லலிவிங் டுகெதர் வாழ்வியல்போல் தற்போது பெருநகரங்களில் வேகமாக பரவி வருகிறது ஐர்க்ஷர் Hobo sexuality (ஹோபோ செக்ஸுவாலிட்டி) எனும் உறவு!
சில தினங்களுக்கு முன் கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், கொல்லம் போன்ற முக்கிய நகரங்களில் வாடகைக்கு விடப்படும் அபார்ட்மெண்ட்டுகளில் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது அந்த அப்பார்ட்மெண்டுகளில் தம்பதிகள் என்ற போர்வையில் அறைகளில் தங்கியிருந்த ஏராளமான ஆண்களையும் பெண்களையும் போலீசார் பிடித்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் கணவன் மனைவியோ, காதலர்களோ அல்ல என்றும், ஹோபோ செக்ஸுவாலிட்டி முறையில் வாழ்பவர்கள் என்றும் கூறினர். அப்படியென்றால் இந்த முறைக்கு என்ன அர்த்தம்?
"இது முறை தவறிய உறவும் அல்ல, அதேபோல் இருவருக்கும் நிரந்தரமான உறவும் அல்ல, ஓரிரு நாளில் பிரிந்து விடுவோம். அதன்பிறகு எங்களுக்குள் எந்தவொரு தொடர்பும் இருக்காது" என்றனர். போலீசாருக்கோ அவர்கள் கூறுவதுகேட்டு தலைசுற்றியது. அதன்பிறகு அவர்களை எச்சரித்து அனுப்பியது..
போலீஸ் அதிகார

போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், “"குடும்பச் சூழல்களால் மனரீதியாக பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் தான் இந்த மாதரி நிரந்தரமற்ற தவறான உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இன்றைய காலத்தில் ஒரு வருக்கொருவர் புரிதலும் நெருக்கமும் இல்லாம லிருக்கும் கணவனுக்கும், மனைவிக்கும், தங்களின் உணர்வுகளை வெளிக்காட்ட ஒரு உறவை தேடுகிறார்கள்.
அதேபோல் ஒருவருக்கு (ஆணோ, பெண்ணோ) அதிக பொருளாதார வசதியும், இருப்பிட வசதியும் இருக்கும்பட்சத்தில், ஓர் உறவு தேவைப்படும் சூழலில், இதே தேடலிலிருக்கும் ஒருவரை தொடர்புகொண்டு, ஒன்றாக ஓரிரு நாட்கள் வாழக்கூடிய விவகாரம்தான் இந்த ஹோபோசெக்ஸுவாலிட்டி. இன்று நீ, நாளைக்கு இன்னொருவர் என்று இதில் ஈடுபடக்கூடிய இவர்களிடையே தனிப்பட்ட அன்போ காதலோ எதுவுமில்லை. இவர்களை பாலியலில் ஈடுபடுபவர்களென்றும் சொல்லமுடியாது. ஒருவரின் உணர்வுக்காக அல்லாமல், ஏக்கத்தை போக்குவதற்கான உறவு எனச்சொல்லலாம். அதேவேளை, இது சமுதாயத்தில் குடும்ப உறவுகளின் ஒழுங்கை சிதைக்கக்கூடிய வைரஸ் போன்றது''’என்றார்.
கொல்லம் புனலூர் காவல்துறை பெண் அதிகாரி கூறுகையில், "ஹோபோ செக்ஸூவா லிட்டி உறவில், பெற்றோர்களை விட்டு வெளியூரில் தங்கியிருக்கும் இளைஞர், இளம்பெண்களும்கூட ஈடுபடுகிறார்கள் என்பது அதிர்ச்சியான விஷயம். சோதனையில் பிடிபட்ட 40 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சமூகத்தில் நல்ல வசதியாக, நல்ல வேலையில், தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள். கருநாகப்பள்ளியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகியவர். திருமண உறவில் மனரீதியாக பாதிப்படைந்து, ஆறுதலுக்காக இந்த உறவில் ஈடுபட்டிருப்பதாக சொன்னார். இதில் கிடைக்கும் ஆறுதலுக்காக முன்பின் அறிமுகமில்லாதவர் களோடு உறவை பரிமாறிக்கொண்டு வாழ்கிறார்கள்''’என்றார்.
மேலும், கேரளாவிலுள்ள பெருநகரங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற முக்கிய நகரங்களிலும் சென்னை, பெங்களூரு, ஹைதரா பாத் போன்ற மெட்ரோபாலிட்டன் சிட்டிகளிலும் இந்த நெட்வொர்க் வளர்ந்து வருகிறது. இதற்கென்று கூகுள் ப்ளே ஸ்டோரில் 'ஆப்' உள்ளது. அதில் பணம் கட்டி மெம்பர்ஷிப் ஆனால் தனக்கு தேவையானவர்களை அதில் மெம்பர்களாக இருப்பவர்களின் புரோபைல் பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கலாச்சாரம் எந்தளவு அவர்களின் குடும்பச் சூழலை பாதிக்கும் என்றுகூட புரிந்துகொள்ளாமல் ஹோபோ செக்ஸுவாலிட்டிதான் சொர்க்கம் என்று கிடக்கிறார்கள்''’என்றார் அந்த பெண் காவல் அதிகாரி.
இதைப்போல் 55 வயது ஆண் ஒருவர் கூறுகையில், "மனைவி அரபு நாட்டில் மருத்துவர். நான் இங்கு கட்டிட வல்லுநராக இருக்கிறேன். மகளுக்கு திருமணமாகிவிட்டது. சொத்துக்கு குறைவில்லை. தனிமை உணர்வுதான் தொடர்கிறது. இந்த உறவில் சிலநாட்கள் வாழ்ந்தாலும் பல ஆண்டுகள் வாழ்ந்ததுபோல் மகிழ்ச்சி கிடைக்கிறது... தனிமை உணர்வும் தீர்கிறது''’ என்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த 8ஆம் தேதி குமரி மாவட்டம் புத்தேரியை சேர்ந்த சிவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், "என்னுடைய மனைவி நந்தினி அடிக்கடி வெளியூர் செல்வதாகக் கூறிக்கொண்டு ஒன்றிரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு வருகிறாள். எங்களுக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எங்களுக்குள் சரியான புரிதல் இல்லாததால் அவளிடம் எதுவும் கேட்க முடிய வில்லை. எதோ தப்பான தொடர்பிலிருப்பதாகத் தெரிகிறது'’எனக்கூறி மனைவியின் ஸ்மார்ட் போனை கொடுத்தார். அதை சோதித்த சைபர் க்ரைம் போலீசார், அவர் மனைவியின் அதிர்ச்சிகரமான ஹோபோ செக்ஸுவாலிட்டி தொடர்பினை கண்டறிந்தனர். மனைவி மீது சந்தேகப்பட்டு புகாரளித்ததால்தான் இந்த பழக்கம் குமரி மாவட்டத்தில் பரவியிருப்பதே போலீசாருக்கு தெரியவந்தது. தற்போது தீவிர விசாரணையில் இருக்கிறார்கள்.
சைபர் க்ரைம் சம்பந்தமான கேஸ்களை கையாளும் பெண் வழக்கறிஞர் ஒருவரோ, “"இந்த ஹோபோ செக்ஸுவாலிட்டி செயலி, புரோக்கர் இல்லாத பாலியல் தொழில் போன்றது. இன்றைய சமூகத்தை சீரழிக்கக்கூடிய இது போல் செயலிகள் செல்போன்களில் ஏராளம் இருக்கின்றன. ஒரு காலத்தில் குறிப்பிட்ட வயதுள்ளவர்கள் மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுவார்கள். இப்போது வயது வித்தியாச மில்லாமல் பலரையும் இச்செயலிகள் இழுத்து வருகின்றன.
இச்செயலிகளால் சமூகக்குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இவற்றை தடை செய்வதற் கான செயலை அரசு முன்னெடுக்க வேண்டும்'' என்றார்.
அரசும், காவல்துறையும் விழித்துக் கொள்ளுமா?