"நட்சத்திரம் நகர்கிறது'
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "சார்பட்டா பரம்பரை'. "கே 9 ஸ்டூடியோஸ்' மற்றும் "நீலம் புரொடக்ஷன்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி, முழுக்க முழுக்க காதல் பின்னணியில் தன்னுடைய அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு "நட்சத்திரம் நகர்கிறது' என பெயரிடப்பட்டுள்ளதாக பா.ரஞ்சித் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.டி.டி.யின் வளர்ச்சி!
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திர
"நட்சத்திரம் நகர்கிறது'
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "சார்பட்டா பரம்பரை'. "கே 9 ஸ்டூடியோஸ்' மற்றும் "நீலம் புரொடக்ஷன்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. வடசென்னை மக்களிடையே பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து புதிய தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி, முழுக்க முழுக்க காதல் பின்னணியில் தன்னுடைய அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு "நட்சத்திரம் நகர்கிறது' என பெயரிடப்பட்டுள்ளதாக பா.ரஞ்சித் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.டி.டி.யின் வளர்ச்சி!
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திரையரங்குகள் சரியாக இயங்காத நிலையில்... இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது ஓ.டி.டி. தளங்கள். படத்தை எடுத்து முடித்த படக்குழுவினர், தயாரிப்பு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் உள்ளிட்ட முன்னணி தளங்களில் தங்களது படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். இவை அல்லாமல் தற்போது பல புதிய ஓ.டி.டி. தளங்களும் திரைத்துறையினரின் கவனத்தைப் பெறத் துவங்கியுள்ளது. அந்தவகையில் சோனி லிவ் தளத்தில் தங்களது படங்களை வெளியிட தமிழ் திரைப்படத்துறையினர் அண்மைக் காலமாக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
அதன்படி, விக்னேஷ் கார்த்திக் இயக்கத் தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள "திட்டம் இரண்டு' படம் இம்மாத இறுதியில் "சோனி லிவ்'லில் வெளியாக உள்ளது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் நிறைவுபெற்ற நிலையில், "திட்டம் இரண்டு' படக்குழு படத்தை நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியிட முடிவெடுத்து முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், ஜூலை 30-ம் தேதி "திட்டம் இரண்டு' படத்தை வெளியிட சோனி லிவ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சோனி லிவ் இத்தளத்தில் வெளியான "வாழ்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்... "நரகா சூரன்', "கடைசி விவசாயி', "திட்டம் இரண்டு' என அடுத்தடுத்து பல படக்குழுவினர் சோனி லிவ் ஓ.டி.டி. தளத்தில் தங்களது படங்களை வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
கிறிஸ்துமஸ் ரிலீஸ்!
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் "டான்'’திரைப்படம் உருவாகி வரு கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேய னுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர் களாக நடித்துவருவதாகக் கூறப் படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு முழுவீச்சில் நடைபெற்றுவந்த படப்பிடிப்பு, கொரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்டது. இந்நிலையில், தற்போது இப் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிப்பதால், இதற்காக உடல் எடையைக் குறைத்து நடித்துவருகிறார். அடுத்த மாதத்தில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து, வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்து மஸ் பண்டிகை மற்றும் ஆங்கில புத்தாண் டையொட்டி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் "பொன்னியின் செல்வன்'!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் "பொன்னியின் செல்வன்'. எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இதன் படப்பிடிப்பு பணிகள் தடைப் பட்டிருந்த சூழலில், தற்போது மீண்டும் படப்பிடிப் பைத் துவக்கியுள்ளது படக்குழு. புதுச்சேரியில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப் பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், "பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்திற் கான டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.