தற்போதுள்ள சூழலில் தினசரி மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது. புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்க வில்லை''’என முதல்வர் ரங்கசாமியின் புலம்பல்தான் புதுவையின் தற்போதைய டாபிக்.
கடந்த 12-ஆம் தேதி புதுவை (வடக்கு) மாநில தி.மு.க. அமைப்பாளர் பி.சிவக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "புதுவையில் பொம்மை முதல்வராக ரங்கசாமி உள்ளார்''’என பேசினார். அதற்கு புதுவை துணைநிலை ஆளு நர் தமிழிசை, "பொம்மை ஆட்சி கர்நாடகாவில் தான் உள்ளது'' என நக்கலாகப் பதிலளித்திருந் தார். ஆனால் ஏழு நாட்களிலேயே, "நான் பொம்மை முதல்வர்தான்''’என ரங்கசாமி அவரது வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார்.
"மாநில அந்தஸ்து’ கோரிக்கைக்காக அனைத்துக் கட்சி கூட்டம், சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி தீர்மானம் இயற்றவேண்டும்' என வலியுறுத்தி உருளையன்பேட்டை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் கடந்த 18-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, "மாநில அந்தஸ்து குறித்து மத்திய அரசை
தற்போதுள்ள சூழலில் தினசரி மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது. புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்க வில்லை''’என முதல்வர் ரங்கசாமியின் புலம்பல்தான் புதுவையின் தற்போதைய டாபிக்.
கடந்த 12-ஆம் தேதி புதுவை (வடக்கு) மாநில தி.மு.க. அமைப்பாளர் பி.சிவக்குமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "புதுவையில் பொம்மை முதல்வராக ரங்கசாமி உள்ளார்''’என பேசினார். அதற்கு புதுவை துணைநிலை ஆளு நர் தமிழிசை, "பொம்மை ஆட்சி கர்நாடகாவில் தான் உள்ளது'' என நக்கலாகப் பதிலளித்திருந் தார். ஆனால் ஏழு நாட்களிலேயே, "நான் பொம்மை முதல்வர்தான்''’என ரங்கசாமி அவரது வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார்.
"மாநில அந்தஸ்து’ கோரிக்கைக்காக அனைத்துக் கட்சி கூட்டம், சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி தீர்மானம் இயற்றவேண்டும்' என வலியுறுத்தி உருளையன்பேட்டை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் கடந்த 18-ஆம் தேதி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, "மாநில அந்தஸ்து குறித்து மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்களும் பார்ப்பதாக சொல்கிறார்கள் ஒருகட்டத்தில் ‘"முடியுமா?'’ என்று கேட்டால் "முடியாது' என்கிறார்கள். நான் எனக்காக கேட்கவில்லை. மக்களுக்காகக் கேட்கிறேன். பிற்காலத் தில் அரசியலுக்கு வருபவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காகத் தான் இதைக் கேட்கிறேன். கடந்த ஆட்சியில் உச்சநீதி மன்ற தீர்ப்பு தெளிவாக சொல்லிய பிறகு இங்கு நமக்கு ஒன்றுமே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. மேலும் சில விஷயங் களில் நீதி மன்ற உத்தரவு வரும்போது எங் களை ஆலோசிக்கா மல், ஒவ்வொரு துறைக்கும் உடனே உத்தரவுகளை அதி காரிகளே வெளியிடுகின்றனர். புதுச்சேரி வளர்ச்சியடையவேண் டும், மக்கள் நல்லா இருக்கவேண்டும் என்று நினைத்தால் நாம் கேட்கிற கோரிக் கைகளை மத்திய அரசு நிறைவேற்றவேண்டும். புதுச்சேரியில் விடுதலைநாள் சம்பிரதாயத் துக்குத்தான் கொண்டாடுகிறோம். உண்மை யான விடுதலை நமக்குக் கிடைக்கவில்லை''’என வேதனையுடன் தெரிவித்தார் ரங்கசாமி.
ஆனால் தமிழிசையோ, "முதலமைச்சர் தனக்கு அதிகாரம் இல்லை, மன உளைச்சல் என கூறுவது எதை வைத்து என தெரியவில்லை.. புதுச்சேரி முன்னேற்றத்துக்கு மத்திய அரசு சிறப்பாக துணை நிற்கிறது. மாநில அரசும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. யார் என்ன விமர்சனங்கள் வைத்தாலும் மக்களுக்கான கோப்புகளை நான் புறம்தள்ளுவது இல்லை. சில முடிவுகளை மத்திய உள்துறையிடம் கேட்டுவிட்டுதான் எடுக்க முடியும். மாநில அந்தஸ்து குறித்து முதலமைச்சர் அவரது ஆசையை வெளிப்படுத்தி இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை மாநில அந்தஸ்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அவை இப்போது நடந்துகொண்டிருக்கிறது'' என்கிறார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "ரங்கசாமி காங்கிரஸில் 2 முறை முதலமைச்சராக இருந்தார். அந்த காலகட்டங்களில் நாங்கள் (காங்கிரஸ்) வடகிழக்கு மாநிலங்களைப்போல சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டோம். இந்திரஜித்குப்தா மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது "ஆந்திராவின் மாஹே, கேரளாவின் ஏனாம் பகுதிகளை விட்டுக்கொடுத்தால்தான் கொடுக்கமுடியும்' என்றார். நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் 2016--ருந்து காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாநில அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்து அனுப்பும் கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போடாமலும் அலைக்கழித்ததால் மாநில அந்தஸ்து கோரிக்கையை எழுப்பி னோம். டெல்லியிலும், புதுவையிலும் போராட்டங்களை நடத்தினோம். ஆனால் இவை எதிலும் எதிர்க்கட்சித் தலைவ ரான ரங்கசாமி, அவரது கட்சி, கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க, அ.தி.மு.க பங்கேற்க வில்லை. மாறாக, கிரண்பேடியின் செயல்களுக்கு ரங்கசாமி மறைமுக ஆதரவு தந்தார். கடந்த காலங்களில் ஆதரவு தராத ரங்கசாமி இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை எதிர்த்து தெருவில் இறங்கிப் போராடுவாரா? கிரண்பேடி விஷம் கொடுத்து கொல்வார், தமிழிசை வெல்லத் தைக் கொடுத்து கொல்கின்றார்''’ என்றார்
இதனி டையே "மாநில அந்தஸ்து பெற்றுத் தரமுடியவில்லை என்றால் ரங்கசாமி பதவி விலகவேண் டும்'' என்று கூட்டணியில் இருந்து கொண்டே குரலெழுப்பு கிறார். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண் டன். அவரிடம் பேசினோம், "ரங்கசாமி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என கூறி தான் ஆட்சிக்கு வந்துள்ளார். "செய் அல்லது செத்து மடி' என்பதைப்போல முதல்வர், மக்களை ஏமாற்றாமல் மாநில அந்தஸ்தை பெற்றுத் தர வேண்டும். 13 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சராக இருக் கும் ரங்கசாமியால் மாநில அந்தஸ்து பெற்றுத்தர முடிய வில்லை. புதுச்சேரி பா.ஜ.க. தலைவரும் மாநில அந்தஸ்து கிடைக்குமா... கிடைக்காதா? என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறுகையில் "முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் பொங்கி எழுவது ஏனென்று தெரியவில்லை. மாநில அந்தஸ்து என்கிற ரங்கசாமி யின் நல்ல முயற்சியை கொச் சைப்படுத்த வேண்டாம். ஒருமித்த கருத்து இருந்தால் எங்களுடன் இணைந்து போராடலாம். இல்லை என் றால் ஒதுங்கிக்கொள்ளலாம்'' என்கிறார்.