தமிழ்வழிக் கல்வி மீது லத்தி சார்ஜ்! -போலீஸ் செலக்ஷன் மோசடி!

tnpolice

மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு உரிய முன்னுரிமையை வழங்காமல், பணியாளர்களைத் தேர்வுசெய்ததோடு அரசு ஆணையை மீறியும், நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியும் பணியாளர்களைத் தேர்வுசெய்து வருவது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதனால் போலீஸ் எஸ்.ஐ. தேர்வில் மோசடி தொடர்கிறது.

தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வில் 1078 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் இளங்கலை பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலியிடங்களில் 20 சதவிகிதம் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 2010-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் இதற்கான அரசாணை (ஆணை எண்:145 மற்றும் 40) பிறப்பிக்கப்பட்டது.

tnpolice

அதன்படி 2015-ஆம் ஆண்டில் சார்புஆய்வாளர் எஸ்.ஐ. தேர்வில், காவல்துறையில் ஏற்கெனவே பணியிலிருப்போருக்கான ஒதுக்கீடாக 40 காலிப்பணியிடங்களும், பொது ஒதுக்கீட்டிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 176 காலிப் பணியிடங்களும் ஒதுக்கியிருக்கவேண்டும். இவ்வாறு ஒதுக்காமல் தவறான விதிமுறைகளைப் பின்பற்றியும், நீதிமன்

மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு உரிய முன்னுரிமையை வழங்காமல், பணியாளர்களைத் தேர்வுசெய்ததோடு அரசு ஆணையை மீறியும், நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியும் பணியாளர்களைத் தேர்வுசெய்து வருவது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இதனால் போலீஸ் எஸ்.ஐ. தேர்வில் மோசடி தொடர்கிறது.

தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வில் 1078 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் இளங்கலை பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்த காலியிடங்களில் 20 சதவிகிதம் முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 2010-ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் இதற்கான அரசாணை (ஆணை எண்:145 மற்றும் 40) பிறப்பிக்கப்பட்டது.

tnpolice

அதன்படி 2015-ஆம் ஆண்டில் சார்புஆய்வாளர் எஸ்.ஐ. தேர்வில், காவல்துறையில் ஏற்கெனவே பணியிலிருப்போருக்கான ஒதுக்கீடாக 40 காலிப்பணியிடங்களும், பொது ஒதுக்கீட்டிலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 176 காலிப் பணியிடங்களும் ஒதுக்கியிருக்கவேண்டும். இவ்வாறு ஒதுக்காமல் தவறான விதிமுறைகளைப் பின்பற்றியும், நீதிமன்றத்துக்கு தவறான தகவலளித்தும் தொடர்ந்து தேர்வை நடத்திவருகிறது டி.என்.யூ.எஸ்.ஆர்.பி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் மூன்றுகட்ட தேர்வுநிலைகள் உள்ளன. இந்த மூன்று படிநிலைகளிலும், தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியாக தகுதி மதிப்பெண் வெளியிடப்பட்டு தேர்வாளர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர். தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் அனைத்தும் இந்த அரசாணையைக் கடைப்பிடித்துவரும் நிலையில் சார்புஆய்வாளர் தேர்வில்மட்டும், தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கான தகுதி மதிப்பெண்கள் இறுதி நிலையில்தான் வெளியிடப்படுகிறது.

1078 காலிப் பணியிடங்கள் கொண்ட இந்த தேர்வுக்கு 1,53,232 பேர் விண்ணப்பித்தனர். இதில் தமிழ்வழியில் பயின்ற விண்ணப்பதாரர்கள் ஆண்கள் 19,382, பெண்கள் 3703. இவர்களுக்கு நடத்தப்பட்ட எழுத்துத்தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கான தகுதி மதிப்பெண் வெளியிடப்படவில்லை. உடல்திறன் போட்டிமுடிந்து நேர்முகத் தேர்வுக்கும் இதேநிலைதான். இறுதிக்கட்டத்தில் மட்டும் தமிழ்வழித் தகுதி மதிப்பெண் வெளியிடப்பட்டது.

இதனால் 176 காலிப் பணியிடங்களுக்கு 64 பேர் மட்டுமே இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று காவல்துறையில் ஏற்கெனவே உள்ள 40 காலிப் பணியிடங்களும் முழுவதுமாகவே நிரப்பப்படவில்லை. இத்தனை குளறுபடிகளுக்கும் காரணம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. வினித்தேவ் வான்கடேவும் துணை காவல் கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி என்ற மெகலினாவும்தான் என்கின்றனர்.

tnpolice

குறிப்பிட்ட அரசாணை பின்பற்றப்படாதது ஏன் என அறிய வினித்தேவ்வை தொடர்புகொண்டபோது, கருத்துக்கூற மறுத்துவிட்டார். எஸ்.பி. உமாமகேஸ்வரியோ, ""நான் தற்போது அந்தப் பதவியில் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கிருப்பதால் பேச விரும்பவில்லை''’என நழுவினார்.

ஆணையத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ்வழியில் பயின்ற அன்பரசன், குமாரமுத்து ஆகியோர், 2015-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதியரசர் ஹரிபரந்தாமன், தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்கள் அடுத்தகட்ட தேர்வுக்குச் செல்ல உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் உடற்திறன் தேர்வில் வென்று நேர்முகத் தேர்வுக்கும் சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் சிலம்பரசன், கனகராஜ், கருணாகரன், முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் டி.என்.யு.எஸ்.ஆர்.பி. தேர்வாணையமும் இத்தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த சஞ்சய்கிஷோர் கவுல் முந்தைய தீர்ப்புக்கு நேரெதிராக, "தமிழ்வழியில் பயின்றவர்கள் அடுத்தகட்ட தேர்வுக்குச் சென்றது செல்லாது' என தீர்ப்பு வழங்கினார். அன்பரசனும் குமாரமுத்துவும் விடாப்பிடியாக உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றமோ, "உயர்நீதிமன்றமே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கட்டும்' என கைகாட்டிவிட்டது. தற்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழக்குதொடர்பாக வழக்கறிஞர் எட்வின் கூறுகையில், “""இறுதிக்கட்டத்தில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு மதிப்பெண்கள் போடுவது அரசாணைக்கு எதிரானது. தேர்வு நடக்கும் மூன்றுகட்டங்களிலும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு மதிப்பெண்ணை வழங்கவேண்டும். அரசு போடும் ஜி.ஓ.வை மதிக்காமல் தேர்வு நடத்துவதென்பது அரசையே அவமதிப்பதாகும். இப்படிச் செய்வதால் தமிழ்வழியில் படித்தவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது''’என்கிறார்.

அரசாணையை வெளியிடும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, அனைத்துத் தேர்வாணையங்களும் இந்த அரசாணையை ஒரேமாதிரியாகக் கடைப்பிடிக்கிறதா… எனக் கேட்டபோது, அத்துறையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலர் கண்ணன், "டி.என்.பி.எஸ்.சி தேர்வுமுறையே இறுதியானது' என பதிலளித்துள்ளார்.

முன்னாள் காவல்துறை தலைவரும் தற்போதைய தலைமை தகவல் ஆணையருமான கு.ராமானுஜம் இதேபோன்று பாதிக்கப்பட்ட செந்தில்குமாருக்கு வழக்கு எண்:9591-ல் அளித்த உத்தரவில், "தமிழ் வழியில் படித்தவருக்குள்ள 20 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பது அரசு ஊழியராக இருந்தாலும் இல்லையென்றாலும் பொருந்தும்' என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அனுமதித்தால், இனிவரும் தேர்வுகளிலும் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கெதிரான போக்குகள் தொடரும். அரசு இனியாவது விழித்துக்கொண்டு, நடந்த தவறுகளைச் சரிசெய்து, அரசாணைக்கெதிராக செயல்படும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமீறல்களை ஒழுங்குபடுத்துமா? முறைகேடுகளை வெளிக்கொண்டுவருமா?

-அ.அருண்பாண்டியன்

nkn210918
இதையும் படியுங்கள்
Subscribe