கொள்ளிடம் வடகரை சாலை! -குமுறும் விவசாயிகள்!

ss

கொள்ளிடம் ஆற்றுக்கு வடகரை, தென்கரையென இரண்டு கரைகள் உள்ளன. இதில் தென்கரை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந் துள்ளது. வடகரை கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த கரையையொட்டி ஜெயங்கொண்ட பட்டினம், மேம்படுத்திகுடி, வெள்ளூர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வடகரை, கீழணை முதல் சின்னகாரமேடு கிராமம் வரை 60 கி.மீ தூரம் உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள், கொள்ளிடம் தண்ணீரை நம்பியே விவசாயம் செய்துவருகிறார்கள்.

b

கொள்ளிடத

கொள்ளிடத்தின் வடகரையில், கடந்த 2011ஆம் ஆண்டு, 108 கோடியில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க. ஆட்சியில் சீரமைக்கப்படாததால் விவசாயிகளின் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடகரையை வலுப்படுத்தக்கோரி, சிதம்பரம் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகை சோதனைச்சாவடி அருகே ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்கள், குமராட்சி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், கடந்த ஜூன் மாதம் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித் தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மேட்டூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் கீழணைக்கு வந்து, கொள்ளிடம் வழியே வெளியேற்றப்பட்டதால் வடகரை சாலை மேலும் மோசமாகப் பாதிக்கப் பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கரையைச் சரிசெய்ய, ரூ.150 கோடியிலும், தற்காலிகமாகக் கருங்கல் ஜல்லிகளால் சரிசெய்ய ரூ.16 கோடியிலும் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றின் தென்கரை உள்ளிட்ட பல இடங்களைச் சீரமைக்க, ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. தென்கரை பொதுப்பணித்துறை திருச்சி மண்டலத் திற்கு உட்பட்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள வடகரை பொதுப்பணித்துறை சென்னை மண்டலத்திற்கு உட்பட்டது. டெல்டா வில் திட்டம் அறிவிக்கும்போது தென்கரையுடன் அந்த நிதியை முடித்துக் கொள்கிறார்கள். வடகரைக்கு அந்தத் திட்டம் கிடைப்பதில்லை. இதனால் வடகரையை பலப்படுத்துவதில் சிரமம் இருந்து வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டைக் களைய, கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியாக உள்ள காட்டுமன்னார்குடி, சிதம்பரத்தை திருச்சி பொதுப்பணித்துறை மண்டலத்தில் இணைக்க வேண்டும்'' என்றார்.

-காளிதாஸ்

nkn270822
இதையும் படியுங்கள்
Subscribe