ஊடகத்துறை பெண்கள் குறித்து அவதூறாக பேசி, நீதி மன்றத்தில் ஆஜரான சிரிப்பு நடி கர் எஸ்.வீ.சேகர், பத்திரிகையாளர் களிடம் சிக்கி தர்மசங்கடத்தைச் சந்திப்பதைத் தடுக்க, பின்வாசல் வழியாக தப்பி ஓடினார் என்பது தான் அவரது "ஜாமீன்' கதை.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்ட வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் எஸ்.வீ.சேகர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. தலைமறைவாக இருந்தபடியே அவர் போட்ட ஜாமீன் மனுக்கள் உச்சநீதிமன்றம்வரை நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, எஸ்.வீ.சேகரை கைது செய்தாக வேண்டிய நெருக்கடி காவலர் களுக்கு ஏற்பட... சேகரின் அண்ணியான தலைமைச் செயலாளர் கிரிஜா வலியுறுத்தியதால், அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் புதன் (ஜூன் 20) அன்று சென்னை -எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வீ.சேகர்.
அங்கு பத்திரிகையாளர்கள், மகளிர் அமைப்புகள் எஸ்.வீ.சேகரை முற்றுகையிடக்கூடும் என்ற தகவல் கிடைக்கவே, மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் எஸ்.வீ.சேகர், நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மீடியாக் கள் கேட்டின் முன்பாகவே தடுக்கப்பட்டன. 10:30 மணிக்கு முன்பாகவே ஆஜரான எஸ்.வீ.சேகர், நீதிபதி மலர்விழிக்கு எதிரில் அமர வைக்கப் பட்டார். 11 மணிக்கு குற்றவாளிக்கூண்டில் ஏறி, ‘"ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட வேண்டும்'’ என்று கூறிய நிலையில், வழக்கு சில மணிநேரம் தள்ளிவைக்கப்பட்டது.
அதே இடத்தில் மீண் டும் அமரவைக்கப்பட்டார் எஸ்.வீ.சேகர். பிஸ்கட் சாப்பிட்டபோது, அவர் பெயர் அழைக்கப்பட... வாயைத் துடைத்துக் கொண்டு மீண்டும் குற்ற வாளிக்கூண்டில் ஏறினார். சூரிட்டிக்காக ஜெயச் சந்திரன் (ஜி.கே.வாசன் படத்தை சட்டைப்பையில் வைத்திருந்தார்), ஸ்ரீநிவாசன் ஆகியோர், எஸ்.வீ. சேகரின் குடும்ப நண்பர்கள் என்ற அறிமுகத்துடன் நீதிபதியின் முன் நின்றனர். சட்டத்தை ஏமாற்றி இத்தனை நாள் சுற்றிய சேகருக்கு, நீதிமன்றம் சட் டப்படி ஜாமீன் வழங்கியது. ஜூலை மாதம் 18-ஆம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவின்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாப்பூர் அசோக்குமார் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் எஸ்.வீ.சேக ருடன் இருந்தனர். எஸ்.வீ.சேகர் மீண்டும் பத்திரிகை யாளர்களிடம் மாட்டிவிடாமல் இருக்க, காவல் துறை அதிகாரிகள் அலர்ட்டாக இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தப்பித்தோம்... பிழைத் தோம்... என நீதிமன்றத்தின் பின்வழியில் ஓட்ட மெடுத்தார் காமெடி நடிகர்.
இதேநாளில், தூத்துக்குடி போராட்டத்தின் போது, காவல்துறை குறித்து வெளியிட்ட டி.வி. நடிகை நிலானி குன்னூரில் கைது செய்யப்பட்டார்.
-சி.ஜீவாபாரதி