குமரி அ.தி.மு.க. மா.செ. தளவாய்சுந்தரத்துக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மல்லுக்கட்டிக் கொண்டி ருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர் தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பசிலியான் நசரேத் டெபாசிட் இழந்தார். இந்த மோசமான தோல்விக்கு தளவாய்சுந்தரம் தான் காரணம். அவரின் தன்னிச்சையான தவறான வேட்பாளர் தேர்வால்தான் குமரி மாவட்டத்தில் முதல் முறையாக அ.தி.மு.க. டெபா சிட்டை இழந்துள்ளது என்று அமைப்புச் செயலாளர் பச்சைமால், மாவட்டப் பொருளாளர் திலக், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், முன்னாள் மா.செ. அசோகன், எக்ஸ் ஒ.செ.க்கள் கிருஷ்ணகுமார், கே.சி.யு. மணி போன்றோர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் வாசித்தனர்.
இந்த நிலையில்தான் இவர்களுக்குள் புகைந்துகொண்டிருந்த பூசல், ஜூலை 15-ஆம் தேதி நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூட்டிலுள்ள காமராஜர் சிலைக்கு தளவாய
குமரி அ.தி.மு.க. மா.செ. தளவாய்சுந்தரத்துக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மல்லுக்கட்டிக் கொண்டி ருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர் தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பசிலியான் நசரேத் டெபாசிட் இழந்தார். இந்த மோசமான தோல்விக்கு தளவாய்சுந்தரம் தான் காரணம். அவரின் தன்னிச்சையான தவறான வேட்பாளர் தேர்வால்தான் குமரி மாவட்டத்தில் முதல் முறையாக அ.தி.மு.க. டெபா சிட்டை இழந்துள்ளது என்று அமைப்புச் செயலாளர் பச்சைமால், மாவட்டப் பொருளாளர் திலக், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், முன்னாள் மா.செ. அசோகன், எக்ஸ் ஒ.செ.க்கள் கிருஷ்ணகுமார், கே.சி.யு. மணி போன்றோர் எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் வாசித்தனர்.
இந்த நிலையில்தான் இவர்களுக்குள் புகைந்துகொண்டிருந்த பூசல், ஜூலை 15-ஆம் தேதி நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நாகர்கோவில் வேப்பமூட்டிலுள்ள காமராஜர் சிலைக்கு தளவாய்சுந்தரம் தலைமையில் ஒரு அணியும், பச்சைமால் தலைமையில் இன்னொரு அணியும் தனித்தனியாக வந்து மாலை அணிவித்தது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னாள் மா.செ. அசோகன், “"தளவாய்சுந்தரம் தலை மையில் குமரி அ.தி.மு.க. முழுசா அழிந்து கொண்டே வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பொன்.ராதாகிருஷ்ணனுடன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு டம்மி வேட்பாளராக தி.மு.க.விலிருந்து வந்த பசிலியான் நசரேத்தை நிறுத்தி பா.ஜ.க.வுக்கு வேலை பார்த்தார் தளவாய்சுந்தரம். கள்ளச்சாராயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த எங்கள் யாருக்கும் தகவல் சொல்லாமல் கட்சி அலுவலகத்துக்குள்ளேயே ஆர்ப்பாட்டத்தை நடத்தி கட்சியை ஒரு அறைக்குள்ளேயே முடக்கிவிட்டார். மேலும் போஸ்டர்களில் பச்சைமால், நாஞ்சில் முருகேசன், திலக் மற்றும் என்னுடைய பெயரையோ படத்தையோ போடும் நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து தூக்குவேன் என எச்சரித்து கட்சிக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்துவிட்டார்''” என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கூறும்போது, “"நாகர்கோவில் மாநகராட்சியின் வடக்கு பகுதி செயலாளராக இருக்கும் ஒரே பெண் கவுன்சிலர் ஸ்ரீலிஜா. இவர் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தவர். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாகர் கோவில் தொகுதிக்கு சீட் வாங்கித் தருவதாக உத்தரவாதம் கொடுத்த தளவாய்சுந்தரம்… நாடாளுமன்றத் தேர்தலின்போது நாகர்கோவில் வந்த எடப்பாடியின் பிரச்சாரச் செலவுக் காக ஸ்ரீலிஜாவிட மிருந்து 50 லட்சம் வாங்கி செலவு களைச் செய்த தள வாய்சுந்தரம்,… தற்போது "ஸ்ரீலிஜாவின் பெயரையோ, படத்தையோ போஸ்டரில் போடக்கூடாது' என கூறியுள்ளார். காமராஜர் பிறந்தநாள் போஸ்டரில் அவளின் பெயரையும் போட் டோவையும் போடாத தோடு அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவும் இல்லை. ஸ்ரீலிஜா என் மகள் என்பதால்தான் இந்த நடவடிக்கையாம். அதோடு அவளுடைய வடக்குப் பகுதிச் செயலாளர் பொறுப்பையும் பறிக்கப்போவதாக கூறிவருகிறார். தன்னிச்சையாக முடிவெடுத்து ஒவ்வொருவரையும் அவர் ஒதுக்குவதால் எல்லாரும் அவருக்கு எதிராக நிற்கிறார்கள்''’என்றார்.
தளவாய்சுந்தரம் தரப்பினர் கூறும்போது, “"குமரி அ.தி.மு.க.வுக்குள் எந்த பிரச்சினையும் கிடையாது. பிரச்சினையே 3 பேர்தான். அதிலொருத்தர் (பச்சைமால்) டி.டி.வி.யிடமிருந்து வந்தவர், இன்னொருவர் (அசோகன்) ஓ.பி.எஸ்.ஸின் மா.செ.வாக இருந்தவர். மற்றொருவர் (நாஞ்சில் முருகேசன்) சசிகலாவிடமிருந்து வந்த வர். அவர்களின் ஸ்லீப் பர்செல் இந்த மூன்று பேரும். அதனாலதான் இவர்கள் மா.செ.வாக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் படத் தைப் போடாமல் போஸ்டர் ஒட்டு கிறார்கள். இந்த 3 பேரும் ஆளும்கட்சிக்கு எதிராக நடந்த ஒரு போராட்டத்தில்கூட கலந்துகொள்ளவில்லை. வடக்குப்பகுதி செயலாளர் ஸ்ரீலிஜா, மா.செ. தளவாய் சுந்தரத்துக்கு எதிராக செயல்படும் அந்த 3 பேருடன் கைகோர்த்துக்கொண்டிருக் கிறார்''’என்கின்றனர்.
பச்சைமால் தரப்பினர் கூறும்போது, "தளவாய்சுந்தரம் எங்கிருந்து வந்தார்? டி.டி.வி.யின் ஆலோசகராக இருந்து கடைசியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை தக்கவைக்கத்தான் எடப்பாடி அணியில் வந்து சேர்ந்தார். இப் போதுகூட டி.டி.வி.யின் ஸ்லீப்பர்செல்லாக இங்கு இருந்துகொண்டு அ.தி.மு.க.வை அழித்துக்கொண்டிருக்கிறார். ஒ.செ.க்கள், மா. நிர்வாகிகளின் படத்தைப் போட்டு கட்சிக்காரர்கள் போஸ்டர் ஒட்டுவது தப்பா? இதற்கெல்லாம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது நியாயமா? இப்படி எதாவது கட்சியில் நடக்கிறதா?
கட்சி அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அங்கு தொண்டர்கள் உட்கார்ந்து பேசுவதற்கும் தளவாய்சுந்தரம் தரப்பினர் அனுமதிப்ப தில்லை. இதனால்தான் அமைப்புச் செயலாளர் என்ற முறையில் பச்சைமால், நாகர்கோவிலில் வீட்டோடு ஒரு கட்சி அலுவலகத்தை உருவாக்கிக் கொடுத் திருக்கிறார். அங்கு எந்த நேரமும் கட்சித் தொண்டர்கள் உட்கார்ந்து பேசு கிறார்கள். இதுதான் தளவாய்சுந்த ரத்துக்கு நெருக்கடியை ஏற் படுத்தியிருக்கிறது''’ என்கின்றனர்.
இதேரீதியில் மோதல் தொடர்ந்தால் குமரியில் அ.தி.மு.க. காணாமல் போனாலும் ஆச்சர் யப்படுவதில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.