பிப்ரவரி 19-ஆம் தேதி, 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிக பட்சம் எவ்வளவு செலவு செய்யலாம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நகராட்சி மன்ற வார்டு உறுப் பினருக்கு (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை) போட்டியிடுபவர் ரூ.85,000 வரை செலவழிக்கலாம் என செலவுத் தொகையை நிர்ணயித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறி விப்பை, பிரதான கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு வேட்பாளரும் பொருட்படுத்துவதே இல்லை. நீ என்ன சொல்வது? நானென்ன கேட்பது?’ என்கிற ரீதியிலேயே நடந்துகொள்கிறார்கள். உதாரணத்துக்கு, தேர்வு நிலை நகராட்சியான விருதுநகரையும், 30-வது வார்டில் நகர்மன்ற உறுப்பினருக்குப் போட்டியிடும் ஆளும்கட்சி வேட்பாளரான மாதவனையும் எடுத்துக் கொள்வோம்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை யுள்ள அரசியல் பிரமுகர் ஒருவர், ‘சத்தியமான உண்மை’ எனத் திறந்த மனதோடு பேசிய ‘விவ காரம்’ இது...
"விருதுநகரில் தி.மு.க. வெற்றிபெற்று சேர்மன் ஆகப்போவது மாதவன்தான் என்பது அக்கட்சி எடுத்த முடிவு. சும்மா கிடைத்துவிடுமா வெற்றி? அதற்கான விலையைக் கொடுப்பதற்கு ‘அனை வரும்’ தயாராகிவிட்டனர். எப்படி தெரியுமா?
மொத்தம் உள்ள 36 வார்டுகளில் 22 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள், தலைக்கு ரூ.5 லட்சம் வீதம், விருதுநகர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசனிடம் கொடுத் துள்ளனர். இந்த 5 லட்ச ரூபாயை முன்கூட்டி தந்த தாலேயே, அந்த 22 பேரும் தி.மு.க. வேட்பாளர் களாக முடிந்தது. வேட்பாளர் தேர்வு முதல் பணப் பட்டுவாடா வரையிலுமான பொறுப்பை நிர்வகிக்கும் எம்.எல்.ஏ. சீனிவாசனிடம், ‘மறைமுகத் தேர்தலில் சேர்மன் ஆக்குவோம்’ என்ற உத்தர வாதத்தைப் பெறுவதற்கு, 30-வது வார்டு வேட்பாளர் மாதவனும் ரூ.1 கோடி தந்துள்ளார். ஆக, தேர்தல் செலவுக்கான தொகை ரூ.2 கோடியே 10 லட்சம், பொறுப்பாளர் வசம் உள்ளது. இந்தப் பணம், வாக் காளர்களிடம் போய்ச் சேர் வது எப்படி?
விருது நகர் நக ராட்சியில் மொத்த வாக் காளர்களின் எண்ணிக்கை 62,494 ஆகும். 36 வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரே சீராக இல்லாமல், ஏற்ற இறக்கமாக இருக்கும். ஒரு கணக்குக்காக, மொத்த வாக்காளர்களையும் மொத்த வார்டுகளையும் வகுத்துப் பார்த்தால், வார்டுக்கு 1722 வாக்காளர்கள் தோராய மாக உள்ளனர். இந்த நகராட்சியில் தி.மு.க.வின் டார்கெட் 80 சதவீத வாக்காளர்களுடைய சுமார் 50,000 வாக்குகள்தான். ஓட்டுக்கு ரூ.500 வீதம் 50000 வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வதற்குத் தேவையான பணம் ரூ.2.5 கோடி. பொறுப்பாளரிடம் உள்ள ரூ.2 கோடியே 10 லட்சத்தோடு, கூடுதலாக ரூ.40 லட்சத்தை ஏதாவது ஒரு வழியில் தேற்றிவிடுவார்கள். ஒவ்வொரு வார்டுக்கும் பணத்தைச் சரியாகப் பிரித்துக் கொடுப்பது, யார் மூலம் நடக்கப்போகிறது தெரியுமா?
இதற்கென ஒரு குழு அமைக்கப்படும். ஒன்றி யத்தில் உள்ளவர்கள் சும்மாதானே இருக்கிறார்கள். அவர்களில் நம்பிக்கையானவர்கள் பொறுப்பாள ரின் (எம்.எல்.ஏ.) ஆள் என்ற கணக்கில் இடம் பெறுவார். வேட்பாளர் (மாதவன்) தரப்பில் ஒருவர், ஐபேக் சார்பில் ஒருவர் என மூவர் கொண்ட குழுவாக இயங்குவர். தேர்தல் நாளுக்கு மூன்று, நான்கு நாட்கள் முன்னதாக, 15-ஆம் தேதி பணத்தை வார்டுகளுக்கு எடுத்து வருவது பொறுப்பாளரால் நியமிக்கப்படுபவரது பணி. எந்தெந்த வாக்காளருக்கு பணம் தரவேண்டும் என வீடுகளைக் கை காட்டுவார் (சேர்மன்) வேட்பாளரின் பிரதிநிதி. இதனைக் கண்காணிப்பார் ஐபேக் நபர்.
மேலிடமே சொல்லிவிட்டது, -‘எம்.எல்.ஏ. எலக்ஷன்ல நாம ஜெயிச்சதுக்கு காரணம் 80 சதவீத வாக்காளர்களிடம் பணத்தை சரியாகக் கொண்டு போய்ச் சேர்த்ததுதான். இந்த உள்ளாட்சி தேர்த லிலும் அதேபோல் பிளான் பண்ணுங்க. வேட்பாளர்களிடம் முன்கூட்டி வசூலித்த தொகை குறைவாக இருந்தால், மீதித் தொகையை அந்த ஏரியா மந்திரியோ, எம்.எல்.ஏ.வோ கொடுத்துச் சரிக்கட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியிலிருந்து பணம் தரும் வழக்கம் இல்லை என்பது தெரிந்த விஷயம்தான்’என்று தமிழகமெங்கும் தி.மு.க.வினர் நடைமுறைப்படுத்தவுள்ள உள்ளாட்சி தேர்தல் பார்முலாவைப் போட்டு உடைத்தார்.
அட்வான்ஸாக ரூ.1 கோடி கொடுத்தீர்களாமே?’ என 30-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மாதவனிடம் கேட்டோம். “"இது தவறான தகவல். நான் மக்கள் பணி யாற்றுபவன். ஓட்டுக்கு வாக்காளர் களுக்கு பணம் தரமாட்டேன். தேர்தல் ஆணையம் ரூ.85,000 வரை செலவழிக்கலாம் என்று அறிவித்தது. என்னைப் பொறுத்தவரையில் ரூ.50,000 செலவழித்தாலே போதுமானது. என்னோடு தேர்தல் பணியாற்றுபவர்கள் இளைஞர்கள். யாரும் பணம் வாங்குவதில்லை. எங்க அய்யா 40 வருஷமா தி.மு.க.வுக்கு உழைத்திருக்கிறார். நான் 10 வருஷமா உழைக்கிறேன். பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனக்கு சேர்மன் சீட் கொடுக்கிறாங்க. நான் சேர்மன் ஆனபிறகு எல்லாமே அதிரடியா, சிறப்பா நடக்கும்.
ஏனென்றால், வார்டு வேட்பாளர்களாக நான் செலக்ட் பண்ணுன எல்லாருமே இளைஞர்கள். சோசியல் சர்வீஸ் மைன்ட் உள்ளவங்க. நான் சொன்ன ஆட்களைத்தான் வேட்பாளரா போட்டிருக்காங்க. நான் சரியா இருந்து, மற்றதெல்லாம் நொண்டிக்குதிரையா இருந்தால் என்னால் ஓடமுடியாது. உதயசூரியனில் போட்டியிடும் 23 (22+1) வேட்பாளர்களில் ரெண்டு மூணு பேர்தான் பெரியவங்க. அடாவடியான ஆளுங்க, அதிரடி பண்ணுறவங்க எல்லாத்தயும் கட் பண்ணியாச்சு. நான் உண்மைதான் பேசுகிறேன்''’என்றார் கூலாக.
வழக்கமாக தலைமையில் இருந்து கவனிக்கப் படும் அ.தி.மு.க. தரப்பில், இந்த முறை மாவட்ட நிர்வாகங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டதால் யாரும் இன்னமும் 10 ஆண்டுகள் சம்பாதித்த பெட்டியை திறக்கவில்லை. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஆர்வம் காட்டவில்லை.