Advertisment

சொல்லாததையும் செய்லோம் சொல்லாமலும் செய்வோம் -முதல்வர் ஸ்டாலின்

cc

ரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தடா கோவில் பகுதியில், நவம்பர் 11 அன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச கூடுதல் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "பெய்யும் மழையால் மண் குளிர்ந்துகொண்டிருக்கிறது. மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியதில் என் மனம் குளிர்ந்துள்ளது. ஏற்கெனவே இந்த அரசு 1 லட்சம் இணைப்புகளை வழங்கியிருக்கிறது.

ரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தடா கோவில் பகுதியில், நவம்பர் 11 அன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச கூடுதல் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், "பெய்யும் மழையால் மண் குளிர்ந்துகொண்டிருக்கிறது. மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியதில் என் மனம் குளிர்ந்துள்ளது. ஏற்கெனவே இந்த அரசு 1 லட்சம் இணைப்புகளை வழங்கியிருக்கிறது. அதோடு சேர்த்து இன்று 50 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளது. மிகக்குறுகிய காலத்தில் இப்படி ஒரு சாதனையை, இந்தியாவிலேயே எந்த மாநிலமும் செய்யாததை தமிழகம் செய்து காண்பித்துள்ளது.

Advertisment

cm

நான் மேடைக்கு வந்தபோது என்னிடம் கொடுக்கப்பட்ட புத்தகத்தைப் பார்த்தேன். அதில் "பயனாளி கள் விவரம், தமிழக விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட...

உணவு உற்பத்தி பெருகிட...' என்று அச்சிடப்பட்டுள் ளதைத் திருப்பிப் பார்த்தேன். இந்த புத்தகத்தில் 20 ஆயிரம் பயனாளிகளின் பெயர், விலாசம், செல்போன் எண் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி எப்போதுமே டார்கெட் வைத்து செயல்படுபவர். எப்படியும் முடித்தே தீருவார். நான் சொல்லும்போது ஒரு சிலருக்கு புரியாமல் இருந்திருக்கும். ஆனால், புரிய வேண்டியவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். அவரோடு துணை நிற்கும் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரையும் முதலமைச்சராக இல்லை, ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள் சார்பில் பாராட்டுகிறேன்.

தமிழக உழவர்களை மகிழ்விக்கும் வகையில் 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்குவோம் என்று அறிவித்தோம். இது நடக்குமா, சாத்தியமா என பலர் கேள்வி எழுப்பினார்கள், ஆனால், நடக்குமா என்பதை நடத்திக் காட்டுவதும், சாத்தியமா என்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்ததவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர். அன்று, 1989-90ஆம் ஆண்டுகளில் இந்த திட்டம் செயல் படுத்தப்பட்டது. தமிழகத்தில் 30 ஆண்டு காலத்தில் அன்று முதல் இன்றுவரை உணவு உற்பத்தி பெருகக் காரணமாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது தான் கலைஞரின் மந்திரம். ஆனால் சொல்லாததையும், செய்வோம், சொல்லாம லும் செய்வோம்'' என்றார்.

விழாவில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

nkn161122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe