டந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், 20 நாட் களாகத் தலைமறை வாக இருந்தநிலையில், கர்நாடக மாநிலம் ஹாசனில் அவர் பதுங்கியிருப்பது தெரியவர, தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனை யில் மருத்துவப் பரிசோதனை மற்றும் கொரோனோ பரி சோதனை செய்யப்பட்டது. பின்னர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

rr

Advertisment

அதனைத் தொடர்ந்து அவரை மதுரை சிறைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து திருச்சி சிறைக்கு மதியம் 3 மணியளவில் காவல்துறை யினர் அழைத்து வந்தனர். உள்ளே நுழைந்தவுடன் அவருடைய கையில் கட்டி யிருந்த கயிறுகளை அகற்றி யுள்ளனர். அதன்பின் மருத்துவர் அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அனைத்தும் சீராக இருப்ப தாகவும், உடலில் வேறு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை என்றும் உறுதிபடுத்தியû தயடுத்து, சிறைக்குள் உள்ள தனி அறையில் அவர் அடைக்கப் பட்டார்.

கொரோனா முடிவுகள் இதுவரை வராததால் அவரைத் தனிமைப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பதால், காலையில் சப்பாத்தி உணவு வழங்கப் பட்டது. அதன்பிறகு செய்தித் தாள்களை வாசித்துள்ளார். மதியம் சாம்பார் சாதம், இரவு மீண்டும் சப்பாத்தி வழங்கப்படு கிறது.

அவர் மிகவும் அமைதி காப்ப தாகவும், யாரிடமும் எதுவும் பேசாமல் தியான நிலையில் இருப்பதாகவும் கூறப் படுகிறது. திங்கட் கிழமை அவ ருடைய வழக்கு விசாரணைக்கு வரும்போது, அவருக்கு ஏ கிளாஸ் அறை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் விரும்பும் உணவுகளைச் சிறைக்காவலர்கள் மூலம் வழங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலை யில், ராஜேந்திர பாலாஜியின் தரப்பில், தன் மீது தமிழக அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கையில், அவர் மீது வழக்கு பதிவதற் கான முகாந்திரம் இருப்பதாக, தமிழக அரசு, திங்களன்று சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். தற்போது ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், ஒரு வழக்கு திங்களன்று விசாரணைக்கு வருகிறது. எனவே, அதில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதாக இருந்தாலும், இன்னொரு வழக்கு அவரது ஜாமீன் விடுதலைக்கு எதிராக இருக்கக் கூடும்.