க்சிஜன் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளி கள் மரணமடைந்த கொடூர நிகழ்வுகள் பெரும் அதிர்வை ஏற்படுத்தின. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது, தேவையான ஆக்சிஜனைப் பெறுவது எப்படி என மு.க.ஸ்டாலின் அரசு தீவிரமாக ஆலோசித்து களப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

இந்திய மாநிலங்களின் திரவ ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆக்சிஜ னைச் சுமந்துசெல்லும் எக்ஸ்பிரஸ் மூலமாக தமிழகத்துக்கும் ஆக்சிஜனைக் கொண்டுவர தென்னக ரயில்வே உதவியுடன் திட்டமிடப் பட்டது. அதன்படி, மேற்கு வங்கத்திலுள்ள துர்காபூரிலிருந்து தமிழகத்துக்கு 80 டன் ஆக்சிஜனுடன் கிளம்பிய முதல் ஆக்சிஜன் ரயில், சென்னை தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்தடைந்தது. மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்தனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

oxygen

Advertisment

ஸ்டெர்லைட் ஆக்சிஜன்

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில், உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடனும், பல்வேறு நிபந்தனைகளுடனும், கடந்த 12ம் தேதி இரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் தொடங்கப்பட் டது. முதற்கட்டமாக, அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் திரவ ஆக்சிஜன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விநியோகிக்கப்பட்டது. இம்மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கான 1240 படுக்கைகளில், 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருக்கிறது. இம்மருத்துவமனையில், நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைக்காக, 13 ஆயிரம் கிலோ லிட்டர், 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கொள்கலன்கள் உள்ளன. நெல்லைக்கு அனுப்பியது போக, சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜனை விநியோகிக் கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீரென அந்த ஆலையிலுள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தின் குளிர்விப்பான் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் ஸ்டெர் லைட் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பழுது சரி செய்யப்பட்டு ஆலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கு வதற்கு ஒரு சில நாட்கள் ஆகலாமென்று தெரிகிறது.

Advertisment

வெளிநாடுகளிலிருந்து காலி சிலிண்டர்கள்

ஆக்சிஜன் உற்பத்திக்கான முயற்சிகளை ஒரு புறம் எடுத்துவரும் நிலையில், திரவ ஆக்சிஜனை சேமித்துவைக்கும் கண்டெய்னர்கள், மற்றும் மருத் துவமனை ஆக்சிஜன் பயன்பாட்டுக்குத் தேவையான சிலிண்டர்களின் தேவையும் மிகுதியாக உள்ளது. அவை போதுமான அளவு இருந்தால்தான் உற் பத்தியாகும் திரவ ஆக்சிஜனை தமிழகமெங்கும் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்ல இயலும். இவற்றை வெளிநாடுகளிலிருந்து உடனடியாக இறக்குமதி செய்ய தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஜெர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாங்கப்பட்ட 900 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள், 2 விமானங்கள் மூலமாக சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றை, ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை களுக்கு அனுப்பிவைத்தனர்.

oxygen

அடுத்ததாக, முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், சிங்கப்பூரிலுள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்திடம் 1,900 புதிய சிலிண்டர் கள் வாங்குவதற்கு சிப்காட் நிறுவனத்தின் மூலம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக முதலில் 500 சிலிண்டர்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட் டன. மீதமுள்ள 1,400 சிலிண்டர்கள் கப்பல்மூலமாக 20ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடையும். பின்னர் இந்த சிலிண்டர்கள் அனைத்தும் ஆக்சி ஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப் படும். மேலும், தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரம் காலி சிலிண்டர்களைப் பெறுவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கும், 47 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு சிலிண் டருக்கு 10 ஆயிரம் ரூபாயை டெபாசிட் தொகை யாக சிப்காட் மூலமாக தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதுவரை பெறப்பட்ட 1,500 சிலிண்டர்களில் 700 சிலிண்டர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பியதுபோக 800 சிலிண்டர்கள், கும்மிடிபூண்டி சிப்காட் வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன,

தொழில் நிறுவனங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டுவந்தார். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளிலும், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்ஸிஜன் ஆலை யிலும் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

oxygen

நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர் டாம் நகரிலிருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) மூலமாக, தமிழ் நாட்டின் தேவைக்கான திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கி ருந்து, தங்கம் தென்னரசு மேற்பார்வையில், தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் கொண்டுவருவதற் கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்படும் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கி, அதிக விலைக்கு விற்பவர் கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விரைவில், தமிழகம் இந்த கொரோனா மூச்சுத் திணறலில் இருந்து மீளுமா?

-தெ.சு.கவுதமன்