kuthoo

எம்.எல்.ஏ.வின் ஆபாச அர்ச்சனை!

kuthoo

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் உயர்கல்வி அன்பழகன், தொழிற்துறை சம்பத், ச.ம.உ.க்கள் முருகுமாறன், பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்களை வரவேற்க பல இடங்களிலும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சிதம்பரம் வண்டி கேட் பகுதி பேனர்களில் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ. முருகுமாறனின் படத்தை கடைசியாக... அலட்சியமாக வைத்திருந்தார்களாம்.

வாட்ஸ்அப் மூலமாக கா.ம.கோயில் எம்.எல்.ஏ. முருகுமாறனுக்குத் தகவலைத் தெரிவித்தார்கள் அவருடைய நலன்விரும்பிகள். கொதிப்படைந்த முருகுமாறன் பேனர் வைத்தவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செழியனைத் தொலைபேசியில் பிடித்தார். எழுதுவதற்கு விரல்களும், பேசுவதற்கு நாவும், கேட்பதற்கு செவியும்கூட கூசும்படியான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார் எம்.எல்.ஏ. முருகுமாறன்.

""சாதாரண விஷயம்; இதுக்காக இவ்வளவு ஆபாசமா பேசலாமா?'' என்கிறார் பரங்கிப்பேட்டை, அம்மாபேரவை ஒ.செ. ராஜாங்கம். முருகுமாறன் ஆதரவாளர்களோ, ""

எம்.எல்.ஏ.வின் ஆபாச அர்ச்சனை!

kuthoo

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் உயர்கல்வி அன்பழகன், தொழிற்துறை சம்பத், ச.ம.உ.க்கள் முருகுமாறன், பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்களை வரவேற்க பல இடங்களிலும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சிதம்பரம் வண்டி கேட் பகுதி பேனர்களில் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ. முருகுமாறனின் படத்தை கடைசியாக... அலட்சியமாக வைத்திருந்தார்களாம்.

வாட்ஸ்அப் மூலமாக கா.ம.கோயில் எம்.எல்.ஏ. முருகுமாறனுக்குத் தகவலைத் தெரிவித்தார்கள் அவருடைய நலன்விரும்பிகள். கொதிப்படைந்த முருகுமாறன் பேனர் வைத்தவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செழியனைத் தொலைபேசியில் பிடித்தார். எழுதுவதற்கு விரல்களும், பேசுவதற்கு நாவும், கேட்பதற்கு செவியும்கூட கூசும்படியான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார் எம்.எல்.ஏ. முருகுமாறன்.

""சாதாரண விஷயம்; இதுக்காக இவ்வளவு ஆபாசமா பேசலாமா?'' என்கிறார் பரங்கிப்பேட்டை, அம்மாபேரவை ஒ.செ. ராஜாங்கம். முருகுமாறன் ஆதரவாளர்களோ, ""எங்க அண்ணனுக்கு கட்சி மாநில அமைப்புச் செயலாளர் பதவி கொடுத்திருக்கு. அவரை பேனரில் அசிங்கப்படுத்தலாமா? ஏதோ கோபத்தில் பேசிவிட்டார்'' என்கிறார்கள்.

-அ.காளிதாஸ்

ஏழைத்தாய்க்கு அமைச்சர் உதவி!

கோவையில் உருவாகியிருக்கும் தனியார் நீச்சல்குளத்தை கடந்த 15-ந் தேதி திறந்துவைத்தார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், டி.ஆர்.ஓ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பொதுமக்களும் கலந்துகொண்டனர். விழா முடிந்ததும், அமைச்சரை நோக்கி தனது மகளோடு ஓடிவந்தார் ஒரு ஏழைத்தாய். திருமண வயதுள்ள மகளின் கழுத்தில் 2 கிலோ வெயிட் அளவுக்கு மிகப்பெரிய கட்டி இருந்தது. அமைச்சரிடம் "அய்யா என் மகளைப் பாருங்கய்யா... இவள் கழுத்தில் இவ்வளவு பெரிய கட்டி இருப்பதால் யாருமே இவளை கல்யாணம் செய்துகொள்ள முன்வரமாட்டேங்கறாங்கய்யா. ஆபரேஷன் செய்யணும்ங்கிறாங்க... அதுக்கு என்கிட்டே வசதி இல்லேங்கய்யா... ஆபரேஷனுக்கு நீங்கதான் உதவி செய்யணும்'' என காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். உடனே, கலெக்டரிடமும் டி.ஆர்.ஓ.விடமும் ""இந்தம்மாவோட பெண்ணின் கழுத்திலுள்ள கட்டியை அகற்ற சர்ஜரிக்கு ஏற்பாடு செய்யுங்கள். தனியார் மருத்துவமனையில்தான் செய்ய முடியும் எனில் அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள்'' என உத்தரவு போட்டு உதவி செய்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

-இளையர்

கறுப்புக் கொடியுடன் பதறிய போலீஸ்காரர்!

சிவகாசி தலைமை அஞ்சலகம் எதிரில் உள்ள தங்கள் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் தோழர்கள் கறுப்புக்கொடி ஏற்றி, கறுப்புச் சட்டை அணிந்து ""மோடியே திரும்பிப் போ... திரும்பிப் போ...'' என்று கோஷங்கள் எழுப்பி, எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

சற்று தள்ளி போலீஸ்காரர் ஒருவர் கையில் கறுப்புக் கொடியோடு நின்றுகொண்டிருந்தார். மஞ்சுவிரட்டுப் போராட்டத்திற்கு போலீசார் ஆதரவளித்தது போல, காவிரி மேலாண்மைக்கான போராட்டத்திலும் போலீசார் கலந்துகொள்கிறார்கள்போலும் என்ற எண்ணத்தோடு பலரும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

பதறிய அந்தப் போலீஸ்காரர், ""அந்த டூவீலர்ல இந்தக் கொடியைக் கட்டியிருந்தாங்க. அதை அவுத்தெடுத்தேன்... அவ்வளவுதான். என் கடமையைத்தான் செய்தேன். யாரும் போட்டாகீட்டா எடுத்து "இதோ! கறுப்புக்கொடி காட்டும் போலீஸ்'னு போட்டுவிடாதீங்கப்பா... என் வேலைக்கே உலையாகிப்போகும்'' சொல்லியபடி அந்தக் கறுப்புக் கொடியை பதுக்க இடம் தேடினார் அவர்.

-ராம்கி

ஒரு விரலுக்கு பத்தாயிரமா?

ananthkumar

திருப்பூர் பத்திரப்பதிவுத்துறை இரண்டாவது அலுவலகப் பதிவாளர் ஆனந்தகுமார் மீது பொதுமக்களுக்கு எரிச்சலோ எரிச்சல்.

""எத்தனையோ பதிவாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். இவரைப் போல நாங்க யாரையும் பார்த்ததில்லை. கலெக்ஷன்ல யாருக்கும் இல்லாத துணிச்சல் இவர்கிட்ட இருக்கு. அலுவலக கிளார்க் சாமிதான் இவருக்கு எல்லாமும். பொதுமக்கள் பத்திரம் பதியும்போது, ஒவ்வொரு பார்ட்டியும் கையெழுத்துப் போடும்போது, சாமியைப் பார்த்து மூன்று விரலோ, ஐந்து விரலோ விரித்துக் காட்டுவார். அவர் புரிந்துகொள்வார். ஆனந்தகுமாரின் ஒரு விரல்விரிப்பின் மதிப்பு, பத்தாயிரமாம். மொத்தமாகப் பத்து விரல்களையும் விரித்துக் காட்டினால் ஒரு லட்சம் மொய். அந்தத் தொகையையும் கருவூலத்திற்குள் சென்று பத்திரப் பார்ட்டிகளின் ஒரு டேபிள் லாக்கரில் போட்டுவிட வேண்டும்'' என்கிறார்கள் கொடுத்துக் கொதித்த பொதுமக்கள்.

பதிவாளர் ஆனந்தகுமாருக்கு திருப்பூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமாரின் ஆசியும் அரவணைப்பும் என்றும் உண்டாம்.

-அருள்குமார்

மறுபடியும் வந்துவிட்டாரா?

kuthooதிருவண்ணாமலை முத்துவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சுமதி, குணசுந்தரி, சந்திரசேகரன் ஆகிய மூவரும் 20-04-18 அன்று எஸ்.பி.அலுவலக வாசலில் தங்கள் தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்கள்.

தடுத்துக் காப்பாற்றிய போலீஸார், மூவரையும் உள்ளே அழைத்துச் சென்று விசாரித்தனர். ""புனல்காடு கிராமத்தில் எங்களுக்குச் சொந்தமான ஆறேகால் ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடம் தனக்குச் சொந்தமானது என்று விஜய் மன்ற மாவட்ட தலைவர் பாரதி, தனது ஆட்களோடு வந்து மிரட்டுகிறார். தாலுகா போலீசும், ஆர்.டி.ஓ.வும் பாரதிக்கு சாதகமாகவே பேசுகிறார்கள். பாரதி போன்றவர்களோடு எங்களால் மோதமுடியுமா? அதுதான் இங்கே வந்து எரிந்து சாக விரும்பினோம்'' என்றார்கள் அவர்கள்.

திருவண்ணாமலை மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் பாரதி, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத்தின் தம்பி ஆவார். அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் உள்ளே சென்று வந்தவர்.

-து.ராஜா

kuthoo
இதையும் படியுங்கள்
Subscribe