விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகிலுள்ள கூமாப்பட்டி கிராமம், திடீரென்று கூமாப்பட்டி தீவு... ந்ர்ர்ம்ஹல்ஹற்ற்ண் ண்ள்ப்ஹய்க் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியது. காரணம் என்னவென்று பார்த்தால், கூமாப்பட்டி அருகி லுள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி என்ற இளைஞர், தொடர்ச்சியாக இன்ஸ்டா கிராமில் கூமாப்பட்டியின் பசுமை, தண்ணீர் வளம், பனை மரங்கள், நுங்கு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து பதிவிட்டு வந்திருக்கிறார்.

அப்படி பதிவிட்ட வீடியோக்களில், கூமாப்பட்டி சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகள், நீரோடைகள், பிளவக்கல் அணை என ஒவ்வொரு நீர்நிலைகளிலும் குளித்தபடி, "ஏங்ங்ங்க... கூமாப்பட்டிக்கு வாங்க... உங்களுக்கு மன அழுத்தமா? இந்த தண்ணிய குடிச்சா மன அழுத்தம் தீரும்... காதல் பிரச்சனையா? இந்த தண்ணிய குடிச்சா பிரச்சனை தீரும்'' என்றெல்லாம் இஷ்டத்துக்கு புகழ்ச்சியாக வீடியோக்களில் பேசியிருக்கிறார். 

அந்த வீடியோக்களில், பசுமையான நிலப்பகுதி, நீரோடைகள், அருவிகள் என அவர் காட்டியிருப்பது பொதுமக்களை வெகுவாகக் கவர்வதாக இருந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு ஊர்களுக்கு சென்று வீடியோக்கள் வெளியிடும் யூட்யூப் பிரபலங்களின் கண்களில் இந்த வீடியோக் கள் பட, ஊட்டி, கொடைக்கானல்னு போறதுக்கு பதிலா கூமாப் பட்டிக்கு போகலாம் போலயே என நினைத்து, கூமாப் பட்டியை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்.

Advertisment

அந்த இளைஞரின் வீடியோக்களால், கூமாப்பட்டி என்ற கிராமம் பிரபலமாகியிருக்கிறது என்றாலும், இதுவே பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. உண்மையில், கூமாப்பட்டி கிராமத்தில் உள்ளூர் மக்களுக்கான அடிப்படை வசதிகளே குறைபாடாகத்தான் இருக்கிறது. வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம் பகுதிகளில்,  குளிப்பதற்கேற்ற சுற்றுலாப் பகுதிகள் இருந்தபோதும், மழையில்லாமல் வறண்டிருக் கின்றன. இந்த சூழலில், திடீரென கோவை, திண்டுக்கல், திருச்சியெனப் பல ஊர்களிலிருந்து கூமாப்பட்டியில் சுற்றுலாவாசிகள் குவிய, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இதில், வீடியோவில் காட்டப்பட்ட பிளவக் கல் அணை, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக வனத்துறையின் கட்டுப்பாட்டில், பொதுமக்களுக்கு அனுமதி தடைசெய்யப்பட்டு, பராமரிப்பில்லாமல் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், அந்த இன்ஸ்டா இளைஞர் எப்படி அங்கே குளித்து வீடியோ போட்டார் என்ற சர்ச்சை எழ, அணைக் கட்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையும் இந்த வீடியோக் களை நம்பி கூமாப்பட்டிக்கு வந்து ஏமாற வேண் டாமென்று அறிவித்துள்ளது! சமூகவலைத்தள பிரபலங்கள் சொல்வதை அப்படியே நம்புவது தவறு என்பதற்கு இந்த விவகாரமே சான்றாக அமைந்துள்ளது!