கசந்துபோன லண்டன் வாழ்க்கை! -நீதிகேட்டு போராடும் சரண்யா!

saranya

ங்கிலாந்துவாழ் குடிமகள் சரண்யா, திருமண வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகளை மட்டுமே சந்தித்து வருகிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அடுத்து மேட்ரிமோனி மூலம் அசோக் என்ற வரனைத் தேர்வு செய்து நடந்த திருமணமும் கசப்பானதாகவே இருக்கிறது. ஒன்றரை வயது மகனுடன் தமிழகம் வந்து, கணவரின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று, ‘என்னைத் தவிக்கவிட்டு தலைமறைவாக இருக்கிறார் அசோக்..’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.

saranya

‘150 சவரன் தங்க நகைகள், ரொக்கமாக ரூ.10 லட்சம், லண்டனுக்கு அழைத்துச் செல்வதற்கு விசா செலவு ரூ.4 லட்சம் என வரதட்சணையை அள்ளிக்கொடுத்தும், குடித்துவிட்டு அசோக் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார். உனக்கு

ங்கிலாந்துவாழ் குடிமகள் சரண்யா, திருமண வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகளை மட்டுமே சந்தித்து வருகிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அடுத்து மேட்ரிமோனி மூலம் அசோக் என்ற வரனைத் தேர்வு செய்து நடந்த திருமணமும் கசப்பானதாகவே இருக்கிறது. ஒன்றரை வயது மகனுடன் தமிழகம் வந்து, கணவரின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று, ‘என்னைத் தவிக்கவிட்டு தலைமறைவாக இருக்கிறார் அசோக்..’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.

saranya

‘150 சவரன் தங்க நகைகள், ரொக்கமாக ரூ.10 லட்சம், லண்டனுக்கு அழைத்துச் செல்வதற்கு விசா செலவு ரூ.4 லட்சம் என வரதட்சணையை அள்ளிக்கொடுத்தும், குடித்துவிட்டு அசோக் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார். உனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறேன். உன்னை நிம்மதியாக வாழவைக்க நீதான் எனக்கு சம்பாதித்துப் போடவேண்டும்’ என்று வேலைக்கே செல் லாமல், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கத்தியால் குத்த வந்தார். லண்டன் போலீசார் விசாரித்ததெல்லாம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மாமனார் வீட்டில் என்னை எட்டி உதைத்து, உயிர் பயத்தை ஏற்படுத்தி விரட்டினார்கள்’என, மோசடிப் பேர்வழியான கணவர் அசோக் மற்றும் மாமியார் விஜயலட்சுமி உள்ளிட்டோர் மீது வரதட்சணை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் சரண்யா, தனது சோகத்தை நம்மிடம் கொட்டினார்.

சரண்யா கூறிய குற்றச்சாட்டு களை மறுத்துப் பேசிய அவருடைய அத்தை விஜயலட்சுமி “"லண்டனிலும், இங்கே ஸ்ரீவில்லிபுத்தூரிலும் சரண்யா கொடுத்தது போலியான புகார். நாங்க வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ இல்லை. இழப்பீடாக ஒரு கோடி வேண்டுமாம். மாதச் செலவுக்கு என் மகன் பத்து லட்சம் கொடுக்கணுமாம். கேஸ் போட்டிருக்கா. பணம் பறிப்பதே அவளுடைய நோக்கம். நாங்கதான் ஏமாந்துட்டோம். என் மகனுடைய வாழ்க்கையை பலி கொடுத்துட்டோம். ஸ்ரீவில்லிபுத்தூர் என்ன லண்டனா? வீட்டில் அரைகுறை ஆடையுடன் நடமாட எப்படி அனுமதிக்க முடியும்? அவ இங்கே வீட்ல இருந்த நான்கு நாட்களும் நரக வேதனைய அனுபவிச் சோம். நான் பிரிட்டிஷ் சிட்டிசன்னு அவ போட்ட ஆட்டம், பேசிய கெட்ட வார்த்தையெல்லாம் கொடுமையானது. என் மகன் ஒன்றும் தலை மறைவாக இல்லை''’ என்றார்.

saranya

லண்டனிலிருந்து நம்மைத் தொடர்பு கொண்ட அசோக், "இங்கே நம்ம நாட்டுல மனைவியை கணவன் கொடுமைப்படுத்துற மாதிரி, லண்டன்ல சரண்யா என்னைக் கொடுமைப்படுத்தினாள். என்னுடைய மாமனார் செத்துப்போனதா பொய்யா ஒரு சர்டிபிகேட் வாங்கி, அப்புறம் அவருக்கு வேற பேருல பாஸ்போர்ட் வாங்கி, லண்டன்ல குடித்தனம் நடத்துற கொடுமைய பார்த்ததும் பயமாப் போச்சு. செத்துப்போன ஒரிஜினல் அப்பா வேற, வளர்ப்புத் தந்தை வேறன்னு பெரிய நாடகமே நடத்துறாங்க. வீட்டுக்குள்ள ஒருத்தரோட ஒருத்தர் பேச மாட்டாங்க. என்ன கல்ச்சரோ? இதையெல்லாம் கேட்டதுனால, என்னை வீட்ட விட்டு வெளில விரட்டிட்டாங்க.

தங்கக்கூட இடமில்லாம லண்டன்ல நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். லண்டன் கோர்ட்ல ஒரு வருஷத்துக்கு முன்னாலயே விவாகரத்து கேட்டிருக்கேன். லண்டன்ல வழக்கை சந்திக்கிறத விட்டுட்டு தமிழ்நாட்டுக்கு போயி பிரச்சனை பண்ணுறா. லண்டன்ல வேலை பார்க்கவிடாம என்னை விரட்ட ணும்கிறதுதான் அவளோட திட்டம்''’என்று புலம்பினார்.

சரண்யாவோ, "என்னமா பொய் பேசுறாங்க. நடக்காதத நடந்த மாதிரி சொல்லுறாங்க. தமிழ்நாட்டுல பெண்களுக்கு நீதி கிடைக்கும்கிற நம்பிக்கையில வந்திருக்கேன். குழந்தையுடன் என்னைப் பரிதவிக்கவிட்டதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும். இது நடக்காம நான் லண்டன் திரும்பமாட்டேன்''’என்றார் உறுதியான குரலில்.

இன்புற்று வாழாமல் எதற்காகப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர்? அவர்களுக்கே வெளிச்சம்!

nkn171121
இதையும் படியுங்கள்
Subscribe