"அவரவர் செயலுக்கும் அதனால் ஏற்படும் தீமைகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும்'' -இது தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவனின் ஏடாகூட வீடியோ பற்றி பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் கடைசி வரிகள். "இது ராகவனுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க நிர்வாகிகள் பலருக்கும் பொருந்தும்'' என்கிறார்கள் கமலாலயத்தினர்.

அண்ணாமலையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட வீடியோ என அறிவிக்கப்பட்ட இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் பெண் செங்கல்பட்டைச் சேர்ந்தவர். யமுனா நதியை தனது பெயரில் வைத்திருப்பவர். கே.டி.ராகவனின் இதுபோன்ற ஆபாச செய்கைகள் தொடர்பான புகார்கள் இருக்கிறது. அதற்கு ஆதாரமும் இருக்கிறது என சமீபகாலமாக பா.ஜ.க. வட்டாரங்களில் சுற்றி வந்தவர்.

kt

ராகவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நெருக்கமானவர். மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த இல.கணேசனுக்கு வேண்டியவர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர். டி.வி.யில் முகம் காட்டுபவர். மாநில பொதுச்செயலாளர் என ஏகப்பட்ட அடையாளம் அவருக்கு உண்டு. கே.டி.ராகவன் செல்வாக்கை மட்டும் வளர்த்துக்கொள்ளவில்லை. எதிரிகளையும் வளர்த்துக்கொண்டிருந்தார்.

Advertisment

சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஒரு நாளிதழில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுகிறார்கள் என செய்தி வெளியானது. பா.ஜ.க. மாநிலத் தலைவராக இருந்த ஒருவரும் பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பைச் சேர்ந்தவரும் அந்த செய்தியில் மறைமுகமாக சொல்லப்பட்டிருந்தார்கள். இந்த செய்திக்கு காரணம், கே.டி.ராகவன்தான் என அப்போது கட்சிக்குள் பேசப்பட்டது. அந்த நாளிதழை எதிர்த்து போராட்டங்கள் நடத்த முயற்சி நடைபெற்றபோது, மாநிலத் தலைவராக இருந்த முருகனுக்கு எதிராக சுமதி வெங்கடேசன் என்கிற பா.ஜ.க. பிரமுகர், புகார் கொடுத்திருக் கிறார். வீடியோவும் உள்ளது. அதை அவர்கள் வெளியிட்டால் என்ன செய்வது என பா.ஜ.க. தலைவர்களே அந்தப் போராட்ட முயற்சிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

முருகனுக்கெதிரான புகார்களுக்கு காரணம் கே.டி.ராகவன் என முருகனுக்கு நெருக்கமான வழக்கறிஞர் டென்ஷனடைந்தார். முருகனும் அவரும் ஒன்றாக தொழில் பார்த்தவர்கள் என்பதால்தான். அவர் கட்சியில் கொண்டு வந்து சேர்த்த வழக்கறிஞர்கள், ரௌடிகள் ஆகியோருக்கு கட்சியில் பதவி தந்தார் முருகன். அந்த வழக்கறிஞர், தனக்கு நெருக்கமான வழக்கறிஞர்களை கே.டி.ராகவனுக்கு எதிராக களமிறக்கினார்.

kt

Advertisment

காரணம், அந்த வழக்கறிஞர்களில் மேலும் பலருக்கு பா.ஜ.க. வழக்கறிஞர் அணியில் எந்தப் பதவியும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டவர் கே.டி.ராகவன். செங்கல்பட்டு மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவராக இருந்த செங்கல்பட்டு பலராமன் என்பவர் மீதும் கமலாலயத் திற்கு புகார் கொடுத்த பெண்களும் உண்டு. இந்த பலராமன், செம்பாக்கம் வேதா என்பவருக்கு அரசியல் ரீதியான எதிரி. கே.டி. ராகவனின் விசுவாசியான பலராமன், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில வழக் கறிஞர்களுக்கு எதிராகவும் செயல்பட்டார்.

முருகனுக்கு ஆதரவாக, கே.டி.ராகவனை ஏதாவது புகாரில் சிக்க வைக்க வேண்டும் என திட்டம் தீட்டிய வழக்கறிஞர் சங்க தலைவர், செங்கல்பட்டு வழக்கறிஞர்களை ஏவினார். அவர்களுக்கு செம்பாக்கம் வேதாவும், கே.டி.ராகவன் மீது புகார் செய்துகொண்டு ஆதாரங்களை வைத்திருந்த யமுனா நதியை பெயராகக் கொண்டவரும் சிக்கினார்கள். செம்பாக்கம் வேதாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் மதன் மூலம் அவரது யுடியூப் சேனலில் கே.டி.ராகவன் ஆபாச காட்சிப் பொருளானார்'' என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள்.

kt

கோவிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட சாமி சிலையின் முன்பு உடலுறவு காட்சிகளை அரங்கேற்றி அதை வீடியோவாக பதிவு செய்த அர்ச்சகர் தேவராஜ ஐயர் பாணியில் பூஜையறையில் சாமி படங்களின் முன்பு அதே பாணியில் ஆபாச சேட்டையை அரங்கேற்றிய கே.டி.ராகவனின் லீலைகள் தெய்வ பக்தியுள்ள அனைவரையும் அதிரவைத்தது.

இந்த வீடியோ, மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தெரிந்துதான் வெளி வந்திருக்கிறது. பா.ஜ.க.வின் உயர்சாதி தலைவர்களுக்கு எதிராக அண்ணாமலை செயல்பட்டு கட்சியையே கேவலப்படுத்துகிறார். தமிழக பா.ஜ.க. சீனியர்கள் குறித்து இதே போக்கில் அண்ணாமலை செயல்பட்டு, இன்னும் பல வீடியோக்கள் வெளியாக அனுமதித்தால், அது கட்சிக்கு மட்டுமல்ல, மோடி தலைமையிலான அமைச்சரவைக்கே அசிங்கமல்லவா? என மாநில பா.ஜ.க.விலிருந்து எழுந்த குரல்களால் டெல்லி பா.ஜ.க.வின் மேலிடம் டென்ஷனானது.

கட்சியை வளர்க்கச் சொன்னால் ஆளாளுக்கு ஆபாச வீடியோ வெளியிடுவோம் என்கிறீர்களே? என கே.டி.ராகவன் வீடியோவுக்கு அனுமதி கொடுத்த அண்ணா மலையை உருவாக்கிய குருவான கர்நாடக பா.ஜ.க. பிரமுகரும் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான பி.எல்.சந்தோஷ், "எனக்கு தமிழ் கற்றுக்கொடுக்க வந்த உன்னை தமிழக பா.ஜ.க. தலைவராக்கியது, கட்சியை அசிங்கப்படுத்தத்தானா? உடனே கே.டி.ராகவனுக்கு ஆதரவாக அவரது சேவை களைப் பாராட்டி அறிக்கை கொடு. ராகவனின் ராஜினாமாவை ஏற்றுக்கொள். வீடியோ வெளியிட்டவர்களை கட்சியை விட்டு நீக்கு'' என போட்ட உத்தரவு, அப்படியே அமலானது. மலர்க்கொடி என்கிற திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவர் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார் அண்ணாமலை. மலர்க்கொடி யார் என கூகுளில் தேடி மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள் பா.ஜ.க. தலைவர்கள் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.

அண்ணாமலை பதவிக்கு வந்தவுடன், முருகனால் திருவண் ணாமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாள ராக நியமிக்கப் பட்டவரை கட்சியி லிருந்து நீக்கினார். முருகனால் சீட் கொடுக் கப்பட்டு பாலியல் புகாருக்குள்ளான விழுப் புரம் திருக்கோவிலூர் கலிவரதன் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை பரிந்துரை செய்தார்.

அதனால், ஒரே நேரத்தில் அண்ணாமலை மற்றும் கே.டி.ராகவனுக்கு எதிராக ஏவப்பட்ட அம்புதான் இந்த வீடியோ. இதற்குப் போட்டியாக முருகன் மற்றும் மற்ற தலைவர்களைக் குறி வைத்து பீதியான செய்திகளைக் கிளப்புகிறார்கள் கோஷ்டி அரசியலில் சிக்கியுள்ள பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள்.

மொத்தக் கட்சியும் ஆபாசமாகிவிடப் போகிறது என அணைகட்டும் முயற்சியில் இறங்கி யுள்ளது தமிழக பா.ஜ.க. இந்த அணைகட்டும் முயற்சியில் கட்சித் தலைவர் களுக்கு எதிராக புகார் செய்யும் நபர்களை முதற்கட்டமாக சமாதானப்படுத்தி யுள்ளனர்.

இந்த வீடியோ வெளி யீட்டிற்கு துணைநின்றதாக சொல்லப்படும் செம்பாக்கம் வேதா, இல.கணேசன் மணிப்பூரில் கவர்னராக பதவியேற்கும் விழாவிற்காக இம்பாலில் இருந்தார். "எனக்கும் இந்த வீடியோ வெளியீட்டிற்கும் தொடர்பு உள்ளதாக வரும் செய்திகளை நான் மறுக்கிறேன். வெளியீட்டில் தொடர்புடையதாக சொல்லப்படும் வழக்கறிஞர்கள் எனக்குத் தெரிந்தவர்கள். ஆனால் எனக்கும் இந்த வீடியோவிற்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்றார்.

jt

பா.ஜ.கவின் பழைய மாநிலத் தலைமை மீது நேரடியாகப் பெயர் குறிப்பிடப்படாத செக்ஸ் புகார், ஒரு நாளேட்டில் வெளிவர காரணமாக இருந்தவர் என சொல் லப்படும் சுமதி வெங்க டேசன், இப்போது அதற்கு விளக்கமளித்து, "நாங்கள் ஏ.பி.வி.பி. எனப்படும் மாணவர் இயக்கத்திலிருந்து ஒன்றாக பயணிப்பவர் கள். அவர் மீது நான் எந்த செக்ஸ் புகாரும் சொல்லவில்லை. அவர் எனது சகோதரர்'' என்றார்.

பா.ஜ.க.வின் மகளிரணி மாநிலத் தலைவியான மீனாட்சி, "பா.ஜ.க. பெண்களை பாரத மாதாவாக நினைத்து வணங்கும் கட்சி'' என்கிறார்.

கே.டி.ராகவன், சென்னை ஃபோரம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மையப்படுத்தி அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்துவார். அந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அதில் கலந்து கொள்ளும் ஒருசில பெண்களிடம் ஆபாச கூத்துகளை அரங்கேற்றுவார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அத்துடன், பழைய பா.ஜ.க தலைவர், துடுக்காக ட்வீட் செய்யும் திரைப்பிரபலம் என கட்சிக்குள் நிறைய கதைகள் உண்டு என்கிற பா.ஜ.க.வினர், பா.ஜ.க. என்றால் பாரதிய ஜல்சா கட்சி என்று சமூக வலைத்தளங் களில் மானத்தை வாங்குகிறார்கள். எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் பர்சனல் வீக்னெஸ்ஸை வைத்து அரசியல் செய்த கட்சிக்கே இப்போது இந்த நிலைமை என்கிறார்கள்.

_____________________________

அண்ணாமலை கணக்கு!

தேர்தல் நேரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவராக முருகன் இருந்தபோதும், தேர்தல் நிதியைக் கையாளும் பொறுப்பை அண்ணாமலைதான் பார்த்துக் கொண்டி ருந்தார். அவரிடம், கோவை ஈஷா மைய ஜக்கிவாசுதேவ் வழியாக 100 சியும், ஒன்றிய பா.ஜ.க. மற்றும் தமிழக பா.ஜ.க.வின் மூலம் 100 "சி'யும் கொடுக்கப்பட்டிருந்ததாம். தேர்தல் செலவு தொடர்பான கணக்கை அண்ணாமலையிடம் கட்சியின் நிர்வாகச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கேட்டுள்ளார். அண்ணாமலையோ, 15 "சி'க்கு மேல் செலவுக் கணக்கை சொல்ல முடியாமல் விழிக்கிறாராம். 200 "சி'யில் 15 போக, மீதி எங்கே என டெல்லித் தலைமையின் குரலில் வேகம் தெரிவதால், அண்ணாமலையும் நடவடிக்கை பீதியில் உள்ளாராம்.