சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை, வி.சி.க. கட்சித் தலைவர் திருமாவளவன் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மோதாமலே, திருமாவளவன் சென்ற கார் மோதியதாக அந்த இளைஞர் வேண்டுமென்றே வம்புக்கிழுத்ததாகவும், வேண்டு மென்றே காரை நிறுத்திக் கூச்சலிட்டதாகவும் ஊடகங்கள் திரித்துப் பேசுவதாகவும் திருமாவளவன் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து எக்ஸ் தளத்தில், "இது திட்டமிட்ட சதி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் இதன் பின்னணியில் இருப்பது எமது விசாரணையில் தெரியவருகிறது. அரசு இது குறித்து விசாரிக்க வேண்டும்' என்று திருமாவளவன் பதிவிட்டிருந்தார்.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பூஷண் இராமகிருஷ்ண கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு எதிராக கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டம் முடிந்து சென்றுகொண்டிருந்த போது சென்னை பாரிமுனை பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வழக்கறிஞர், திருமாவளவன் கார் ஓட்டுனருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டார். அப்போது வி.சி.க.வினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர் பாக தமிழக பா.ஜ.க.வின் முன் னாள் தலைவரான அ..மலை, "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமீது தவறான நபர் நடத் திய தாக்குதலைக் கண்டித்து போராட்டம் நடத்திவிட்டு திரும்பியபோது தன்னை முறைத் தார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது தாக்குதல் நடத்திய செயல் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒரு பத்திரிகையாளர் வீடியோவாகப் பதிவுசெய்து அதைச் செய்தியாக வெளியிடுகிறார். அதை நான் எக்ஸ் தளத்தில் கண்டித்துப் பதிவிடுகிறேன், உடனே திருமாவளவன் இதற்குப் பின் நானும் ஆர்.எஸ். எஸ்.ஸும் உள்ளதாக விமர்சிக்கிறார், தமிழக அரசு இதை சரியாக விசாரிக்கவேண்டும்''’என்றார்.  

Advertisment

வி.சி.க.வினர் வழக்கறிஞர் ராஜீவ்காந்திமீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை சேர்ந்த வழக்கறிஞர்கள் தொடர்போராட்டங்களை நடத்தினர். அவர்களின் கண்டனங்களையும் பதிவுசெய்தனர். 

thiruma2

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜீவ்காந்தியின் சகோதரர் விமல்குமார், "சம்பவத் தன்று எனது சகோதரர் ராஜீவ்காந்தி பார் கவுன் சில் ஐ.டி. கார்டை புதுப்பித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை கட்டியிருந்த கார் அவர்மீது மோதவே, அவர் அதைக் கேட்டுள்ளார். அந்த காரிலிருந்து இறங்கிய சிலர் முதலில் அவரை தாக்க, பின்னால் வந்த மூன்று கார்களில் வந்தவர்களும் சேர்ந்து இருபதுக்கும் மேற்பட்டோர் என் அண்ணனைத் தாக்கியுள்ளார்கள். அது அங்கு பதி வான வீடியோ காட்சிகளில் தெளி வாகத் தெரிகின்றது. மேலும், போலீசார் அடித்து இழுத்துக்கொண்டு பார் கவுன்சில் அறையில் வைத்து பூட்டினர். அந்த கதவையும் வி.சி.க.வினர் சேதப்படுத்தினர்''’என்று கூறினார்.

தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர் ராஜீவ்காந்தியின் சகோதரி, "என் அண்ணனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதலில் காயமடைந்து, வெகுநேரம் கழித்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவந்திருக்கிறார்கள். அவரைப் பார்க்கக்கூட அனுமதிக்க வில்லை. திரும்பிப் பார்த்ததற்காக இதுபோன்ற கொலைவெறித் தாக்குதல் நடத்துவதா?  ஒரு வழக்கறிஞருக்கு இங்கு பாதுகாப்பில்லை என்றால், யாருக்கு பாதுகாப்பு இருக்கும்?''’என்று கேள்வியெழுப்பினார்.

thiruma1

இதுதொடர்பாக வி.சி.க. தலைவர் திருமா வளவனோ, "என் வண்டி மோதவில்லை. அவர் என் வாகனத்திற்கு முன்னால் வேண்டுமென்றே மெதுவாகச் சென்றார். என் கார் முன்பாக, இரு சக்கர வாகனத்தில் சென்ற அந்த இளைஞர் என்னை பார்த்துக்கொண்டே சென்றார். வழக்கமாக முன்னே செல்லும் எஸ்கார்ட் வாகனம் சம்பவத்தன்று என் காருக்குப் பின்னால் வந்தது. என் காருக்கு முன்பு சென்றுகொண்டி ருந்த அந்த இளைஞர் திடீரென வண்டியை நிறுத்தி, முறைத்துக்கொண்டு காரை நோக்கி வந்து ஏதோ சத்தம் போட்டார். வண்டியில் நான் அமர்ந்திருக்கிறேன் என்று தெரிந்தும் வேண்டு மென்று வம்பிழுத்தார். இந்த நிலையில் வி.சி.க. தொண்டரொருவர் அவர் மீது கையால் ஓங்கியடிக்க, போலீசார் அவரை இடையிட்டு தமிழ்நாடு பார் கவுன்சில் அலுவலகத்திற்கு கூட்டிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு, திட்டமிட்ட தாக்குதல்போல அவதூறு பரப்புகின்றனர். இது விபத்தல்ல... நம் மீது குற்றம்சாட்ட திட்டமிட்டு நடத்திய நாடகம்''’என்று தெரிவித்தார்.

"ஒரு கட்சித் தலைவரின் காரின் முன்புசென்று ஒருவர் பைக்கை நிறுத்து கிறார். அவரின் பாதுகாப்பு தொடர்பாக யாரும் கேள்வி கேட்கவில்லை, திருமாவளவன் ஏன் இறங்கிச்சென்று தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். இது விபத்தல்ல. குற்றம்சாட்டுவதற் காகவே திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு. எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக் நிறுத்தினால் இப்படி கேள்வி யெழுப்புவார்களா? இருந்தும், தெரியாமல் பண்ணிவிட்டார் என்று போலீசாரிடம் கூறிவிட்டு வந்துவிட்டேன். தொண்டர்களையும் அமைதிப்படுத்திவிட்டேன்''’என்று தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "இந்த சம்பவம் எதேச்சையாக நடந்ததல்ல, திட்டமிட்டு நடந்தது. அவ்வளவு வேகமாக அ...மலை ஏன் எக்ஸ் தளத்தில் பதிவிடவேண்டும்? உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக போராட்டத்தை முடித்து வரும்போது, ஏன் நடக்கவேண்டும்? வி.சி.க.வை குறிவைத்து நடந்ததாகக் கருதுகிறோம்''’என்றார்.