Advertisment
kuthoo

நூற்றாண்டு விழாவில் 30 பார்வையாளர்கள்!

kuthoo

Advertisment

முத்தமிழ் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமனுக்கு, அவர் பிறந்த சிதம்பரத்தில் நூற்றாண்டு விழா.

சிதம்பரத்தில் இரண்டு, மூன்று இடங்களில் விழா குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

விழா நடந்த தனியார் மண்டபத்திற்கு நாமும் சென்றோம். சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். 30 பேர் ரசித்துக்கொண்டிருந்தனர். ""இன்னும் கொஞ்சம் விரிவாக சிறப்பாக நடத்தியிருக்கலாமே?''

Advertisment

சிதம்பரம் ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரியிடம் (மு.க.முத்துவின் துணைவியார்) கேட்டோம்.

""நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினோம். பி.சுசீலா உட்பட பல வி.ஐ.பி.கள் வந்தனர். அப்பா வாழ்ந்த ஊரில் நடத்தவேண்டுமென அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் கூட்டமில்லை. அடுத்த வருடங்களில் சிறப்பாகச் செய்யலாம்'' என்றார் சிவகாமசுந்தரி.

விழாவில் இசைச்சித்தரின் நூற்றாண்ட

நூற்றாண்டு விழாவில் 30 பார்வையாளர்கள்!

kuthoo

Advertisment

முத்தமிழ் இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமனுக்கு, அவர் பிறந்த சிதம்பரத்தில் நூற்றாண்டு விழா.

சிதம்பரத்தில் இரண்டு, மூன்று இடங்களில் விழா குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு இடங்களில் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

விழா நடந்த தனியார் மண்டபத்திற்கு நாமும் சென்றோம். சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். 30 பேர் ரசித்துக்கொண்டிருந்தனர். ""இன்னும் கொஞ்சம் விரிவாக சிறப்பாக நடத்தியிருக்கலாமே?''

Advertisment

சிதம்பரம் ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரியிடம் (மு.க.முத்துவின் துணைவியார்) கேட்டோம்.

""நூற்றாண்டு விழாவை சென்னையில் நடத்தினோம். பி.சுசீலா உட்பட பல வி.ஐ.பி.கள் வந்தனர். அப்பா வாழ்ந்த ஊரில் நடத்தவேண்டுமென அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் கூட்டமில்லை. அடுத்த வருடங்களில் சிறப்பாகச் செய்யலாம்'' என்றார் சிவகாமசுந்தரி.

விழாவில் இசைச்சித்தரின் நூற்றாண்டு விழா மலரும் வெளியிடப்பட்டது.

-அ.காளிதாஸ்

சிறுமிக்கு டெஸ்ட் டியூப்?

மண்ணச்சநல்லூர் இளங்கண் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரியாஸ் என்ற இளைஞருக்கும், விழுப்புரத்தைச் சேர்ந்த 13 வயதேயான ஒரு சிறுமிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்திக்கொண்டிருந்த ரியாஸ் ஜோடிக்கு குழந்தை இல்லை. திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அணுகிய ரியாஸ், டெஸ்ட் டியூப் முறையில் தன் மனைவியை தாயாக்க முயற்சி செய்திருக்கிறார்.

விஷயம், சைல்டு லைனுக்கும் சமூகநலத்துறைக்கும் சென்றது. மண்ணச்சநல்லூர் காவல்துறையினர், இரண்டுநாள் முன்பு ரியாஸின் வீட்டிற்குள் நுழைந்தனர். அந்தச் சிறுமியை மீட்டு, சமூகநலத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

ரியாஸ் மீதும் அவர் பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறது மண்ணச்சநல்லூர் போலீஸ்.

-ஜெ.டி.ஆர்.

தடை மீறி நடந்த சந்தனக்கூடு!

kuthoo

பவானிசாகர் தொகுதி மலைவனத்தில் புலிகள் காப்பகம் உள்ளது. இதற்குள் காராசிக்கொறையில் இருந்து தெங்குமராட்டா செல்லும் வழியில் அடர்வனத்திற்குள், வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தின் நடுவில், திப்புசுல்தான் காலத்திய தர்கா ஒன்று உள்ளது.

இந்த தர்காவில் வருடாவருடம் மூன்று நாட்கள் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். கர்நாடக, கேரள, தமிழக முஸ்லிம் மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு சந்தனக்கூட்டிற்கு வந்தவர்களை உள்ளே நுழையவிடவில்லை வனத்துறையினர்.

கெஞ்சிப் பார்த்த முஸ்லிம் மக்கள், கடைசியாக மாவட்ட ஆட்சியரின் உதவியை எதிர்பார்த்தனர். அவர், ""பாரம்பரிய விழாக்களை தடுக்காதீர்கள்'' என்று சொல்லியும்கூட கேட்கவில்லை... வனத்துறை அதிகாரிகள்.

பிறகு, முன்னாள் எம்.எல்.ஏ. சி.பி.ஐ. சுந்தரத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றார்கள். அவர் தனது சகாக்களோடு வந்தார். முஸ்லிம் மக்களை தர்காவுக்கு அழைத்துச் சென்று, சந்தனக்கூடு விழாவை நடத்த உதவி செய்தார். இப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்குத் தொடுத்திருக்கிறது வனத்துறை.

-ஜீவாதங்கவேல்

திருக்குறளும் குட்கா பண்டல்களும்!

டில்லியில் இருந்து வாரம் இரண்டு நாட்கள், மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வருகிறது திருக்குறள் எக்ஸ்பிரஸ்.

இந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் மதுரையில் 20 நிமிடம் நின்று செல்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் 26 நாட்கள், இந்த ரயிலில் இருந்து தலா 30 பண்டல் குட்காவை மதுரையில் இறக்கியிருக்கிறார்கள். ஆனால் ஒருநாள்கூட டெல்லியில் புக் செய்த விவரமும் இல்லை... மதுரையில் டெலிவரி செய்த விவரமும் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் உதவியோடு வி.ஐ.பி.க்கள் கேட் வழியே இறக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல... மொத்தம் 7800 குட்கா பண்டல்கள்.

மதுரை ரயில்நிலையத்தில், திருக்குறள் எக்ஸ்பிரஸில் இருந்து வாரம் இருமுறை குட்கா பண்டல்கள் இறக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறது ரயில்வே விஜிலென்ஸ். ரகசிய விசாரணை தொடர்கிறது.

-ஜெ.டி.ஆர்.

குழந்தை விற்பனையில் அரசியல்?

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த போப்பன் சோனா என்பவரின் மனைவி, கணவனோடு கோபித்துக்கொண்டு நான்குமாதக் குழந்தையை கணவனிடம் போட்டுவிட்டுப் போயே போய்விட்டார்.

தாய்ப்பால் இன்றி தவிக்கும் பிள்ளையை என்ன செய்வது? ""டேய் கல்கத்தாவில் இருக்கிற எங்க சொந்தக்காரங்களுக்கு குழந்தை இல்லை... உன் குழந்தைக்கு நல்ல ரேட் வாங்கித் தர்றோம் விக்கிறியா?'' கேட்டார்கள்... கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர்.

குழந்தையை விற்கத் தயாரானார் போப்பன் சோனா. விலை பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த விஷயம் தி.மு.க. மகளிரணி மாலதிக்குத் தெரிந்தது. இவர் சைல்டு லைனுக்கு தகவலை பாஸ் செய்தார்.

விரைந்து வந்த சைல்டுலைன் அதிகாரிகள், குழந்தையை பொள்ளாச்சி "சரணாலயம்' அமைப்பிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். குழந்தையின் அம்மா 90 நாட்களுக்குள் வந்து கேட்டால் குழந்தையை ஒப்படைப்பார்களாம்.

-அருள்குமார்

இதையும் படியுங்கள்
Subscribe