Advertisment

தலைமைக் கழக சீல்! ரத்தத்தின் ரத்தங்கள் கலவர அ.தி.மு.க.! -லைவ் ரிப்போர்ட்!

admkoffice

1989-ல் அ.தி.மு.க. ஜா.அணி, ஜெ.அணி மோத-ன்போது அ.தி.மு.க. தலைமைக் கழகம் சீல் வைத்து மூடப்பட்டது. அதுபோல ஜூலை 11-ந் தேதி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலையொட்டி மீண்டும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அடுத்தகட்டமாக இரட்டை இலை யாருக்கு என்கிற போராட்டம் தீவிரமடைகிறது என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

admkoffice

பொதுக்குழு நடக்கும் ஜூன் 11-ந் தேதி ரத்தக் கலவரம் வெடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பு, சரியாக 9:00 மணிக்கு வெளியானது. அந்தத் தீர்ப்பில்... ஓ.பி.எஸ். பொதுக்குழுவில் தனது பலத்தை நிரூபிக்கவில்லை. அவர் கோர்ட்டுக்குத்தான் வருகிறார். இதில் உச்சநீதிமன்றம் சரியான வழிகாட்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பட்டது. எனவே 11-ந் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா? ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியுமா? என கேள்வி எழுந்தது.

23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் இந்தப் பதவிகள் அங்கீகாரத்துக்கு உள்ளாகியிருந்தால் இந்த பதவிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்தப் பதவிகளை 23-ந் தேதி நடந்த பொதுக் குழு நிராகரித்துவிட்டது. அதனால் இந்தப் பதவிகள் கிடையாது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பி

1989-ல் அ.தி.மு.க. ஜா.அணி, ஜெ.அணி மோத-ன்போது அ.தி.மு.க. தலைமைக் கழகம் சீல் வைத்து மூடப்பட்டது. அதுபோல ஜூலை 11-ந் தேதி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகளுக்கிடையே நடைபெற்ற மோதலையொட்டி மீண்டும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அடுத்தகட்டமாக இரட்டை இலை யாருக்கு என்கிற போராட்டம் தீவிரமடைகிறது என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

admkoffice

பொதுக்குழு நடக்கும் ஜூன் 11-ந் தேதி ரத்தக் கலவரம் வெடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பு, சரியாக 9:00 மணிக்கு வெளியானது. அந்தத் தீர்ப்பில்... ஓ.பி.எஸ். பொதுக்குழுவில் தனது பலத்தை நிரூபிக்கவில்லை. அவர் கோர்ட்டுக்குத்தான் வருகிறார். இதில் உச்சநீதிமன்றம் சரியான வழிகாட்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பட்டது. எனவே 11-ந் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கிறதா? ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியுமா? என கேள்வி எழுந்தது.

23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் இந்தப் பதவிகள் அங்கீகாரத்துக்கு உள்ளாகியிருந்தால் இந்த பதவிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்தப் பதவிகளை 23-ந் தேதி நடந்த பொதுக் குழு நிராகரித்துவிட்டது. அதனால் இந்தப் பதவிகள் கிடையாது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்ட விரும்பினார்கள் என்பதால் பொதுக்குழு கூடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற ஓ.பி.எஸ்.ஸின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பு வரும்போது சரியாக காலை 9:00 மணி ஆகியிருந்தது. பொதுக்குழு ஏற்பாடுகள் ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் காலை 7:00 மணிக்கே உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். தீர்ப்பு வரும் நேரத்தில் எடப்பாடி தனது வீட்டிலிருந்து சாலை மார்க்கமாக பொதுக்குழுவுக்கு புறப்பட்டிருந்தார்.

ஓ.பி.எஸ். தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இ.பி.எஸ். புறப்பட்டார் என தகவல் தெரிந்ததும், ஓ.பி.எஸ். டெல்லியைத் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தார். இ.பி.எஸ்., காங்கிரஸ் பக்கம் சாய்கிறார். அவர் பா.ஜ.க.வை விட்டு விலகிச் செல்கிறார். அவர் கையில் கட்சி சென்றால் நிலைமை அவ்வளவுதான்… என டெல்லியிலிருக்கும் பா.ஜ.க.வினரிடமும் தமிழகத்தில் ஓ.பி.எஸ்.ஸை ஆதரிக்கும் பா.ஜ.க.வினரிடமும் ஓ.பி.எஸ்.ஸும் மனோஜ்பாண்டியனும் விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

Advertisment

admkoffice

அங்கிருந்து சில கட்டளைகள் வந்தவுடன் திடீரென ஓ.பி.எஸ். தனது பிரச்சார வேனில் ஏறி நான் தலைமைக்கழகம் செல்கிறேன் என புறப்பட்டார், ஓ.பி.எஸ்.ஸின் இந்த மூவை இ.பி.எஸ். தரப்பு எதிர்பார்க்கவில்லை. ஓ.பி.எஸ். தலைமைக் கழகம் செல்வதற்கு முன்பு வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, விருகை ரவி ஆகியோரிடம் உடனடியாக தலைமைக் கழகம் செல்லுங்கள் என உத்தரவு பிறப்பித்தார் எடப்பாடி. அதற்கு முன்பே ஓ.பி.எஸ். ஆட்களும் சசிகலாவின் ஆட்களும் தலைமைக் கழகத்துக்கு வந்துவிட்டார்கள்.

சந்தனக் கலர் சட்டை போட்ட எடப்பாடி ஆதரவாளர் ஒருவர் ஓ.பி.எஸ். டீமுக்கு எதிராக வம்பிழுத்தார். அவரை பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்த மோதல், கல்வீச்சு. கார் உடைப்பு என நீண்டது. திடீரென ஓ.பி.எஸ். தொண்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

இரு தரப்பும் சமமாக மோதிக்கொண்ட நிலையில்… திடீரென அங்கு குவிந்த ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள், போலீஸ் ஆதரவுடன் ஓ.பி.எஸ்.ஸின் வேன் தலைமைக் கழகத்திற்குள் நுழைந்தது. நுழைந்தவுடன் தனது வேனை இ.பி.எஸ்.ஸின் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினார் ஓ.பி.எஸ்.

அவர் இறங்குவதற்குள் தலைமைக் கழகத்தில் இருந்த எடப்பாடியின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. பூட்டப்பட்டிருந்த தலைமைக் கழகத்தின் பூட்டு உடைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சிலைக்கு அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்., நேராக தலைமைக் கழகத்தின் மாடிக்கு சென்று தொண்டர்களை நோக்கி கும்பிட்டார். தொண்டர்கள், தலைமைக்கழகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் வண்டிகளில் ஏற்றினார்கள். எடப்பாடி யின் படத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

இதற்குள் போலீஸ் பெரும் படையுடன் வந்தது. எடப்பாடியின் தொண்டர்கள் ஓட ஆரம்பித்தார்கள். அவர் கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்கள்.

admkoffice

இப்படி... தலைமைக் கழகத்தில் மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது வானகரத்தில் செயற்குழு கூட்டத்தில் இ.பி.எஸ். தற்காலிக பொதுச்செயலாளர், ஓபிஎஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் தனித் தீர்மானமாக இபிஎஸ் தற்காலிகப் பொதுச்செயலாளர் என கொண்டுவரப்பட்டது. 4 மாதங்களில் அவர் முறையான பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதுவரை பொதுச் செயலாளர் என்றால் அது ஜெ.தான் என்கிற சிறப்பு மரியாதை அளிக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

கோடிக்கணக்கில் செலவு செய்து கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில், சிறப்புத் தீர்மானம் மூலமாக ஓ.பி.எஸ்., ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய நால்வரும் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர்.

வெறும் டீச்செலவுடன் தொண்டர்களை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திரட்டிய ஓ.பி.எஸ்., "அ.தி.மு.க.விலிருந்து எடப்பாடி பழனிச்சாமியையும், கே.பி.முனுசாமியையும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கியதாக' செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில்... மத்திய வருமானவரித்துறை கோவை வடவள்ளியில் சந்திரசேகர், சந்திரப்பிரகாஷ், மற்றும் ராஜன் காண்ட்ராக்டர் செய்யாதுரை ஆகியோரது வீடுகளில் நடத்தி வந்த ரெய்டு தொடர்ந்தது. அந்த ரெய்டின்போது சந்திரசேகர் வருமானவரித்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார் என்கிற செய்தி வலுவாக வெளியில் பரவியது. எம்.எல்.ஏ.க்களுக்கு 5 கோடி, மாவட்டச் செயலாளருக்கு 10 கோடி, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 10 லட்சம் என இந்த பொதுக்குழுவை நடத்துவதற்காக 1000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக இவர்களின் வீடுகளில் ஆவணப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடக்கம்தான். அடுத்த கட்டமாக விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கு பொள்ளாச்சி ஜெய ராமனுக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வழக்கு என சி.பி.ஐ.யில் இருக்கக்கூடிய வழக்குகள் தூசு தட்டப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக எந்த அப்பீலையும் 11-ந் தேதி ஓ.பி.எஸ். தரப்பு முன்னெடுக்க வில்லை. ஆனால் இ.பி.எஸ். தரப்பு பொதுக்குழு தீர்மானங்களுடன் தேர்தல் கமிஷனிடம் வரும்போது இந்தப் பொதுக்குழு சட்டவிரோதமானது என ஓ.பி.எஸ். தரப்பு முறையீடு செய்ய காத்திருக்கிறது. அப்பொழுது பா.ஜ.க. தரப்பு இரட்டை இலையை முடக்கும் வேலைகளைச் செய்யும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்,

அட்டை மற்றும் படங்கள் : குமரேஷ்

nkn130722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe