ரெய்டுக்கு வரப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துள்ளார் வேலுமணி. தமிழக காவல்துறையில் இருக்கும் உயரதிகாரி ஒருவர் மூல மாகவே வேலுமணியின் சகோதரருக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இருந்தார் வேலுமணி. உடனே அங்கிருந்து கிளம்பி எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு வந்தார். கட்சியினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு முன்பாகவே எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு அ.தி.ம
ரெய்டுக்கு வரப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்துள்ளார் வேலுமணி. தமிழக காவல்துறையில் இருக்கும் உயரதிகாரி ஒருவர் மூல மாகவே வேலுமணியின் சகோதரருக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இருந்தார் வேலுமணி. உடனே அங்கிருந்து கிளம்பி எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு வந்தார். கட்சியினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு முன்பாகவே எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு அ.தி.மு.க.வினர் வந்துவிட்டனர்.
ரெய்டுக்கு வந்த லஞ்சஒழிப்புத் துறையினரிடம், "எம்.எல்.ஏ. விடுதியில் ரெய்டு நடத்தணும்னா சபாநாயகரின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி இருக்கிறதா உங்க கிட்டே?' என எகத்தாளமாக கேட்டிருக்கிறார்கள் கட்சி யினர். நிலைமையை உணர்ந்த வேலுமணி, "போலீஸார் அவங்க கடமையை செய்ய வந்திருக்காங்க; தடுக்காதீங்க'' என அ.தி.மு.க.வினரை அதட்டினார். சோதனையில் பெரிதாக எதுவும் சிக்க வில்லையாம்.
முதல்வர் ஸ்டாலினை லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் கந்தசாமி சந்தித்தபோது, ரெய்டு தகவல் முன்கூட்டியே கசிந்தது பற்றிக் கேட்டுள்ளார் முதல்வர். தயக்கமான குரலில், “"விசா ரிக்கிறேன்''’என்றிருக்கிறார் கந்தசாமி.
பொதுவாக, ரெய்டு நேரத்தில் முதல்வரை ல.ஒ.துறை இயக்குநர் சந்திப்பது மரபல்ல. அதற்கு முன்பாக சில சந்திப்புகள் நடப்பதுதான் வழக்கம் என்கிறார் கள் துறையினர். முதல்வருடன் இயக்குநர் கந்தசாமியின் சந்திப்புக்குப் பிறகு, 60 இடங்களி லும் நடத்திய சோதனையை ஒரே நாளில் முடித்துக்கொண் டது லஞ்ச ஒழிப்புத்துறை. ரெய்டு முடிந்ததும், கோவையில் இருந்த வேலுமணியின் சகோதரர் அன்பரசனை 10-ந் தேதி இரவு 9:30 மணிக்கு சந்தித்தார் லாட் டரி அதிபர் மார்ட்டினின் மாப் பிள்ளை. கிட்டத்தட்ட 1 மணி நேரம் அந்த சந்திப்பு நீடித்தது.
லாட்டரித் தரப்பு, சித்தரஞ்சன் சாலையிலும் செல்வாக்காக இருப்பதால், அவர்கள் தரப்பிலிருந்து கிடைத்த வாக்குறுதியை மீறி ரெய்டு நடத்தியதற்காக கோபம் காட்டினாராம் அன்பரசன். "இனி பிரச்சினை இருக்காது' என லாட்டரித் தரப்பு சொன்னதாக செய்திகள் கசிகிறது. இந்த சந் திப்புக்குப் பின், வேலுமணியைத் தொடர்புகொண்டு பேசிய அன்பரசன், தனது மற்றொரு சகோதரரான செந்திலை அழைத்துக்கொண்டு அந்த இரவிலேயே திருச்செந்தூருக்கு கிளம்பிச் சென்றார். அதேபோல, 11-ந் தேதி விடியற்காலையில் சென்னையில் தூத்துக்குடி விமானத்தைப் பிடித்து திருச்செந்தூருக்கு சென்றார் வேலுமணி. மூவரும் அங்கு ஆலோசித்திருக்கிறார்கள்.
-இரா.இளையசெல்வன்
படம்: குமரேஷ்