ஆளுங்கட்சி உள்குத்தால் அம்போவாகும் 'கும்பகோணம்' மாவட்டம்!

kmm

"தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது' என்கிற முதல்வரின் அறிவிப்பு, கும்பகோணம் கோட்ட பகுதி மக்களை வெகுவாகவே ஆத்திரப்படச் செய்திருக்கிறது.

kk

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கும்பகோணம் வருவாய் கோட்டத்தை, தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கால்நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துவருகிறது. நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க முடிவெடுத்தபோது, கும்பகோணத்தை

"தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்பட மாட்டாது' என்கிற முதல்வரின் அறிவிப்பு, கும்பகோணம் கோட்ட பகுதி மக்களை வெகுவாகவே ஆத்திரப்படச் செய்திருக்கிறது.

kk

கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கும்பகோணம் வருவாய் கோட்டத்தை, தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை கால்நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துவருகிறது. நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரிக்க முடிவெடுத்தபோது, கும்பகோணத்தை விரைவில் மாவட்டமாக்கும் பணிகள் நடக்கிறது என சட்டசபையில் அறிவித்தார் அமைச்சர் உதயகுமார். மயிலாடு துறை தனி மாவட்டமான போது, கும்ப கோணம்வாசிகளின் எதிர்பார்ப் பும் அதிகமானது.

kkஅது நிறைவேறாத நிலையில், கும்பகோணத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த 17ஆம் தேதி ஈரோட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ""தமிழகத் தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என உறுதிபட தெரிவித்தது, கும்பகோணம் கோட்ட மக்களை வெகுவாகவே கலங்கடிக்கச் செய்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சத்யநாராயணன், ""’ஒட்டு மொத்தமாக கடையடைப்பு செய்து போராடிக் கொண்டிருக்கும் அந்த சமயத்தில் இதை சொல்லி இருப்பது எங்களை மேலும் வேதனைப்பட செய்துள்ளது'' என்கிறார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் கூறுகையில், ""இதில் ஏதோ உள்ளடி அரசியல் இருப்பதாக உணர்கிறோம். ஒரு மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் இதனை பற்றி கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பதும் அந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது''’’என்கிறார்.

பா.ம.க நிர்வாகி ம.க.ஸ்டாலின் கூறுகையில், ""வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுடரோட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஓடி மனு கொடுக்க இருக்கிறார்கள்'' என்கிறார்.

கும்பகோணம் தனி மாவட்டமாவதில் என்ன சிக்கல் இருக்கிறது என நாம் விசாரித்தபோது, ""தற்போது அமைச்சராக இருக்கும் துரைக்கண்ணு விற்கும், முன்னாள் அமைச்சரும் எம்பியுமான வைத்தியலிங்கத்திற்குமான அரசியல். அடுத்து கும்பகோணம் கோட்டத்தில் உள்ள திருவிடை மருதூர், கும்பகோணம், பாபநாசம், ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பாபநாசத்தை தவிர இரண்டு சட்டமன்றத்தொகுதிகளுமே தொடர்ந்து திமுகவின் கோட்டையாகவே இருப்பது. வைத்திய லிங்கம் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பதால் கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவித்தால் மொத்த பெயரும் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கிடைத்துவிடும், தனது ஆதரவாளர்களை ஒடுக்கிவிடுவார் என்கிற லாபி தான், தனி மாவட்ட கோரிக்கையை நீர்த்துப்போக வைத்திருக்கிறது'' என்கிறார்கள் விவரமாக.

-செல்வகுமார்

nkn250720
இதையும் படியுங்கள்
Subscribe