Advertisment

தமிழ்த் தொண்டாற்றிய க.ப.அறவாணன்!

aravanan

 

மிழறிஞர் க.ப.அறவாணனின் 50 ஆண்டுகாலத் தமிழ்த் தொண்டுகள் குறித்த விவரங்களை தொகுத்து, அவரது துணைவியார் தாயம்மாள் அறவாணன் "க.ப.அறவாணரின் 50 ஆண்டு தமிழ்த் தொண்டு' என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளார். தாயம்மாள் அறவாணன், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரிய ராகப் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். க.ப.அறவாணனைப் போலவே இவரும் எழுத்துத்துறை யில் ஆர்வத்தோடு இயங்கி, 25 நூல்கள் வரை எழுதியிருக்கிறார்.

Advertisment

'க.ப. அறவாணரின் 50 ஆண்டுத் தமிழ்த் தொண்டு' நூல் முழுக்க, 1967ஆம் ஆண்டுமுதல் 2017ஆம்

 

மிழறிஞர் க.ப.அறவாணனின் 50 ஆண்டுகாலத் தமிழ்த் தொண்டுகள் குறித்த விவரங்களை தொகுத்து, அவரது துணைவியார் தாயம்மாள் அறவாணன் "க.ப.அறவாணரின் 50 ஆண்டு தமிழ்த் தொண்டு' என்ற ஒரு நூலை வெளியிட்டுள்ளார். தாயம்மாள் அறவாணன், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரிய ராகப் பணியாற்றி, பணி ஓய்வு பெற்றவர். க.ப.அறவாணனைப் போலவே இவரும் எழுத்துத்துறை யில் ஆர்வத்தோடு இயங்கி, 25 நூல்கள் வரை எழுதியிருக்கிறார்.

Advertisment

'க.ப. அறவாணரின் 50 ஆண்டுத் தமிழ்த் தொண்டு' நூல் முழுக்க, 1967ஆம் ஆண்டுமுதல் 2017ஆம் ஆண்டுவரை தமிழறிஞர் க.ப.அற வாணன் எழுதிய தேசம், தமிழ் மொழி, இலக் கியம், தமிழ்நாடு, கல்வி தொடர்பான கட்டுரை களின் விவரங்கள், பத்திரிகைகளில் வெளியான க.ப.அறவாணனின் கட்டுரைகள், சென்னை வானொலிக்காக எழுதிய கட்டுரைகள் மற்றும் க.ப.அறவாணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியது குறித்த விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. க.ப.அறவாணனின் 50 ஆண்டுகால தமிழ்த் தொண் டுக்கான ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், கடலங்குடியில் 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் தமிழறிஞர் க.ப.அறவாணன் பிறந்தார். அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் புலவர், பி.ஓ.எல். பட்டங்களைப் பெற்றார். அங்கு படித்தபோது மாணவர் செயலராகப் பொறுப்பேற்றவர், இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். கேரள பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1967ஆம் ஆண்டு, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில், நேர்முகத்தேர்வின்றியே விரிவுரை யாளராகத் தேர்வுபெற்றார். பின்னர், திருநெல் வேலி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றியவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகவும், லயோலா கல்லூரி தமிழ்த்துறை தலைவராகவும் பணி யாற்றினார். மனோன்மணியம் சுந்தரனார் பல் கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றினார். அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளை வாயிலாக ஆண்டுதோறும் விருது வழங்கினார்.

க.ப.அறவாணன் லயோலா கல்லூரியில் பணியாற்றியபோது, தட்டச்சு, இதழியல், அச்சுக்கலை, திரைக்கலை போன்றவற்றை பாடமாக்குவதில் பங்களிப்பு செய்தார். செனகல் அதிபர் செங்கோரின் அழைப்பை ஏற்று தக்கார் பல்கலைக்கழகத்தில் சிறிதுகாலம் பணியாற்றினார். தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார். 1986ல் சிறந்த பேராசிரியர் களுக்கான விருதும் பெற்றுள்ளார். தமிழறிஞர் க.ப.அறவாணன், நூற்றுக்கணக்கான கட்டுரை களையும், நூல்களையும் எழுதியிருக்கிறார். 700 ஆண்டுகளில் நன்னூல், அமுதசாகரம், இந்திர காளியம் உள்ளிட்ட இலக்கண நூல்களையும், சைனரின் தமிழ் இலக்கிய நன்கொடை, தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?, தமிழர் மேல் நடந்த பண்பாட்டுப் படையெடுப்புகள், தமிழர்தம் மறுபக்கம், தொல்காப்பியக் களஞ்சியம், திருக் குறள் அறநூல் களஞ்சியம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசு, க.ப.அற வாணனின் நூல்களை கடந்த ஆண்டு அரசுடைமை யாக்கியது குறிப்பிடத்தக்கது.           

-ஆதவன்

nkn200825
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe