Advertisment

கோலிவுட் ஏரியா! அடங்காத மீராமிதுன்! அட்வைஸ் தரும் ஐ.பி.எஸ்.!

mm

சென்னையில் இருக்கும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஸ்ட்ராங்கான சப்போர்ட் மற்றும் பல ஆண் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அன்பான அரவணைப்பு, எல்லாவித வில்லங்க வழக்குகளையும் வலியப்போய் கையில் எடுத்து காசு பார்க்கும் ஏடாகூட வக்கீல் ஒருவர் இப்படி பலதரப்பட்டவர்களின் பலத்த ஆதரவு இருப்பதால், யாருக்கும் அடங்காமல் தனது ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் மாடலிங் நடிகை மீராமிதுன்.

Advertisment

meeramuthin

கல்யாணமானதையும் விவாகரத்தான தையும் மறைத்து அழகிப் போட்டியில் முதல் இடம் பிடித்து பட்டத்தையும் வென்றார் மீராமிதுன். இதை லேட்டாகத் தெரிந்துகொண்ட போட்டி அமைப்பாளர் மைக்கேல் ஜோ என்பவர், மீராமிதுனிடம் இருந்து அழகிப் பட்டத்தைப் பறித்து நடிகை சனம் ஷெட்டிக்கு கொடுத்தார்.

Advertisment

இதனால் கடுப்பான மீராமிதுன், தனியாக அழகிப் போட்டி நடத்துவதாகச் சொல்லி, இளம் பெண்களிடம் வசூல் வேட்டை நடத்தினார். இதற்கும் ஆப்பு வைத்தார் மைக்கேல்

சென்னையில் இருக்கும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஸ்ட்ராங்கான சப்போர்ட் மற்றும் பல ஆண் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அன்பான அரவணைப்பு, எல்லாவித வில்லங்க வழக்குகளையும் வலியப்போய் கையில் எடுத்து காசு பார்க்கும் ஏடாகூட வக்கீல் ஒருவர் இப்படி பலதரப்பட்டவர்களின் பலத்த ஆதரவு இருப்பதால், யாருக்கும் அடங்காமல் தனது ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் மாடலிங் நடிகை மீராமிதுன்.

Advertisment

meeramuthin

கல்யாணமானதையும் விவாகரத்தான தையும் மறைத்து அழகிப் போட்டியில் முதல் இடம் பிடித்து பட்டத்தையும் வென்றார் மீராமிதுன். இதை லேட்டாகத் தெரிந்துகொண்ட போட்டி அமைப்பாளர் மைக்கேல் ஜோ என்பவர், மீராமிதுனிடம் இருந்து அழகிப் பட்டத்தைப் பறித்து நடிகை சனம் ஷெட்டிக்கு கொடுத்தார்.

Advertisment

இதனால் கடுப்பான மீராமிதுன், தனியாக அழகிப் போட்டி நடத்துவதாகச் சொல்லி, இளம் பெண்களிடம் வசூல் வேட்டை நடத்தினார். இதற்கும் ஆப்பு வைத்தார் மைக்கேல் ஜோ.

"நீ அப்படி வர்றியா இப்ப என் ஆட்டத்தப் பாரு'’ என பெண் ஐ.பி.எஸ்.ஸின் ஆதரவுடன் கோதாவில் குதித்தார். கூடவே ஏடாகூட வக்கீலும் களமிறங்கினார். இதனால் கதிகலங்கிப் போன மைக்கேல் ஜோ, பல மாதங்கள் தலைமறைவாகிவிட்டார்.

“"இந்திய அரசால் நியமிக்கப்பட்ட, லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையின் தமிழ்நாடு டைரக்டர் நான்' எனச் சொல்லி, தமிழ்ச் செல்வி என்ற பெயரில் டுபாக்கூர் அரசாணையையும் அடையாள அட்டையையும் ரிலீஸ் செய்தார். சில மாதங்களிலேயே அந்த டைரக்டர்(?!) பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகச் சொன்னார்கள்.

ss

வெளியில் இம்சை அதிகமானதால் வலியப்போய் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் சில நாட்கள் இருந்து டைரக்டர் சேரனின் மீது புழுதிவாரி இறைத்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி ஷனரையும், தமிழக போலீஸையும், முதல்வர் எடப்பாடியையும் தாறுமாறாகப் பேசினார். கமிஷனர் அலுவலக போலீஸ்காரர்கள் இருவரிடம் மீராமிதுன்மீது புகார் வாங்கி வழக்கும் பதிவு செய்தது மாநகர போலீஸ். இதைத் தெரிந்துகொண்ட மீராமிதுன், மும்பைக்கு எஸ்கேப்பாகிவிட்டார்.

சில மாதங்கள் அடங்கியிருந்த மீராமிதுனிடம் ‘ரஜினி, விஜய், சூர்யா என பலரையும் லாக்டவுன் நேரத்தில் வம்புக்கு இழுத்து, லம்ப்பாக சில லட்சங்களைத் தட்டலாம்’ என அந்தப் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி யோசனை தர, சகலரையும் சகட்டுமேனிக்கு வசை பாடினார். "விஜய்யின் லண்டன் ரகசியமும் தெரியும், சூர்யாவின் மும்பை ரகசியமும் தெரியும்' என "தில்'லாக பொளந்து கட்டினார். இந்த நிலையில்தான்… மீராமிதுன் தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக நடிகை சனம் ஷெட்டி கடந்தவாரம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்ற புகாரை கவர்ச்சி நடிகை ஷாலு என்பவரும் கடந்த 14-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் கொடுத் துள்ளார். மீராமிதுன் இருக்கும் தைரியத்தாலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில், தன் கைவசம் இருந்த குயின் நடிகையால் குளிர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் சப்போர்ட்டாலும் நிதி நிறுவன மோசடியில் சிக்கிய தயாரிப்பாளர், இப்போதும் போலீசுக்கு தண்ணி (கொரோனா) காட்டிக்கொண்டிருக்கிறார்.

இப்பதான் என்ட்ரியாகிறார் நடிகை கஸ்தூரி.

ff

"கனெக்ட் வித் கஸ்தூரி' (Konnect with Kasthuri) யூ டியூப் சேனலில் ரசிகர் ஒருவர், வீடியோகாலில் "ஹலோ மேடம் எப்படியிருக்கீங்க? தமிழ்நாட்ல ஹாட் மேட்டர் ஓடிக்கிட்டிருக்கு, அதப்பத்தி என்ன சொல்றீங்க?' என கேட்கிறார்.

""நான் இப்ப ஹைதராபாத்ல இருக்கேன். காலைல போறேன், சாயங்காலம் வர்றேன். மூணாறுல நிலச்சரிவு நியூஸ் பார்த்தேன். தமிழ்நாட்ல அதவிட ஹாட்மேட்டர் இருக்கா?'' -கஸ்தூரி.

""அதான் மேடம், ஒங்க ‘பிக்பாஸ்’ பிரண்டு மீராமிதுன், வனிதா விஜயகுமார் இவங்களைப் பத்தி?'' என அந்த ரசிகர் கேட்டதும், கச்சேரியை ஆரம்பிக்கிறார் கஸ்தூரி.

“""அய்யோ... அவர்களையெல்லாம் என்னோட பிரண்ட்ஸ்னு சொல்லக்கூடாது. அப்புறம் அந்த வார்த்தைக்கே கேவலம். இந்த மீராமிதுன் இப்ப அடிக்கிற ஆபாசக் கூத்து இருக்கே, பெருங்கொடுமை. இனிமே மன்னிப்பு கேட்குறதுக்குக்கூட மீராமிதுன் வாயைத் திறக்காம இருக்கிறதுதான் நல்லது.

பிக்பாஸ்’ வீட்டுக்குள்ள மீரா மிதுனும், வனிதா விஜயகுமாரும் அடிச்ச கூத்தை வெளியில சொன்னா வெட்கக்கேடு. ஒருநாள் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கும்போது, ஓவர் தள்ளாட்டத்துல வந்த மீரா, திடீர்னு "ஆ ஊ'ன்னு கத்திக்கிட்டு டிரஸ் ஸெல்லாத்தையும் அவுத்துப்போட ஆரம்பிச்சதும் நாங்கெல்லாம் பதறிட்டோம். இதையும் இதைவிட இன்னும் பல அருவருக்கத்தக்க இரவுக் காட்சிகளையும் ஷூட்பண்ணி வச்சிருக்கு விஜய் டி.வி. மொத்தத்தில் விஜய் டி.வி.யின் ‘பிக்பாஸ்’ புரோக்ராம்ங்கிறது கொரோனா வைரசை விட பயங்கரமானது. நல்லவேளை இந்த வருஷம் பிக்பாஸ் இல்லாததால தமிழர்கள் தப்பித்தார்கள்'' என யூடியூப் சேனலில் அதிர்வேட்டு வெடித்தார் கஸ்தூரி.

இனி மீராமிதுனின் டார்கெட்டு கஸ்தூரியாக இருக்கலாம்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

nkn220820
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe