கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வருகிற பத்னாபுரம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசன் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற ஊராட்சி அலுவலகத்தை கடந்த பத்து வருடமாக குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் துப்புரவு வேலை செய்துவருபவர் ஆனந்தவல்லி என்கிற நடுத்தரவயதுப் பெண்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/communist_5.jpg)
அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த விளிம்புநிலைப் பெண்ணான ஆனந்தவல்லி, அந்த ப்ளாக் அலுவலத்தை தினக்கூலி அடிப்படையில் காலை, மாலை கூட்டிப் பெருக்கிவிட்டு
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வருகிற பத்னாபுரம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசன் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற ஊராட்சி அலுவலகத்தை கடந்த பத்து வருடமாக குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் துப்புரவு வேலை செய்துவருபவர் ஆனந்தவல்லி என்கிற நடுத்தரவயதுப் பெண்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/communist_5.jpg)
அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த விளிம்புநிலைப் பெண்ணான ஆனந்தவல்லி, அந்த ப்ளாக் அலுவலத்தை தினக்கூலி அடிப்படையில் காலை, மாலை கூட்டிப் பெருக்கிவிட்டுப் பின்பு அங்குள்ள வீடுகளிலும் பாத்திரங்கள் துலக்கிப் பிழைப்பை ஓட்டுபவர். கணவர் மோகனன் பெயிண்ட்டிங் வேலை செய்யும் தொழிலாளி என்றாலும் சி.பி.எம்.மின் ஊராட்சிச் செயலாளர் பொறுப்பிலுமிருப்பவர்.
ஆரம்பக் கல்வியை மட்டுமே அடிப்படை யாகக் கொண்ட ஆனந்தவல்லியை சி.பி.எம். இம்முறை பத்னா புரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் தனது கேண்டிடேட்டாக நிறுத்தியது. மேல்தட்டு, நடுத்தர வர்க்கம் என்று கலவையான ஜனத்தொகையைக் கொண்ட அந்தப் பொது வேட்பாளர் களுக்கான ஊராட்சியில், சேலஞ் சாக தாழ்த்தப்பட்ட ஆனந்த வல்லியை சி.பி.எம். களமிறக்க, இதனை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டனர் எதிர் வேட்பாளர்களான காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள்.
நான்குமுனைப் போட்டியில் தேர்தல் களம் கொதிநிலையில் இருந்தது. இறுதியில் மற்ற வேட்பாளர்களை விட 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உறுப்பினராகிவிட்டார் ஆனந்தவல்லி.
அடுத்த அதிசயமாக எந்தப் ப்ளாக் ஆபீஸை ஆனந்தவல்லி பத்துவருடமாக குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிச்
சுத்தமாக்கினாரோ, அதே பத்னாபுரம் ஊராட்சியின் தலைவராக்கி விட்டனர் இடதுசாரிகள். ப்ளாக் ஆபீஸை சுத்தப்படுத்திய ஆனந்தவல்லி தற்போது ஊராட்சியையே சுத்தப்படுத்தக் கிளம்பியிருக்கிறார்.
""நான் கனவிலகூட இந்த மாதிரி நடக்கும்னு நெனைச்சுப் பாக்கல. தினமும் ஆபீஸ்ல நடக்குறதப் பாத்திருக்கேன். பார்ட்டி தந்த வேலய நிச்சயம் நல்லபடியாச் செய்வேன்'' என்கிறார் ஆனந்தவல்லி.
21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் சி.பி.எம்.மின் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர்.
அடுத்து, தாழ்த்தப்பட்ட விளிம்புநிலைப் பெண்ணை பொதுத்தொகுதியில் நிற்கவைத்து அதன் தலைவராகவும் மாற்றியதோடு கோபுரத்தில் வைத்திருக்கிறார்கள். "இந்தியாவில் ஒரு குப்பை கூட்டும் பெண் ஒருவர் அந்த அலுவலகத்தின் தலைவரானதாக இதுவரை வரலாறில்லை' என்கிறார்கள் தோழர்கள்.
கடவுள்களின் தேசத்தில் தான் இந்த அற்புதங்கள்.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us