காதல் கசமுசா சர்வீஸ்!

உச்சி வெயில் அடித்தாலும் ஸ்ஸ்ஸென்று வீசும் காற்று உச்சந்தலைக்குள் புகுந்து பாதம்வரை பரவி ஜில்லென்று ஆக்கிவிடும். எந்தக்கடலில் கால் நனைத்தாலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் கால் நனைப்பது சுகமோ சுகம். கடலில் வானுயர்ந்து கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் நின்று செல்ஃபி எடுப்பதும், விவேகானந்தர் பாறையில் கண்மூடி நின்றால் மனதுக்கு கிடைக்கும் அமைதி கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்குமா? ஆனால், அங்கேயே நின்றுகொண்டிருந்தால் மிட்நைட் மசாலாவுக்காக செல்லமுடியாது என்பதால் கண்ணை திறந்து பயணிக்க ஆரம்பித்தோம்.…

மெய்சிலிர்ப்போடு உதித்த சூரியன் ரசனையோடு மறைந்து இருள் மெல்ல மெல்ல எண்ட்ரி கொடுக்க ஆரம்பித்தது. சூரியன் மறைவதை தெளிவாக பார்க்கக் கூடிய கோவளம் பகுதியில் கடைசி யில் மிஞ்சி இருப்பவர்கள் காதல் ஜோடிகள்தான். கடல் அலை முத்த மிடும் பாறைகளுக்கிடையே மின்னிய நிலவு வெளிச்சத்தில் காதல் ஜோடிகள் கண்ணாமூச்சியா விளையாடுவார்கள்? உலகத்தின் தலைசிறந்த சொல் செயல்தான். அதை உணர்ந்தவர்கள் அங்கிருந்த காதலர்கள். நோ ஸ்பீச். ஒன்லி ஆக்டிவிட்டிதான்.

midnightmasala

Advertisment

இரவு 9:30 மணிக்கு டூவீலர் பேட்ரல் வண்டியில் வந்த இரண்டு காக்கிகள் கையிலிருந்த டார்ச் லைட்டை கலங்கரை விளக்குபோல் கடற்கரை பாறைகளை நோக்கி வீசினர். நமக்குத்தான், அது டார்ச் லைட். காதலர்களுக்கோ அது டார்ச்சர் லைட்டாக மாறி இம்சை செய்தது. ’"250க்கு மேற்பட்ட லாட்ஜ்கள் இருக்கு. ரூம் போட்டு கொஞ்சிக்க வேண்டியதுதானே? நேற்று இப்படித்தான் திருவனந்த புரம் பிரபல ஐ.டி. கம்பெனியில வேலை செய்யுற ஒரு ஜோடியை உள்ளூர்வாசிகள் சிலர் ரவுண்ட்-அப் பண்ணியிருக்காங்க'’என்று எச்சரித்துக்கொண்டிருந்தனர் போலீஸார்.

""ஹோட்டலில் ரூம்போட்டு கொஞ்சுங்கன்னு சொல்றதுக்கு இவங்க யாருங்க? சாதாரணமா ஹோட்டல் ரூம் புக் பண்ணினா எவ்ளோ செலவாகுது தெரியும்ங்களா? ஏ.சி. ரூம்னா அப்படியே டபுள் மடங்கு. கடல் அலையின் ஓசை,… இயற்கையான காற்று…இதெல்லாம் ஹோட்டல் ரூம்ல கிடைக்குமா? இங்கன்னா, எல்லை மீறாம கொஞ்சிட்டு வீட்டுக்கு போய்டுவோம். ஹோட்டல் ரூமுக்குள்ள போயி எல்லைமீறி வீட்டுல பிரச்சினை ஆகுறதுக்கா? அதுவும், இங்க கிடைக்கிற பாதுகாப்பு ஹோட்டல் ரூம்ல கிடைக்குமா? ஹோட்டல் ரூமுக்கு போகச்சொல்லிட்டு இவுங்களே வந்து ரெய்டு நடத்தி வசூல் பண்ணுவாங்க. லவ்வர்ஸ் வேற எங்கதான் போறதாம்?''’என்று கொந்தளித்துவிட்டு போகிறது ஒரு காதல் ஜோடி. "பொது இடத்துல எல்லை மீறுவதில் இப்படியொரு காரணமா?' என்று யோசித்தபடி… நமது டூவீலர் காந்திமண்டபம் சாலை வழியாக பயணித்தது.

Advertisment

அப்போது, ஒரு காதல் ஜோடியை மடக்கி உள்ளூர்வாசி ஏதோ பேசிக்கொண்டிருக்க… டவுட் வர செல்போனில் பேசுவதுபோல் நைஸாக நின்று ஒட்டுக் கேட்டோம்.

""ஹோட்டல் ரூமுக்கெல்லாம் போகாதீங்க. அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெய்டு நடத்துறாரு. அதனால வீட்டுல தங்குங்க. அதுக்குன்னு தனி ரூம் இருக்கு. பக்கத்தில் நிறைய வீடுகள் இருக்கு. ரொம்ப பாதுகாப்பானது. எங்க வீட்டு கெஸ்ட்போல் வந்து தங்கி, சந்தோஷமா இருந்துட்டுப் போங்க. வாடகை மூவாயிரம்தான்'' என்று உள்ளூர்வாசி கொக்கி போட்டுக்கொண்டிருந்தார். "ஓ...… வீடுகளையே லாட்ஜுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்' என்று தோன்றினாலும்… சிலர் தங்களின் வாழ்வாதாரத்துக்காக சுற்றுலா வுக்கு வரும் நல்ல குடும்பத்தினரை தங்களுடைய வீடுகளில் தங்க வைத்து வறுமையை போக்கிக்கொள்வதும் நடக்கிறது. தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகைக்கு எதிரே உள்ள டீக்கடையில் கட்டன் சாயா குடிக்க டூவீலரை ஸ்டாப் பண்ணினோம். அப்போது டி.எஸ்.பியின் பொலிரோ கார் வேகமாக வந்து நின்றது. அவசரமாக இறங்கிய ஒருவர், "கணேஷ் புகையிலை ஒண்ணு கொடுப்பா. காந்தி மண்டபத்துல ஏதோ பிரச்சனையாம், சீக்கிரம் போகணும்'’என்று சொல்லிவிட்டுச் செல்ல,… பின்தொடர்ந்தோம்.

குத்தகைக்கு எடுத்து தற்காலிக ஷெட் போட்டு கடை நடத்திவரும் அந்த கடைக்குள் புகுந்து 10 நாட்களாக திருடி வந்த கேரள இளைஞனை பிடித்து துவைத்துக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் அந்தத் திருடனை போலீஸ் மீட்டுச் சென்றது. 16 கால் கல்மண்டபத்தில் வெளிநாட்டுக்காரர்கள் பலர் கஞ்சா போதையுடன் நின்றுகொண்டிருந்தார்கள். சங்கிலித்துறைக்குப் போற வழியில வரிசையா படுத்திருப்பாங்க. அவங்ககிட்டபோயி சத்தமா இருமினா போதும் கஞ்சா கிடைக்கும் என்கிறார்கள். "இருமலுக்கு மாத்திரையை கொடுக்காம கஞ்சா கொடுக்கிறாங் களா? நல்லா இருக்குய்யா உங்க கோர்டு வேர்டு' என்றபடி கடந்து சென்றபோது லேசான மழை. தூறல் நின்றதும் விவேகானந்தபுரம் சந்திப்பை நோக்கி புறப்பட்டபோது திடீரென்று ஃபுல் மப்பில் வந்த ஓர் இளம் ஜோடியின் பி.எம்.டபுள்யூ கார், நின்று கொண் டிருந்த ஆட்டோவில் டமால் என்று மோத... ஆட்டோக்காரர் கள் சூழ ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்துவிட்டு… அப்படியே கடந்தபோது அடுத்தநாள் விடியலுக்கான நேரம் வந்தது.

(பயணிப்போம்)

-ரவுண்ட்-அப்: மணிகண்டன்

தொகுப்பு: -மனோ