நீதிமன்ற வழக்கு ஆவணங்களை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இணைய வழியில் மட்டுமே தாக்கல் (இ-பைலிங்) செய்வது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கட்டாய இ-பைலிங் நடைமுறையைக் கைவிடும்படி உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் டிச. 2-ஆம் தேதி முதல் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் ஒரு வார காலத்தில் முடிவுக்கு வந்துவிடுமென்று எதிர்பார்த்திருந்த வேளையில், காலவரையற்ற போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. இதனால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, வழக்காடிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இ-பைலிங் நடைமுறையால் என்னதான் பிரச்னை? என்று வழக்கறிஞர்களிடம் பேசினோம்.
சேலம் வழக்கறிஞர் பூமொழியிடம் கேட்டபோது, "இ-பைலிங் நடைமுறையை வழக்கறிஞர்கள் எதிர்க்கவில்லை. அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைத்தான் எதிர்க்கிறோம
நீதிமன்ற வழக்கு ஆவணங்களை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இணைய வழியில் மட்டுமே தாக்கல் (இ-பைலிங்) செய்வது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு நாடுமுழுவதும் வழக்கறிஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கட்டாய இ-பைலிங் நடைமுறையைக் கைவிடும்படி உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தி, தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் டிச. 2-ஆம் தேதி முதல் தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் ஒரு வார காலத்தில் முடிவுக்கு வந்துவிடுமென்று எதிர்பார்த்திருந்த வேளையில், காலவரையற்ற போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. இதனால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, வழக்காடிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இ-பைலிங் நடைமுறையால் என்னதான் பிரச்னை? என்று வழக்கறிஞர்களிடம் பேசினோம்.
சேலம் வழக்கறிஞர் பூமொழியிடம் கேட்டபோது, "இ-பைலிங் நடைமுறையை வழக்கறிஞர்கள் எதிர்க்கவில்லை. அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைத்தான் எதிர்க்கிறோம். உதாரணமாக, குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், வாய்தா நாளன்று, கடைசி நேரத்தில் திடீரென்று நீதிமன்றத்தில் ஆஜராகமுடியாத நிலை ஏற்படும்போது, பி.என்.எஸ்.எஸ். சட்டம் பிரிவு 355-ன்படி, (முன்பு, சி.ஆர்.பி.சி. பிரிவு 317) நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் "ஆப்சென்ட் பெட்டிஷன்' தாக்கல் செய்யவேண்டும்.
புதிய முறை அமலுக்கு வந்ததால், "355 பெட்டிஷன்' மற்றும் அது சார்ந்த ஆவணங்களை முதலில் இ-பைலிங் செய்யவேண்டியது கட்டாயமாகிறது. பின்னர், இ-பைலிங் செய்த அசல் ஆவணங்களை வழக்கம்போல் நீதிபதி முன்பு நேரில் சமர்ப்பிக்கவேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/19/lawyers1-2025-12-19-11-25-37.jpg)
அவசரமான சூழ்நிலை யில், இ-பைலிங் மையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் ஒரு வழக் கறிஞரால் ஓடிக்கொண்டிருக்க முடியுமா? அதற்குள், குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆஜராக வில்லை என்று நீதிபதி அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கலாம் அல்லது வேறு ஒரு வாய்தா தேதி குறிப்பிடவும் வாய்ப்பிருக்கிறது. இப்போதும், ஸ்மார்ட் போன் வசதியில்லாத வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, நீதிமன்ற ஊழியர்களுக்கேகூட இன்னும் இ-பைலிங்கில் போதிய தெளிவும் பயிற்சியுமில்லை. இந்த புதிய நடைமுறையை உடனடியாக உச்சநீதிமன்றம் கைவிடவேண்டும்'' என்கிறார் வழக்கறிஞர் பூமொழி.
சேலம் வழக்கறிஞர் பார்த்திபநாதன் கூறுகையில், "காகிதமில்லா நீதிமன்றப் பணி களுக்கும், மரங்கள் அழிக்கப்படாமல் இயற்கை வளம் காக்கப்படுவதற்கும் இ-பைலிங் நடைமுறை பயனுள்ளதாக இருக்கும். ஆவணங்களை எளிதாக சரிபார்த்துவிடலாம். வெளிப்படைத்தன்மை இருக்கும். போலி வழக்கறிஞர்கள் உள்ளே நுழைவதையும் இ-பைலிங் முறையால் தடுக்க முடியும். இதுபோன்ற நன்மைகள் இருந்தாலும், இ-பைலிங் செய்ய நீதிமன்றங்களிலுள்ள இ-சேவை மையங்களுக்குத்தான் போகவேண்டிய நிலை உள்ளது. அங்கே போனால், ஏற்கனவே பல வழக்கறிஞர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்த புதிய நடைமுறையால் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்களுக்குத்தான் நன்மையே தவிர, வழக்கறிஞர்களுக்கு பணிச்சுமையும், மன அழுத்தமும் அதிகரித்துள்ளது,'' என்கிறார் வழக்கறிஞர் பார்த்திபநாதன்.
சேலம் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் நரேஷ்பாபுவிடம் பேசினோம். "அனைத்து வகை வழக்கு ஆவணங்களையும் இ-பைலிங் முறை யில்தான் தாக்கல் செய்யவேண்டுமென்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. நீதிமன்றத்திலுள்ள இ-சேவை மையங்களில் கட்டணமின்றி இ-பைலிங் செய்துகொள்ள வசதியிருக்கிறது. ஆனால், அங்கேயும் ஒரே நேரத்தில் பல வழக்கறிஞர்கள் குவிந்துவிடுவதால் விரைவாகப் பணிகளை முடிப்பதில் சிரமமேற்படுகிறது.
அதுமட்டுமின்றி, நீதிமன்றங்களிலுள்ள இ-சேவை மையங்களில் ஹைஸ்பீடு இன்டர்நெட், நவீன ஸ்கேனர், பிரிண்டர், லேட்டஸ்ட் வெர்ஷனுடன் கூடிய கம்ப்யூட்டர், யு.பி.எஸ். உள்ளிட்ட உபகரண வசதிகள் போதிய அளவில் இல்லை. ஒரே நேரத்தில் பல வழக்கறிஞர்கள் இ-பைலிங் செய்யும்போது கம்ப்யூட்டர் சர்வர் ஸ்தம்பித்துவிடுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருந்து இ-பைலிங் செய்யவேண்டியதாகிறது.
இ-பைலிங் செய்த பிறகு, அந்த ஆவணங்களில் நீதிபதிகள் ஏதேனும் திருத்தம் செய்யும்பட்சத்தில் மீண்டும் அந்த குறிப்பிட்ட ஆவணங்களை இ-பைலிங் செய்யவேண்டிய நெருக்கடியிருக்கிறது. வழக்கறிஞர்களே சொந்தமாகவும் இ-பைலிங் செய்துகொள்ளலாம். ஆனால், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து கம்ப்யூட்டர், ஸ்கேனர், பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை வைத்துக்கொள்ளும் அளவுக்கு பெரும்பாலான வழக்கறிஞர்களிடம் பொருளாதார வசதியில்லை.
ஒரு வழக்கறிஞர், ஒரே நேரத்தில் வேறு சில நீதிமன்றங்களிலும் வழக்குகளை கவனிப்பார். அதுபோன்ற சூழ்நிலையில், இ-பைலிங் செய்துவிட்டு, அசல் ஆவணங்களை தூக்கிக் கொண்டு ஒவ்வொரு நீதிமன்றமாக அலையமுடியாது. இதில், போலி ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. கம்ப்யூட்டர்கள் "ஹேக்' செய்யப்படும் அபாயமும் இருக்கிறது.
தாலுகா நீதிமன்றங்களில் பல இடங்களில் இ-சேவை மையங்களே இல்லை. இப்படியான நிலையில், கட்டாய இ-பைலிங் பணிகளை வழக்கறிஞர்கள் மீது உச்சநீதிமன்றம் திணிக்கக் கூடாது.
கட்டாய இ-பைலிங் நடைமுறையால் வழக்கறிஞர் தொழில் முடங்கிவிடும். சாதாரண வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கும்'' என்கிறார் வழக்கறிஞர் நரேஷ்பாபு.
டிஜிட்டல்மயமாக்கம் என்பது காலத்தின் கட்டாயம்தான் எனினும், நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தீர்வு காணாமல் தேங்கிக் கிடக்கும் நிலையில், வழக்காடிகள் மற்றும் வழக்கறிஞர்களின் நலன்கருதி, விரைவில் இப்பிரச்னையை உச்சநீதிமன்றம் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us