக அம்மாவை கொன்றது அதிகாரிகள்தான் என அமைச்சர் வாயாலே பேச வைத்து ஜெ.வின் மரண மர்மம் மறுபடியும் அரசியலாக்கப்பட்டுள்ளது என வருத்தப்படு கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.

-தாமோதரன் பிரகாஷ்