தி.மு.க.வினரின் அமைதியோ அமைதி!

கடலூர் பொதுக் கூட்டத்தில் பொதுமக்களே முகம் சுளிக்கும் அளவுக்கு கலைஞரையும் ஸ்டாலினையும் கனிமொழியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

தரம் தாழ்த்திப் பேசிய அமைச்சரின் கொடும் பாவியையும் நிழல்படங்களையும் பல மாவட்டங்களிலும் தி.மு.க. வினர் கொளுத்தினர். அமைச்ச ருக்கே போன் போட்டுத் திட்டவும் செய்தனர். ஆனால் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப் புரத்தில், அமைச்சருக்கு எதிராக தி.மு.க.வினர் எவ்விதக் கண்டனத்தையும் பதிவு செய்ய வில்லை.

மற்ற மாவட்ட தி.மு.க. வினரின் கொடும்பாவி எரிப் பையும் கண்டன ஆர்ப்பாட் டங்களையும் கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் தி.மு.க. பிரசன்னாவின் படத்தை எரித்தனர். அமைச்சர் சி.வி.சண்முகத்தை, மேடை போட்டு நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அழைத்தவர் பிரசன்னாதான்.

Advertisment

-எஸ்.பி.சேகர்

kuthoo

Advertisment

தலைக்கு மேல் வெள்ளம்!

தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்ட பேராசிரியர் முருகனையும், ஆய்வு மாணவரான கருப்ப சாமியையும் 14-05-18 அன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்த நீதியரசர் மறு விசா ரணையை 28.05.18க்கு ஒத்தி வைத்தார்.

பேராசிரியர் முருகனைப் பார்ப்பதற்கு, அரசு ஊழியரான மனைவி சுஜா வரவில்லை. மனைவியின் தங்கை சுவீதா வந்திருந்தார். பார்ப்பதற்காக அங்கும் இங்குமாக ஓடி, ஒருவழியாக அருகில் சென்று ""மாமா... மாமா சும்மா ரிலாக்ஸா இருங்க மாமா. உங்க மடியில கனமில்லை. நீங்க ஒண்ணும் தப்பு பண்ணலை மாமா...'' ஆறுதல் கூறி, கண்ணீர் மல்க கையசைத் தார்.

இனி முகத்தை மூட வேண்டிய அவசியமில்லை என்கிற தெளிவுடன் முருகனும் கருப்பசாமியும் இருந்தார்கள். பெரும்பாலும் அவர்களின் தலை கவிழ்ந்தே இருந்தது.

-ராம்கி

16 கோடி மதிப்புள்ள நிலம்!kuthoo

திருப்பூரில் மிக முக்கிய பகுதியான குமரன் சாலையில், ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பென்னி காம்ப்ளக்ஸ்.

அரசின் விதிகளின்படி தனது வளாகத்தில் 50 சென்ட் நிலத்தை 1990-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கிக் கொடுத்தது பென்னி காம்ப்ளக்ஸ்.

அப்போதே, அந்த இடத் தை தனதாக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கினார் அன்றைய எம்.பி. ஜி.கே. குப்புசாமி. அன்றைக்கு கம்யூ னிஸ்டுகள் நடத்திய போராட் டங்களால் அது இயலாமல் போய்விட்டது. ஆனாலும் அதற்குப் பிறகு காங்கிரஸ் நிர்வாகிகளாக வந்த மாநகர காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் 25 சென்ட் நிலத்தையும், இளைஞர் காங்கிரஸ் பெஸ்ட் ராமசாமி (இப்போது கொங்குநாடு) 15 சென்ட் நிலத்தையும் ஆக்கிர மித்து கட்டடங்களைக் கட்டி தங்கள் அலுவலகங்கள் ஆக்கிக் கொண்டார்கள். கிருஷ்ணனுக்கு மாத வாடகையாக ஒண்ணரை லட்சம் கிடைக்கிறது. பெஸ்ட் ராமசாமி தனது அலுவலகத்தை கட்டிக்கொண்டிருக்கிறார். இங்கே ஒரு சென்ட் நிலத்தின் மதிப்பு 40 லட்சம்.

இவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்று, காங்கிரஸின் சிறுபான்மைப் பிரிவு இஸ்மாயில் புகார்ப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

-அருள்குமார்

தாயும் மகளும், மத்தியும் மாநிலமும்!

தேவகோட்டை தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையத்தை 15.05.18 அன்று சிவகங்கை எம்.பி. பெரி.செந்தில் நாதனும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்துப் பேசினர்.

எம்.பி. செந்தில் நாதன்: தமிழக அர சின் திட்டங்களான லேப்டாப், தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் போன்ற வற்றை தேர்தல் அறிக்கையில் காப்பி யடித்ததால்தான் கர்நாடகாவில் பா.ஜ.க. அதிக எம்.எல்.ஏ.க் களைப் பெற முடிந்தது. (சீண்டல் தொனியில் சொன்னார்).

அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் : செயல் பாடுகளின் அடிப் படையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறது குடும்பம் ஒன்றுதான். தாயும் மகளும்தான்; ஆனால் வாயும் வயிறும் வேறு வேறு தான். (இறுக்கமும் கொஞ்சம் எரிச்சலோடும் பதில் சொன்னார்).

எங்க பிளான்ல நீங்க, உங்க தயவு நாங்க என்கிற கிவ் அண்ட் டேக் பாலிஸிதான்.

-நாகேந்திரன்

விசிலைத் தடுத்த இலைகள்!

மக்கள் நீதி மய்யத்தின் முதல் திருப்பணி, சென்னை -வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் குளத்தை தூர்வாரி, சீர் செய்வதுதான். தலைவர் கமலை அழைத்து வந்து ஜமாய்க்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் மத்திய சென்னை ம.நீ.ம. நிர்வாகிகள் இருந்தார்கள்.

மய்யத்தின் விசில் செயலிக்கு முதலில் வந்த புகார் இந்தக் கோயில் குளம்தான்.

புகாருடன் சென்று அந்தக் கோயிலின் செயல் அலுவலர் ரவியை சந்தித்த ம.நீ.ம.வின் வில்லிவாக்கம் பகுதிப் பொறுப்பாளர் முருகதாசும் மற்ற நிர் வாகிகளும் ""எங்கள் செலவில் தூர் வாரி, சீர் செய்கிறோம்'' என்றார்கள்.

""ஆஹா... அதற் கென்ன... தாராளமாக செய்யலாம். ஒரு வாரத்தில் மேலிட உத்தரவை வாங்கித் தருகிறேன்'' என்று அனுப்பி வைத்தார் கோயில் செயல் அலுவலர்.

மறுவாரம் சென்ற ம.நீ.ம. நிர்வாகிகளிடம், ""குளத்தில் தூருமில்லை, வேருமில்லை. அது நல்லாத்தான் கெடக்கு. சேவை தொண்டு என்று கூறிக்கொண்டு, இனி இந்தப் பக்கம் வராதீர்கள்'' என்று முகத்தில் அடித் தாற்போல கூறி விரட்டி விட்டார் கோயில் செயல் அலுவலர்.

-பரமேஷ்