தமிழ் சினிமா உலகில் சின்ன நடிகர்களின் சில படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளாவது நடந்து கொண்டிருந்தது. சென்னையில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமலுக்கு வந்ததால், அதுவும் நின்றுபோச்சு. அதனால், தங்களின் பெரியதிரை சார்ந்த பழைய அனுபவங்களையும் நினைவுகளையும் கிளறிவிட்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஜுஜுபி மேட்டர். "நான் பண்றேன் பாரு தில்லாலங்கடி மேட்டர்' என்ற முடிவுடன், மூணாவது கல்யாணத்தை "தில்'லாக பண்ணியுள்ளார் சீனியர் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. நடிகர் ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் 2000-ல் திருமணமாகி 2005-ல் டைவர்ஸானது. அதன்பின் ராஜன் ஆனந்த் என்பவரை 2007ல் திருமணம் பண்ணி, 2010ல் டைவர்ஸ் பண்ணினார் வனிதா.
மேற்படி இரு திருமண உறவுகளின் மூலம் ஒரு ஆண், இரண்டு பெண் வாரிசுகள் வனிதாவுக்கு உண்டு. பிக்பாஸ்-3 சீசனில் வனிதா கலந்துகொண்ட போது, இந்த விவகாரம் தொடர்பாக பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே சென்று வனிதாவிடம் விசாரித்தது ஆந்திரா போலீஸ். அதன்பின், தான் வசிக்கும் வீட்டை காலி பண்ணச் சொன்னதற்காக, தனது அப்பா விஜயகுமாரையே மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக அடிக்கப் பாய்ந்தார் வனிதா.
வனிதாவின் இந்தத் ‘துணிவு’ தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவருக்கு (என்ன படம் தயாரிச்சாருன்னு அவருக்கு மட்டுந்தான் தெரியும்) பிடித்துவிட்டதோ என்னவோ, வனிதாவை விரும்ப ஆரம்பித்து, கடந்த ஜூன் 27ந்தேதி கிறிஸ்தவ முறைப்படி திருமணமும் செய்து கொண்டார். இங்கதான் ட்விஸ்ட்டே.
வனிதாவை திருமணம் செய்யப்போகும் தகவலை பீட்டர் பாலே ஒரு வாரத்திற்கு முன்பு கசியவிட்டு ஒருவரின் பல்ஸ் பார்த்தார். அந்த ஒருவர் சாட்சாத் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன்தான். ""எனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாட்டால் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். இன்றும் எனக்கு சட்டப்பூர்வ விவகாரத்து கொடுக்காமல் வனிதாவைத் திருமணம் செய்யப்போகிறார் எனது கணவர். எனவே இந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துங்கள்'' என சென்னை வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார் எலிசபெத். ஆனாலும், வனிதாவும் பீட்டரும் திருமணம் செய்து கொண்டார்கள். கொதிப்பான எலிசபெத், பீட்டர் மீது ஆக்ஷன் எடுக்கும்படி சென்னை கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்.
"நடிகைகளை அலறவைக்கும் அரசியல் - மாஃபியா! திணறும் திரையுலகம்!' என்ற தலைப்பில், கடந்த ஜூன் 27 - 30 இதழில் மூன்று பக்க செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், பகீர் சம்பவம் ஒன்று கடந்த வாரம் நடந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணா. மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் குறிப்பிட்டுச் சொல்லும் நடிகையாக இருப்பவர். கைவசம் இருந்த ஒன்றிரண்டு படங்களும் கொரோனாவால் முடங்கிப் போனதால், கொச்சியில் உள்ள தனது வீட்டில் தாயாருடன் ஓய்வில் இருந்துள்ளார்.
கேரளாவில் ஓரளவு சகஜ நிலை திரும்பியுள்ளதை தங்களுக்கு சகஜமாக்கியுள்ளது ஒரு திருகுஜால கும்பல். துபாயில் ட்வெண்டி பெட்ரோல் கிணறு இருக்கு என்ற ரேஞ்சுக்கு பூர்ணாவின் அம்மாவிடம் பிட்டைப் போட்டுள்ளனர். அந்தப் பெட்ரோல் கிணறு ஓனர் தனது குடும்பத்துடன் (?!) பூர்ணாவை பெண் பார்க்க வந்துள்ளார். பெண் பார்த்துவிட்டு சென்றபின், செல்போனில் அந்த ஓனர் பேசிய தொனியே மிரட்டலாக இருந்துள்ளது. இதனால் உஷாரான பூர்ணா, கொச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துவிட்டார்.
போலீஸ் விரித்த வலையில் 8 பேர் சிக்கிவிட்டனர். 4 பேர் தப்பிவிட்டனர். மாட்டிய 8 பேரையும் போட்ட போடில் பூர்ணாவைக் கடத்தி பணம் பறிக்கும் திட்டத் தைச் சொல்லி போலீசையே பகீரடைய வைத்திருக்கிறார் கள். அந்தக் கும்பலில் மலையாள நடிகர் தர்மஜனும், புரொடக்ஷன் மேனேஜர் ஷாஜியும் இருந்ததுதான் ஹைவோல்டேஜ் ஷாக்.
இது தில்லுமுல்லு மேட்டர். எஸ்.பி.எஸ். ஏ.வி. இண்டர்நேஷனல் என்ற பேனரில் தமிழ்ப் படங்களை வெளிநாடுகளில் மட்டும் வெளியிடும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் மலேசியா பாண்டியன் என்பவர். 100க்கும் மேற்பட்ட படங்களை ரிலீஸ் பண்ணியிருக்கும் இவர், வரலட்சுமி நடித்த "ராஜபார்வை' படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை 20 லட்சம் பேசி 10 லட்சம் அட்வான்ஸ் தொகையை படத்தின் தயாரிப்பாளர் கே.என்.பாபுரெட்டியிடம் கொடுத்துள்ளார்.
2019 ஜூன் மாதம் படத்தை முடித்துத் தருவதாகச் சொல்லி, 09-03-2019ல் பணம் வாங்கியுள்ளார் பாபு ரெட்டி. ஆனால் படம் இன்னும் முடிந்தபாடில்லை. பார்த்தார் பாபுரெட்டி. இந்த கொரோனா ஊரடங்கைப் பயன் படுத்தி, அதே "ராஜபார்வை'யின் வெளிநாட்டு விநியோக உரிமையை விஜயராகேஷ் ரங்கப்பா என்பவரிடம் 17 லட் சத்துக்குப் பேசி, 5 லட்சம் அட்வான்சும் வாங்கிவிட்டா ராம். இத்தோடும் விடாமல் படத்தை ஓடிடியில் ரிலீஸ் பண்ணவும் ஒரு தொகையை பேசிவிட்டாராம் ரெட்டி.
ரெட்டியின் இந்தத் தில்லுமுல்லுவால் அதிர்ந்து போன மலேசியா பாண்டியன், தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கம் இவற்றில் புகார் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்.
-ஈ.பாபரமேஷ்வரன்