Advertisment

கட்ட பஞ்சாயத்து அடாவடி! அகதிகளாகும் மீனவ மக்கள்!

vv

மீனவ சமுதாய முன்னோர்களால், கிராம மக்களின் நலனுக்காக உருவாக்கிய கிராம குழுக்களும், மீனவ கிராம பஞ்சாயத்து அமைப்புகளும் இன்று அதே மீனவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

Advertisment

vv

பூம்புகாரை சேர்ந்த லட்சுமணன், அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் ஒருவரது விசைப்படகில் வேலைபார்த்து, பிறகு தனது மருமகனுடன் சேர்ந்து விசைப்படகு ஒன்றை சொந்தமாக வாங்கி வெளியூரில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்தார். லட்சுமணனின் வளர்ச்சி பிடிக்காத அந்தத் தலைவர், தனது கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத் தைக்கூட்டி வெளியூருக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்யக்கூடாது என முதல் கட்டுப்பாட்டை விதித் தனர். அது பற்றி லட்சுமணன் கேள்வி கேட்டதால் அவரை யும் அவரது குடும்பத்தின ரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து அவர்களுடன் யாரும் பேசக்கூடாது, மீறினால் ஒரு லட்சம் அபராதம் என நாட்டாமை பட பாணியில் கட்டுப்பாடு போட்டுவிட்டனர். வேறுவழியின்றி காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார் லட்சுமணன். அங்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

மீனவ சமுதாய முன்னோர்களால், கிராம மக்களின் நலனுக்காக உருவாக்கிய கிராம குழுக்களும், மீனவ கிராம பஞ்சாயத்து அமைப்புகளும் இன்று அதே மீனவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் வருகின்றன.

Advertisment

vv

பூம்புகாரை சேர்ந்த லட்சுமணன், அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் ஒருவரது விசைப்படகில் வேலைபார்த்து, பிறகு தனது மருமகனுடன் சேர்ந்து விசைப்படகு ஒன்றை சொந்தமாக வாங்கி வெளியூரில் தங்கி மீன்பிடி தொழில் செய்துவந்தார். லட்சுமணனின் வளர்ச்சி பிடிக்காத அந்தத் தலைவர், தனது கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத் தைக்கூட்டி வெளியூருக்கு சென்று மீன்பிடித்தொழில் செய்யக்கூடாது என முதல் கட்டுப்பாட்டை விதித் தனர். அது பற்றி லட்சுமணன் கேள்வி கேட்டதால் அவரை யும் அவரது குடும்பத்தின ரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து அவர்களுடன் யாரும் பேசக்கூடாது, மீறினால் ஒரு லட்சம் அபராதம் என நாட்டாமை பட பாணியில் கட்டுப்பாடு போட்டுவிட்டனர். வேறுவழியின்றி காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார் லட்சுமணன். அங்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, பஞ்சாயத்தை மீறி புகார் கொடுத்ததற்காக 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மன வேதனைக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு சென்றுவிட்டனர் லட்சுமணன் குடும்பத்தினர்.

Advertisment

அருகே உள்ள வானகிரி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும், அவரது குடும்ப மும் இயேசுவை வணங்கியதால் அவர் களை ஊரைவிட்டு, ஒதுக்கிவைத்த னர். ரமேஷும், அவரது குடும்பத் தினரும், மன்றாடி ஓய்ந்து கிரா மத்தைவிட்டே சென்றுவிட்டனர்.

காரைக்காலை அடுத்துள்ள கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த அமுதாவின் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். துணையாக இருப்பது வயதான அம்மா மட்டுமே. தனி ஒருவ ராக நான்கு ஆண்டுகளாக பஞ்சாயத்தாரை எதிர்த்து போராடிவருகிறார் அமுதா. அதே கிராமத்தின் வனத் தாயின் உறவினர் களான பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை கொத்தாக ஒதுக்கி வைத்துவிட்டனர். மாவட்ட காவல் துறை, மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவ ரிட மும் புகார் அளித்தவர்கள் நக்கீரனிடம் தங்களின் குமுறலை வெளிப்படுத்தினர்.

""கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிளிஞ்சல்மேடு பஞ்சாயத் தார்களால் அவமானப்படுத்தப்பட்டு, வாழ்வாதா ரங்களை இழந்து தொழில் செய்யமுடியாமல், ஒரே இனத்தில் பிறந்து அனாதைகளைப்போல நாதியற்றவர்களாக வெளியூர்களில் தவிக்கின்றனர். பஞ்சாயத்து என்ற பெயரில் அபராதம், மீன் பிடிக்கத் தடை, மீன் விற்கத் தடை, ஊரிலிருந்து ஒதுக்கி வைத்தல் என்று இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு தீர்மானம் போடுவார்கள். குடும்பப் பிரச்சினையிலும் தலையிட்டு விவகாரத்தும் கொடுப்பார்கள். போலீசில் புகார் கொடுக்கும் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்து, அவர்கள் வீட்டில் சாவு விழுந்தாலும் யாரும் போகக்கூடாது எனக் கட்டுப்பாடு விதிப்பார்கள். இந்த அநியாயத்தை யாராவது எதிர்த்துக் கேட்டால், அவர்களையும் கட்டம் கட்டி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள்.

kk

வேறு கிராமங்களுக்கு தொழில் செய்யப் போனால் அங்கேயும் பஞ்சாயத்து கட்டுப்பாடு என்கிற பெயரில் கிராம லெட்டர் பேடில் தகவல் கொடுத்து தொழில் செய்யவிடாமல் தடுத்து வாழவிடாமல் செய்துடுவாங்க, இப்போது எங்களுக்கும் அந்த நிலைமை வந்திருக்கு, இனி யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாதுனுதான் நீதிமன்றம் வரை செல்கிறோம்''’ என்கிறார்கள் ஆதங்கமாக.

ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டுள்ள மாற்றுத்திற னாளி கோதண்டபானி, தன் வீட்டின் இடிபாடு களை ஒரு இடத்தில் கொட்டி வைத்தார் என்பதற் காக பஞ்சாயத்தார் குடும்பத்தினரால் அவமானப் படுத்தப்பட்டு, 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள் ளார். சோற்றுக்கே போராடும் அவர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. “மூன்று பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொள்வதை விட வேறு என்ன செய்யமுடியும்'' என்கிறார் கலங்கியபடியே.

வனத்தாய் குடும்பத்தைச் சேர்ந்த வீரதாச னோ, ""சில மாதங்களுக்கு முன்பு அம்மன்கோவில் பத்து மீனவகிராமத்தில் சில குடும்பங்களை ஒதுக்கிவைத்ததற்காக அந்த பஞ்சாயத்தையே கலைக்க செய்தார் மாவட்ட ஆட்சியர், அதே ஆட்சியர் கிளிஞ்சல்மேட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தலையிட தயங்குவது ஏன், எந்த அரசியல் தடுக்கிறது?'' எனக் கேட்கிறார்.

கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த அமுதா சுபாஷ் சந்திரபோஸ் கூறுகையில்,’""வீட்டில் தூங்கும் போது நள்ளிரவில் மிரட்டுவாங்க, வெளியில் சென்றால் வம்பிழுப்பாங்க, ஆபாச வார்த்தைகளால் வசை பாடுவாங்க, புதுசு புதுசா நம்பர்ல இருந்து போன் போட்டு ஆபாசமாக பேசுவாங்க, இதையெல்லாம் எனது குழந்தைக்காகவும், கணவருக்காகவும் நான்கு வருடமாக சகித்துக் கொண்டு போராடி வருகிறேன். நானும் மீனவர்தான், எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி ஒடுக்கிவைப்பவர்களும் மீனவர்கள்தான். சொந்த மக்களையே ஒடுக்கிவைக்கும் கேவலமான நிலைமை இன்னும் தொடர்கிறது'' என்கிறார்.

ஒதுக்கிவைக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞர்கள், சங்கமித்திரனும், சிவச்சந்திரனும் கூறுகையில்,’""அந்த மக்களுக்கு மீன்பிடி தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது, பாதிப்புகள் குறித்து காவல்நிலையத்திற்கோ, அதிகாரிகளிடமோ முறையிட்டால் உங்க பஞ்சாயத்துல தீர்த்துக்கோங்க என்று அனுப்பிடுவாங்க, இதுபஞ்சாயத்தார்களாக இருப்பவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ய உதவியாக அமைந்துவிடுகிறது'' என்கிறார்கள்.

நடுக்கடலில் வெளிநாட்டு கடற்படை உயிர் பறிக்கிறது. சொந்த கிராமத்தில், பஞ்சாயத்தாரே பாடாய் படுத்துகிறார்கள். தரையிலும் தண்ணீ ரிலும் தத்தளிக்கிறது மீனவர் வாழ்வு.

-க.செல்வகுமார்

nkn120920
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe