நாய் சேகரின் ஜோடி!

"24-ம் புலிகேசி'’ பட விவகாரத்தில் இயக்குநர் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சினை பல்வேறு கட்டபஞ்சாயத்துகளுக்குப் பிறகு தீர்க்கப்பட்டுள்ள நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸுக்கு விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறார் வைகைப்புயல் வடிவேலு. நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்கவைக்க முயற்சித்து வருகிறார்களாம். இதில் முதற்கட்டமாக லைகா நிறுவனத்துடன் இணைந்து வடிவேலு அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த ஐந்தில் ஒன்றாக, சுராஜ் இயக்கத்தில் ‘"நாய் சேகர்'’ என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளன.

cc

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடிப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் பரவிய நிலையில், வடிவேலுவின் ரீஎன்ட்ரி படமாக அமையவுள்ள கதாநாயகி கதாபாத்திரம் இல்லை என்றும், வேறொரு முக்கிய கதாபாத்திரத்தில்தான் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisment

இப்பதான் "நேரம்' வந்திருக்கு!

தமிழ் மற்றும் மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான "நேரம்'’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன்.

nn

Advertisment

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுமார் ஆறு ஆண்டுகாலம் படம் எதுவும் இயக்காமல் இருந்த இவர், பிரித்விராஜை வைத்து ஆக்ஷன் திரில்லர் படம் ஒன்றை, இயக்குவற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், "கோல்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. "பாட்டு' படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாராவே இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். பிரித்விராஜ், நயன்தாரா எனத் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நட்சத்திரங்களை வைத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் இப்படம், தமிழ் ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் அலைக்கு முன்பாக!

அமித் ஷர்மா இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படம் ‘"பதாய் ஹோ'. இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்தியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கோலிவுட், டோலிவுட் என அனைத்து "வுட்'களிலும் கடும் போட்டி நிலவியது. முடிவில், ‘"பதாய் ஹோ'’படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீ-மேக் உரிமையைப் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் கைப்பற்றினார்.

cc

அதனையடுத்து, இந்தத் படத்தினை தமிழில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நாயகனாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கான நடிகர், நடிகை தேர்வில் கவனம் செலுத்தி வந்த படக்குழு, சானியா மல்கோத்ரா நடித்த நாயகி வேடத்தில் அபர்ணா பாலமுரளி நடிப்பதாக அறிவித்ததோடு, ஷூட்டிங்கையும் தற்போது தொடங்கி யுள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் துரிதமாகப் படப்பிடிப்பை நிறைவுசெய்யும் நோக்கோடு படக்குழு இம்முடிவை எடுத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

பீஸ்ட் அப்பேட்!

cinema

"மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்கிவரும் "பீஸ்ட்' படத்தில் நடிகர் விஜய் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். "முகமூடி' படத்திற்குப்பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த பூஜாவுக்கு பூஸ்ட்டாக வந்துள்ளது 'பீஸ்ட்' பட வாய்ப்பு.

நவம்பர் இறுதியில் "பீஸ்ட்' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, பொங்கல் வெளியீட்டைக் குறிவைத்துள்ளது படக்குழு.

-கிருபாகரன்