கரும்புத் தோட்டத்தில் குட்டிகளை தேடிவந்த சிறுத்தை! -ஒரு தாயின் பாசம்!

cc

தொட்டமுதுகரை. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள கிராமம். இங்கு விவசாயி தங்கராஜ், தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புப் பயிரில் உள்ள

தோகைகளுக்கு நடுவே இரண்டு சிறுத்தைக் குட்டிகள் ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டிருந்தன. பார்க்க பூனைக்குட்டி போல் இருந்தது.

கரும்புத் தொழிலாளர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாயி தங்கராஜ், உடனடியாக அருகே உள்ள ஜூரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிறுத்தைக் குட்டிகள் இருந்த இடத்திற்கு வந்த வனச்சரகர் காண்டீபன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கரும்புத் தோட்டத் தில் இருந்த சிறுத்தைக் குட்டிகளை மீட்டனர். பூனைக்குட்டி அன்பாக விள

தொட்டமுதுகரை. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள கிராமம். இங்கு விவசாயி தங்கராஜ், தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். தோட்டத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புப் பயிரில் உள்ள

தோகைகளுக்கு நடுவே இரண்டு சிறுத்தைக் குட்டிகள் ஒன்றோடொன்று விளையாடிக் கொண்டிருந்தன. பார்க்க பூனைக்குட்டி போல் இருந்தது.

கரும்புத் தொழிலாளர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாயி தங்கராஜ், உடனடியாக அருகே உள்ள ஜூரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிறுத்தைக் குட்டிகள் இருந்த இடத்திற்கு வந்த வனச்சரகர் காண்டீபன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கரும்புத் தோட்டத் தில் இருந்த சிறுத்தைக் குட்டிகளை மீட்டனர். பூனைக்குட்டி அன்பாக விளையாடுவதுபோல் இவைகளும் விளையாடின. தாய் சிறுத்தை எங்காவது பதுங்கியிருக்கிறதா என்பதை அப் பகுதி முழுக்க தேடினார்கள். தாய் சிறுத்தையின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. பிறகு வனத்துறை உயர் அதிகாரிகளிடம் என்ன செய்வது என்று தகவல் கேட்டனர்.

tt

சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறை உயர் அதிகாரிகள், "அந்த இடத்தில் கண்காணிப்புக் கேமரா வையுங்கள். உறுதியாக தாய் சிறுத்தை வர வாய்ப்புள்ளது' என்று கூறியிருக்கிறார்கள். கரும்பு வெட்டும் பணியை நிறுத்துமாறு கூறிவிட்டு அங்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தினார்கள். பிறகு வனத்துறை ஊழியர்கள் தங்களுக்கான பாதுகாப்புக் கருவிகளோடு அந்த சிறுத்தைக் குட்டிகளை அதே கரும்புத் தோட்டத்தில் விட்டுவிட்டு மதியம் முதல் இரவு வரை காத்திருந்தனர்.

சத்தியமங்கலம் காடு என்றால் ஒரு காலத்தில் அது சந்தன வீரப்பன் காடு என்று எல்லோராலும் அழைக்கப்பட்டது. அப்போ தெல்லாம் காட்டுக்குள் பயமுறுத்தும் விலங்கு என்றால் பெரும்பாலும் காட்டு யானைகள்தான். அடுத்து சில பகுதிகளில் காட் டெருமைகள் இருக்கும். புலிகள் மற்றும் செந் நாய்கள் காணப் படுவது கர்நாடக வனப்பகுதியான பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில்தான்.

பிறகு 2000-ஆம் ஆண்டு துவக்கத்தில் தாளவாடி மலைப்பகுதிகளுக்கு சிறுத்தைகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கின. அடுத்து புலிகளும் வனப்பரப்பிற்குள் வந்தன. இதன் பிறகே 2015-ல் சத்தியமங்கலம் காடு புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இப்போது புலிகளைக் காட்டிலும் சிறுத்தைகள் பெருகிவிட்டன.

பூனைக்குட்டிபோல் சிறுத்தைகளும் இனப் பெருக்கம் மூலம் காட்டுக்குள் ஆங்காங்கே குட்டி போடத் தொடங்கிவிட்டன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை மட்டுமில்லாமல் யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் வசிக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப் போது அடர்ந்த வனத்தை விட்டு வெளியேறி சம வெளிப் பகுதிக்கு வந்து அங்கு விவசாயிகள் விளைவித் துள்ள பயிர்களை சேதப்படுத்துவதோடு, கால்நடைகளை யும் அடித்துக் கொல்வது என கிராமங்களில் புகுந்து விடுகின்றன. அதனால் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில்தான்... அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் இயங்கத் தொடங்கின. இரவு 7.58 மணி யளவில் ஒரு பெரிய சிறுத்தை பவ்வியமாக மெல்ல மெல்ல முன்னோக்கி வந்தது. அதுதான் தாய் சிறுத்தை. கரும்புத் தோட்டத்தில் தனது குட்டிகளை விட்ட இடத்தில் தேடியது. குட்டிகள் இடம் மாறியிருந்தன. கண்களில் கோபம் கொப்பளிக்க, தான் ஈன்ற குட்டிகளுக்கு என்ன நடந்ததோ என்ற அபாய ஏக்கத்தில் "உஷ்...உஷ்...' என்ற பெருமூச்சுடன் ஒரு விதமான (அதாவது தாய்ப்பூனை குட்டிகளை அழைப்பதுபோல்) சத்தமிட் டது. தாயின் அழைப்பை கேட்ட சிறுத் தைக் குட்டிகள் கரும்புக் காட்டுக்குள் மேலும் கீழும் குதித்தன. தாய் சிறுத்தை குட்டிகளைக் கண்டுவிட்டது. தாய்ப் பாசத்துடன் அங்கு வந்த சிறுத்தை, தனது குட்டிகளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியதோடு பசியால் இருந்த குட்டி களுக்கு பாலூட்டத் தொ டங்கியது. இரு குட்டிகளும் பசியாறிய பிறகு மேலெ ழுந்து நின்று சுற்றுப்புறம் முழுக்க பார் வையால் அளந்தது. அதன்பிறகு தனது இரு குட்டிகளையும் வாயில் கவ்வி தூக் கிக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றது.

"நமது குடியுரிமை காடுதான், நாடு அல்ல' என்பதை தனது இரு குட்டி களோடும் சொல்லாமல் சொல்லிச் சென்றது தாய் சிறுத்தை.

-ஜீவாதங்கவேல்

nkn140120
இதையும் படியுங்கள்
Subscribe